- Home
- Business
- UPI SMS Alert : ரூ.500-க்குள் UPI டிரான்சேக்ஷன் செய்தால் இனி SMS வராது..ஜனவரி 1 முதல் புதிய மாற்றம்!
UPI SMS Alert : ரூ.500-க்குள் UPI டிரான்சேக்ஷன் செய்தால் இனி SMS வராது..ஜனவரி 1 முதல் புதிய மாற்றம்!
UPI SMS Alert: 2027 ஜனவரி 1 முதல் HDFC வங்கியில் ரூ.500 அல்லது அதற்குக் குறைவான UPI பரிவர்த்தனைகளுக்கு SMS அலர்ட் வராது. ரூ.500-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு SMS தொடரும். அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் மின்னஞ்சல் அறிவிப்பு கிடைக்கும்.

UPI புதிய விதிகள் 2027
இனி கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) , பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) செயலிகள் மூலம் பணம் அனுப்பும்போதெல்லாம் வங்கியில் இருந்து SMS வராது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக, சிறிய தொகைகளுக்கான பரிவர்த்தனைகளில் SMS அலர்ட்களை நிறுத்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தினமும் பலமுறை UPI மூலம் பணம் செலுத்துபவர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.
ஆனால், இதற்காக அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் SMS அறிவிப்புகள் நிறுத்தப்படுகின்றன என்று நினைக்க வேண்டாம். ரூ.500-க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு SMS அனுப்பும் நடைமுறை தொடரும்.
இந்த மாற்றம் எப்போது அமலுக்கு வருகிறது, எந்த வங்கிகளுக்கு பொருந்தும், பணம் அனுப்பிய விவரங்களை இனி எப்படித் தெரிந்துகொள்வது என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
RBI விதி
RBI-யின் புதிய விதி என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில், மின்னணு வங்கிப் பரிவர்த்தனைகளுக்கான SMS அறிவிப்புகள் தொடர்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரூ.500 வரை SMS கிடையாது
இதன்படி, 2027 ஜனவரி 1 முதல் ரூ.500 அல்லது அதற்கு குறைவான தொகைக்கான சிறிய பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே SMS அலர்ட்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், ரூ.500 அல்லது அதற்கு குறைவான மதிப்புள்ள UPI பரிவர்த்தனைகளுக்கு வங்கியிலிருந்து இனி SMS அறிவிப்புகள் வராது.
சிறிய பரிவர்த்தனைகளுக்கு SMS அனுப்புவதை வங்கிகள் தங்களது உள் கொள்கையின் அடிப்படையில் முடிவு செய்யலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரூ.500-க்கு மேல் SMS உண்டு
ஆனால், ரூ.500-க்கு அதிகமான அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் வழக்கம்போல உடனடி SMS அலர்ட் தொடர்ந்து வரும். ரூ. 500-க்கு மேற்பட்ட மின்னணுப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே SMS அனுப்புவது கட்டாயம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
HDFC வங்கி
HDFC வங்கியில் என்ன மாற்றம்?
RBI-யின் புதிய வழிகாட்டுதலைத் தொடர்ந்து, HDFC வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2027 ஜனவரி 1 முதல் HDFC வங்கி வாடிக்கையாளர்கள் ரூ.500 அல்லது அதற்குக் குறைவான தொகைக்கு UPI மூலம் பணம் அனுப்பும்போது வங்கியிலிருந்து SMS அலர்ட் வராது என தெரிவித்துள்ளது.
HDFC வங்கியின் அறிவிப்பின்படி, அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்குமான மின்னஞ்சல் அறிவிப்புகள் தொடர்ந்து அனுப்பப்படும். அதாவது SMS வரவில்லை என்றாலும் மின்னஞ்சல் மூலம் பரிவர்த்தனை விவரங்களைப் பெறலாம்.
மற்ற வங்கிகளுக்கும் இந்த விதி பொருந்துமா?
இது RBI வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் வங்கிகளுக்கான பொதுவான விதியாகும். எனவே, பிற வங்கிகளும் தங்களது உள் கொள்கைக்கு ஏற்ப ரூ.500 அல்லது அதற்குக் குறைவான மின்னணுப் பரிவர்த்தனைகளுக்கு SMS அனுப்புவதை நிறுத்தலாம். எனவே, ஒவ்வொரு வங்கியின் அறிவிப்பையும் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.
பரிவர்த்தனை
பரிவர்த்தனை விவரங்களை எப்படித் தெரிந்துகொள்வது?
SMS அறிவிப்புகள் வரவில்லை என்றாலும், வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிவர்த்தனை விவரங்களைப் பல வழிகளில் தெரிந்துகொள்ள முடியும்.
UPI செயலி மூலம் சரிபார்க்கலாம்
இனி கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) போன்ற UPI செயலிகள் மற்றும் வங்கியின் அதிகாரப்பூர்வ மொபைல் பேங்கிங் செயலி மூலம் உடனடி நோட்டிபிகேஷன்களைப் பெறலாம்.
மின்னஞ்சல்(Email) அறிவிப்பு
வாடிக்கையாளர் மின்னஞ்சல் முகவரியை வழங்கியிருந்தால், தொகை எவ்வளவாக இருந்தாலும், அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் பதிவு செய்யப்பட்ட இமெயில் முகவரிக்கு மின்னஞ்சல் அறிவிப்பு அனுப்ப வேண்டும். இதனால், வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரி சரியாகவும், பயன்பாட்டில் இருப்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
வங்கி கணக்கு அறிக்கை
Net Banking அல்லது வங்கிக் கணக்கு அறிக்கை (Bank Statement) மூலம் பணம் எப்போது அனுப்பப்பட்டது, எவ்வளவு தொகை அனுப்பப்பட்டது போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.
வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
- வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துங்கள்.
- UPI செயலிகளில் பரிவர்த்தனை வரலாற்றை அவ்வப்போது சரிபார்க்கவும்.
- சிறிய தொகைகளுக்கான SMS வரவில்லை என்பதற்காகப் பதற்றப்பட வேண்டாம்.
- வங்கி கணக்கில் சந்தேகத்திற்குரிய பணப் பரிவர்த்தனை தென்பட்டால் உடனடியாக வங்கியைத் தொடர்புகொள்ளுங்கள்.
- OTP, UPI PIN, வங்கி கடவுச்சொல் போன்றவற்றை யாரிடமும் பகிர வேண்டாம்.
புதிய விதி ஏன்
இந்த புதிய விதி ஏன் கொண்டுவரப்படுகிறது?
சிறிய தொகைகளுக்கான ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் SMS அனுப்ப வேண்டிய கட்டாயம் வங்கிகளுக்கு இருக்காது. இதில் கவனிக்க வேண்டியது, ரூ.500-க்குக் குறைவான பரிவர்த்தனைகளுக்கு SMS அனுப்பக் கூடாது என்று RBI தடை விதிக்கவில்லை.
வங்கிகள் விரும்பினால் தொடர்ந்து SMS அனுப்பலாம். அதற்காக வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பதையும் விதிமுறை தெளிவுபடுத்துகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.













