காடுகளிலும், கிராமங்களிலும் OYO ஹோம் ஸ்டேஸ்.. அனுபவிக்க ரெடியா.?
ஹோம் ஸ்டேக்கள் தற்போது அனைத்து சுற்றுலா தளங்களிலும் பெருகி வருகிறது என்று கூறலாம். இந்த நிலையில் பிரபல நிறுவனமான ஓயோ இந்த இடத்தை பிடிப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஓயோ ஹோம் ஸ்டே
சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை சூழலில் உண்மையான கிராம வாழ்க்கையை அனுபவிக்க உதவுவதுடன், பழங்குடி குடும்பங்களுக்கு கூடுதல் வருமானம் வாய்ப்புகளையும் உருவாக்கும். இது, நிலையான வளர்ச்சி மற்றும் பழங்குடி சமூகங்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட பெரிய முயற்சியின் ஒரு பகுதியாகும்.
பசுமையான சுற்றுலா
பிரபல ஹோட்டல் சேவை நிறுவனமான ஓயோ (OYO) Homes மற்றும் Homey Huts ஆகியவை, ஆந்திரப் பிரதேசத்தின் பழங்குடி பகுதிகளில் ஹோம் ஸ்டே வசதிகளை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. TC நிறுவனம் ITDA படேரு உடன் இணைந்து, 1,600 ஹெக்டேர் கூடுதல் நிலத்தில் காபி பயிரிடும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
ஆந்திரா காபி உற்பத்தி
ஏற்கனவே 4,010 ஹெக்டேரில் காபி பயிரிடப்பட்டு வருகிறது. அது உள்ளூர் விவசாயிகள் கூட்டுறவு சங்கத்துடன் இணைந்து செயல்பட்டது. Coffee Board கூட, உயர் தரமான மற்றும் நிலையான காபி உற்பத்தி முறைகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
பழங்குடி பகுதிகள்
பழங்குடி பெண்களுக்கு உதவ Frontier Marketing மற்றும் Easy Mart ஆகியவை, கிராமங்களில் தயாரிக்கப்படும் உள்ளூர் பொருட்கள் சந்தைப்படுத்தலை மேம்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் Equip என்ற நிறுவனம் ITDA உடன் இணைந்து, மஞ்சள் உற்பத்தியை ஊக்குவித்து, செயலாக்க நிலையங்கள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.