கேஸ் சிலிண்டர் புக்கிங் செய்யுங்க… ரூ.200 திரும்ப கிடைக்கும்! சூப்பர் ஆஃபர்!
பேடிஎம் செயலி மூலம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ.200 வரை கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர் பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், மற்றும் இண்டேன் கேஸ் முன்பதிவுகளுக்குப் பொருந்தும்.

சிலிண்டர் கேஷ்பேக்
எல்பிஜி சிலிண்டர் விலையேற்றம் குடும்ப செலவுகள் அதிகரித்துள்ள இந்த நேரத்தில், ஒரு சிறிய சலுகையும் பெரிய உதவியாக மாறுகிறது. அந்த வகையில், டிஜிட்டல் பேமென்ட் செயலியான பேடிஎம் தற்போது எல்பிஜி சிலிண்டர் பதிவு செய்யும் பயனர்களுக்கு ரூ.200 வரை கேஷ்பேக் வழங்கும் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபர், வீட்டில் பயன்படுத்தும் பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், இண்டேன் கேஸ் போன்ற அனைத்து முக்கிய நிறுவனங்களின் சிலிண்டர் முன்பதிவுகளுக்கும் பொருந்தும்.
எல்பிஜி கேஷ்பேக் ஆஃபர்
இந்த சலுகையை பெறுவது மிகவும் எளிது. முதலில் உங்கள் மொபைலில் பேடிஎம் ஆப்பை திறந்து ‘ரீசார்ஜ் & பில்ஸ்’ பிரிவுக்குச் செல்ல வேண்டும். அங்கு ‘புக் கேஸ் சிலிண்டர்’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து, உங்கள் கேஸ் வழங்குநரை தேர்வு செய்து, கன்சூமர் நம்பர் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிடுங்கள். அதன் பிறகு, ‘CYLWIN’ என்ற விளம்பரக் கோடைப் பயன்படுத்தி பணம் செலுத்தினால் கேஷ்பேக் பெற வாய்ப்பு கிடைக்கும்.
கேஸ் சிலிண்டர் ஆன்லைன் பதிவு
ஆனால், இந்த சலுகைக்கு சில முக்கிய நிபந்தனைகள் உள்ளன. குறைந்தது ரூ.100 அல்லது அதற்கு மேல் தொகைக்கு சிலிண்டர் பதிவு செய்ய வேண்டும். மேலும், இந்த கேஷ்பேக் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்காது; ஒவ்வொரு 2000வது பயனருக்கு மட்டுமே ரூ.200 கிடைக்கும். அதனால், உங்கள் ஆப்பில் சலுகையை முன்பே சரிபார்ப்பது நல்லது.
பேடிஎம் கணக்கு
மேலும், கேஷ்பேக் பெற உங்கள் பேடிஎம் கணக்குடன் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், இந்த சலுகையை பெற முடியாது. இதே நேரத்தில், இந்த ஆஃபரை வேறு ப்ரோமோ கோடு இணைத்து பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பேடிஎம் எந்த நேரத்திலும் இந்த சலுகையின் விதிமுறைகளை மாற்ற அல்லது ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.
சிலிண்டர் பதிவு
இன்றைய டிஜிட்டல் காலத்தில், வீட்டிலிருந்தபடியே சிலிண்டர் பதிவு செய்து, நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடிவது மிகப் பெரிய சுலபமாகும். குறிப்பாக, சிலிண்டர் விலை ரூ.900-ஐ கடந்த நிலையில், ரூ.200 வரை சேமிப்பு கிடைப்பது சாதாரண மக்களுக்கு நிச்சயம் நிம்மதியை அளிக்கும். எனவே, உங்கள் பேடிஎம் ஆப்பை உடனே சரிபார்த்து, இந்த சலுகை உங்களுக்கு பொருந்துகிறதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

