பொதுமக்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பெட்ரோல் டீசல் விலை உயர்கிறது! எவ்வளவு தெரியுமா?
Petrol and Diesel Price : பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளது. 2025 ஜனவரி 1 முதல் லிட்டருக்கு ரூ.2 விலை உயரும்.
Fuel Price Hike
நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் என்பதால் தமிழ்நாடு, கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களை விட எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலை குறைவாகவே இருக்கும். இதனால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களை புதுச்சேரியில் வாங்குகின்றனர். அந்த வகையில் பெட்ரோல், டீசலும் தமிழகத்துடன் ஒப்பிடும் போது ஒரு லிட்டருக்கு ரூ.8 ரூபாய் வரை குறைவாக உள்ளது.
Puducherry Government
தமிழகத்தில் தற்போது பெட்ரோல் ஒரு லிட்டர் 101.3 ரூபாய்க்கு, டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 92.61க்கும் விற்பனையாகிறது. புதுவையில் வாட் வரி குறைவாக வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை (வாட்) பெட்ரோலுக்கு 2.44% மற்றும் டீசலுக்கு 2.57% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
Petrol
புதுச்சேரியில் பெட்ரோலுக்கான வாட் வரி 14.54 சதவீதத்திலிருந்து 16.98 சதவீதமாகவும், காரைக்கால் பகுதியில் 14.55 சதவீதத்திலிருந்து 16.99 சதவீதமாகவும், மாஹே பகுதியில் 13.32 சதவீதத்திலிருந்து 15.79% ஆகவும், ஏனாமில் 15,26 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Diesel
அதேபோல் டீசல் மீதான வாட் வரி புதுச்சேரியில் 8.65 சதவீதத்திலிருந்து 11.22 சதவீதமாகவும், காரைக்காலில் 8.66 சதவீதத்திலிருந்து 11.23 சதவீதமாகவும், மாஹேவில் 6.91 சதவீதத்திலிருந்து 9.52 சதவீதமாகவும், ஏனாமில் 8.82 சதவீதத்திலிருந்து 11.48 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Puducherry
தற்போதைய நிலவரப்படி, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் 94.03, மாஹேவில் – ரூ.91.92 , ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில்- ரூ.84.48, காரைக்காலில் - ரூ.84.35, மாஹே- ரூ.81.9, மற்றும் ஏனாமில்- ரூ.84.54ஆக விற்பனையாகிறது.