MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Petrol diesel price hike: பெட்ரோல் டீசல் விலை அதிரடி உயர்வு..! தேர்தலுக்கு பிறகு முகத்தை மாற்றும் மத்திய அரசு!

Petrol diesel price hike: பெட்ரோல் டீசல் விலை அதிரடி உயர்வு..! தேர்தலுக்கு பிறகு முகத்தை மாற்றும் மத்திய அரசு!

தேர்தல் முடிந்த பிறகு பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்ந்துள்ளது, இது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விலையேற்றம் அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 15 2026, 07:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மக்கள் மீது மீண்டும் எரிபொருள் சுமை!
Image Credit : Getty

மக்கள் மீது மீண்டும் எரிபொருள் சுமை!

தேர்தல் காலத்தில் அமைதியாக இருந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது திடீரென உயர்ந்துள்ளது. “விலையேற்றம் இல்லை” என்று நிம்மதியாக இருந்த மக்களுக்கு இன்று காலை வந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிட்டருக்கு ரூ.3க்கும் மேல் உயர்வு என்ற அறிவிப்பு வெளியானதும், சமூக வலைதளங்களில் மீம்ஸ்களும் கோபக் கருத்துகளும் குவிந்துவிட்டன. “தேர்தல் முடிந்ததும் உண்மையான முகம் தெரிகிறது” என்று பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர்.

டெல்லியில் புதிய விலை என்ன?

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட தகவலின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.97.77 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு முன் ரூ.94.77 ஆக இருந்தது. அதேபோல் டீசல் விலை ரூ.87.67 இலிருந்து ரூ.90.67 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கமே இந்த மாற்றத்துக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
சென்னையிலும் அதிரடி உயர்வு!
Image Credit : freepik-AI

சென்னையிலும் அதிரடி உயர்வு!

தமிழக மக்களுக்கும் இன்று காலை எரிபொருள் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதேபோல் டீசல் விலை ரூ.3.11 அதிகரித்துள்ளது. தினமும் வாகனங்களை பயன்படுத்தும் நடுத்தர மக்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், லாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு இது கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

தேர்தலுக்கு பிறகு ஏன் இந்த அதிரடி?

அரசியல் வட்டாரங்களில் இந்த விலையேற்றம் பெரிய விவாதமாக மாறியுள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களின் கோபத்தை தவிர்க்க விலையை கட்டுப்படுத்தி வைத்த மத்திய அரசு, மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. “மக்கள் ஓட்டு போட்டதும் சுமை மீண்டும் தலையில்” என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.

Related Articles

Related image1
Business Idea: குறைந்த முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்.! பானி பூரி பிசினஸின் உண்மையான லாபக் கணக்கு!
Related image2
Business Idea: உங்க கார் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்... இத செஞ்சா போதும்!
34
அடுத்ததாக என்ன நடக்கும்?
Image Credit : Social Media

அடுத்ததாக என்ன நடக்கும்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது வெறும் வாகன ஓட்டிகளுக்கான பிரச்சினை மட்டும் அல்ல. இதன் தாக்கம் காய்கறி, உணவுப் பொருட்கள், பேருந்து கட்டணம், லாரி போக்குவரத்து என அனைத்திலும் எதிரொலிக்கும். இதனால் அடுத்த சில வாரங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.  

44
பொதுமக்களின் கோபம் வெடிக்குமா?
Image Credit : freepik

பொதுமக்களின் கோபம் வெடிக்குமா?

ஏற்கனவே பணவீக்கம் காரணமாக அவதிப்பட்டு வரும் நடுத்தர மக்கள், இந்த எரிபொருள் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்படலாம். சமூக வலைதளங்களில் “இது துவக்கம் தான்” என்ற கருத்துகளும் பரவி வருகின்றன. வரும் நாட்களில் இந்த விலையேற்றம் அரசியல் ரீதியாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது சாதாரண அறிவிப்பு அல்ல; அது நேரடியாக மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் முடிவாக பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு முன் அமைதியாக இருந்த விலை, தேர்தலுக்கு பிறகு திடீரென உயர்ந்திருப்பது அரசியல் விமர்சனங்களையும் மக்கள் அதிருப்தியையும் அதிகரித்துள்ளது. இனி வரும் நாட்களில் இந்த விலையேற்றம் பொருளாதாரத்திலும் அரசியலிலும் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது தான் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பெட்ரோல்
பெட்ரோல் டீசல் விலை
விலைவாசி
Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Rate Today: காலையிலேயே வந்த குட் நியூஸ்.! தாறுமாறாக குறைந்த தங்கம் விலை.! மேலும் குறையுமா?
Recommended image2
Aadhaar Mobile Number: ஆதாரில் மொபைல் எண்ணை எத்தனை முறை மாற்றலாம்? பலருக்கும் தெரியாத விதி!
Recommended image3
Railway Passengers Alert: ரயிலில் இவர்களுக்கு டிக்கெட் தேவையில்லை.. இலவசமாக பயணிக்கலாம்.. யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
Business Idea: குறைந்த முதலீட்டில் கோடீஸ்வரர் ஆகலாம்.! பானி பூரி பிசினஸின் உண்மையான லாபக் கணக்கு!
Recommended image2
Business Idea: உங்க கார் மூலமா மாசம் லட்சக்கணக்குல சம்பாதிக்கலாம்... இத செஞ்சா போதும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved