MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Crackers : தீபாவளிக்கு சீப் அண்ட் பெஸ்டாக பட்டாசு வாங்க எது சிறந்தது? ஆன்லைனா அல்லது நேரடியாக சிவகாசியில் வாங்குவதா?

Crackers : தீபாவளிக்கு சீப் அண்ட் பெஸ்டாக பட்டாசு வாங்க எது சிறந்தது? ஆன்லைனா அல்லது நேரடியாக சிவகாசியில் வாங்குவதா?

Diwali Crackers buying Tips : தீபாவளிக்கு பட்டாசு வாங்க போறீங்களா? ஆன்லைனில் பட்டாசு வாங்குவது பெஸ்டா? நேரடியாக சிவகாசியில் பட்டாசு வாங்குவது பெஸ்டா? என்பதை பற்றி இங்கே பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Oct 14 2026, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Diwali Crackers buying Tips
Image Credit : Chatgpt

Diwali Crackers buying Tips

தீபாவளி என்றாலே நம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசு தான். விதவிதமான புத்தாடைகளை உடுத்திக் கொண்டு உறவினர்களுடன் சந்தோஷமாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவதே தனி சுகம் தான். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 8ந் தேதி வருகிறது. தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்களே எஞ்சி உள்ள நிலையில், அனைவரும் அதற்கான பர்சேஸுகளை தற்போதே தொடங்கிவிட்டனர். தீபாவளிக்கு பட்டாசு வாங்குபவர்கள், ஆன்லைனில் வாங்கலாமா அல்லது நேரடியாக சிவகாசிக்கு சென்று வாங்கலாமா என்கிற குழப்பத்தில் இருப்பார்கள். அதில் எது பெஸ்ட் என்பதை இங்கே பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பட்டாசுனாலே சிவகாசி தான்
Image Credit : Chatgpt

பட்டாசுனாலே சிவகாசி தான்

பட்டாசு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது சிவகாசி தான். ஒட்டுமொத்த இந்தியாவுக்குமே இங்கிருந்து தான் பட்டாசுகள் தயாரித்து அனுப்பப்படுகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் இருக்கின்றன. இந்தியா முழுவதிலும் இருக்கும் மக்கள் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதற்காக சிவகாசியில் உள்ள மக்கள் ஆண்டு தோறும் உழைக்கிறார்கள். சிவகாசியில் இருந்து பட்டாசுகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இப்படி பட்டாசு ஹப்பாக உள்ள சிவகாசியில் பட்டாசு விற்பனை தற்போது படுஜோராக நடைபெற்று வருகிறது.

35
பட்டாசு வாங்குவதில் குழப்பமா?
Image Credit : Chatgpt

பட்டாசு வாங்குவதில் குழப்பமா?

தீபாவளிக்கு பட்டாசு வாங்க நினைப்பவர்கள் அதனை எப்படி வாங்கலாம் என்கிற குழப்பத்தில் இருப்பது வழக்கம். தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைனில் ஆர்டர் போட்டாலே பட்டாசு வீடு தேடி வந்துவிடும். அதுமட்டுமின்றி நிறைய இன்ஸ்டா இன்ஃபிளூயன்சர்கள் மூலமாக சிவகாசியில் உள்ள பட்டாசுக் கடை உரிமையாளர்கள் போட்டி போட்டு புரமோஷன் செய்து வருகிறார்கள். அதனால் நேரில் வந்து வாங்குபவர்களை காட்டிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்குபவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

45
ஆன்லைனில் வாங்குவதில் உள்ள ப்ளஸ், மைனஸ் என்ன?
Image Credit : Chatgpt

ஆன்லைனில் வாங்குவதில் உள்ள ப்ளஸ், மைனஸ் என்ன?

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்களுக்கு மிகப்பெரிய ப்ளஸ் என்னவென்றால், பயணச் செலவு தான். உதாரணத்திற்கு நீங்கள் சென்னையில் இருந்து ஆர்டர் போட்டு வாங்குகிறீர்கள் என்றால் உங்களுக்கு 2 ஆயிரம் வரை மிச்சமாகும். நீங்கள் சென்னையில் இருந்து சிவகாசி வந்து செல்ல 2 ஆயிரம் ரூபாய் செலவாகும். அந்த செலவை மிச்சப்படுத்தி, ஆன்லைனில் நீங்கள் கூடுதலாக பட்டாசுகளை வாங்கிக் கொள்ளலாம்.

ஆன்லைனில் பட்டாசு வாங்குபவர்கள் சில போலியான பட்டாசு விற்பனையாளர்களை நம்பி ஏமாந்த சம்பவமும் அரங்கேறுகின்றன. கடந்த ஆண்டுகூட இன்ஸ்டா இன்ஃபிளூயன்சர்களை நம்பி ஒரு பட்டாசு கடையில் ஆர்டர் போட்டவர்களை அந்த கடை உரிமையாளர் ஏமாற்றிவிட்டு கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு எஸ்கேப் ஆன சம்பவங்களும் நடந்தன.

அதனால் ஆன்லைனில் ஆர்டர் போடும்போது அந்த கடையை பற்றிய ரேட்டிங் மற்றும் ரிவ்யூ ஆகியவற்றை பார்த்து ஆர்டர் போடுவது நல்லது. நேரில் வந்து வாங்குவதைவிட ஆன்லைனில் விலை சற்று கூடுதலாக தான் இருக்கும். நீங்கள் ஒரே கடையை மட்டும் பார்க்காமல் நான்கைந்து கடைகளோடு விலையை ஒப்பிட்டு பார்த்து ஆர்டர் பண்ணுவது நல்லது. 10 ஆயிரத்திற்குள் பட்டாசு வாங்க விரும்புபவர்கள் ஆன்லைனில் வாங்குவதே நல்லது.

55
நேரில் வந்து வாங்குவதில் என்ன பலன்?
Image Credit : Chatgpt

நேரில் வந்து வாங்குவதில் என்ன பலன்?

பட்டாசு வாங்க நேரிலேயே சிவகாசிக்கு வருபவர்கள் வழிநெடுக 90 சதவீதம் தள்ளுபடி, 80 சதவீதம் தள்ளுபடி என்கிற போர்டை பார்க்க முடியும். அதற்கு மயங்கிவிடக் கூடாது. முதலில் அந்த கடைக்கு சென்று பட்டாசு விலை பட்டியலை வாங்கி செக் பண்ண வேண்டும். அந்த விலையை ஆன்லைன் தளத்தில் உள்ள ரேட்டோடு ஒப்பிட்டு பாருங்கள். அதைவிட கூடுதலாக இருந்தால் அந்த கடைகளில் பட்டாசு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

நீங்கள் ஆன்லைனில் வாங்குவதைவிட நேரில் வந்து வாங்கினால் விதவிதமான வெடிகளை தேர்வு செய்து வாங்க முடியும். ஆன்லைனில் போடப்பட்டிருக்கும் பெயர்கள் புதுசுபுதுசா இருக்கும். ஆனால் அது என்ன வெடி என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. நேரில் வந்து வாங்கினால், அந்த வெடி எவ்வாறு வெடிக்கும் என்பதை அவர்களே விவரமாக கூறுவார்கள். சில இடங்களில் அந்த வெடியை டெமோ போட்டும் காட்டுவார்கள்.

நேரில் வந்து பட்டாசு வாங்க வருபவர்கள் பல்க் ஆக வாங்குவது சிறந்தது. ஏனெனில் நீங்கள் 10 ஆயிரத்திற்கும் குறைவாக பட்டாசு வாங்க சென்னையில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் செலவு செய்து வந்தால் உங்களுக்கு தான் நஷ்டம். அதுவே உங்கள் உறவினர்கள் அல்லது அக்கம் பக்கத்தினரிடம் ஆர்டர் எடுத்து அவர்களுக்கும் சேர்த்து வாங்கிச் சென்றால் உங்களுக்கும் பணம் மிச்சமாகும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தீபாவளி பண்டிகை
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Business Idea: ரூ.20க்கு வாங்கி ரூ.40க்கு விற்கலாம்.. குறைந்த முதலீட்டில் காய்கறி கடை தொடங்குவது எப்படி?
Recommended image2
தீபாவளிக்கு கார் வாங்கப் போறீங்களா? லட்சக்கணக்கில் பணத்தைச் சேமிக்க 5 ஸ்மார்ட் டிப்ஸ்!
Recommended image3
DA Hike Update For Central Government Employees : DA உயர்வால் போக்குவரத்து படியும் அதிகரிக்குமா? யாருக்கு எவ்வளவு கூடுதல் தொகை கிடைக்கும்?
Related Stories
Recommended image1
Sivakasi: சீனாவுக்கு சவால் விடும் சிவகாசி! உலக பட்டாசு ஹப்பாக மாற்ற தமிழக அரசு அசத்தல் திட்டம்!
Recommended image2
Firecracker Scam Alert: Online பட்டாசு மோசடி! சமத்தா இருந்து தப்பிச்சுக்கோங்க! அலர்ட் செய்த தமிழக அரசு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved