MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • மாதம் ஒரு லட்சம் பென்ஷன்! NPS திட்டத்தில் ஸ்மார்ட்டா முதலீடு செய்யுங்க!

மாதம் ஒரு லட்சம் பென்ஷன்! NPS திட்டத்தில் ஸ்மார்ட்டா முதலீடு செய்யுங்க!

NPS Calculator for Rs 1 lakh pension: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது. இத்திட்டத்தில் டயர் I, டயர் II என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. இரண்டு கணக்குகளும் வரிச் சலுகைகள், பணத்தைத் எடுப்பதற்கான விதிகள் வேறுபடுகின்றன.

3 Min read
Author : SG Balan
| Updated : Jan 19 2025, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
NPS Calculator

NPS Calculator

ஓய்வு பெற்றவுடன், எந்த வருமான ஆதாரமும் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் நிதிச் சிக்கல்களில் சிக்கிக் கொள்ளலாம். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) இதுபோன்ற பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது.

தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) முதலில் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்காக 2004 இல் தொடங்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில், தனியார் துறை மற்றும் அமைப்புசாரா வேலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
NPS Calculator

NPS Calculator

இத்திட்டம் ஓய்வுக்குப் பிறகு நிலையான ஓய்வூதியத்தை வழங்குகிறது. பணியாளர்களுக்கு நிதி சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதற்காக, பணியாளர்கள் தாங்கள் பணிபுரியும் ஆண்டு முழுவதும் மாதாந்திர அல்லது வருடாந்திர அடிப்படையில் முதலீடு செய்ய வேண்டும். இத்திட்டத்தில் முன்கூட்டியே சேர்ந்தால், அவ்வளவுக்கு பணி ஓய்வுக் கால கார்பஸ் பெருகும்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (NPS) கீழ் டயர் I, டயர் II என இரண்டு வகையான கணக்குகள் உள்ளன. நீங்கள் டயர் I கணக்கு வைத்திருக்கும்போது மட்டுமே டயர் II கணக்கு திறக்க அனுமதிக்கப்படுகிறது. இரண்டு கணக்குகளும் வரிச் சலுகைகள், பணத்தைத் எடுப்பதற்கான விதிகள் வேறுபடுகின்றன.

37
NPS Calculator

NPS Calculator

இரண்டு வகையான NPS கணக்குகளை ஒப்பிடும்போது, ​​டயர்-I கணக்கு லாக்-இன் காலத்தைக் கொண்டுள்ளது. அது கணக்குதாரரின் ஓய்வு வரை நீடிக்கும். அதேசமயம் டயர்-II கணக்கு லாக்-இன் காலம் இல்லாமல் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. எந்த நேரத்திலும் பணம் எடுக்க அனுமதிக்கிறது.

டயர்-I கணக்குகளுக்கு, குறைந்தபட்ச தொடக்க டெபாசிட் ரூ. 500, டயர்-II கணக்குகளுக்கு குறைந்தபட்ச தொடக்க டெபாசிட் ரூ.1,000 தேவைப்படும். மேலும், டயர்-I கணக்கில் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் குறைந்தபட்ச இருப்புத்தொகை 1,000 ரூபாய் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதேசமயம் டயர்-II கணக்குகளுக்கு அத்தகைய நிபந்தனை இல்லை.

47
NPS Calculator

NPS Calculator

NPS கணக்கில் நீங்கள் 75 வயது வரை முதலீடு செய்யலாம். 75 வயதுக்குப் பிறகும் NPS கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்து, வரிச் சலுகைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம்

NPS முதலீட்டிற்கு உச்ச வரம்பு எதுவும் இல்லை. ஆனால் வரிச் சேமிப்பை மனதில் கொண்டு NPS திட்டத்தில் சேர்வதாக இருந்தால்,பிரிவு 80C (ரூ. 1.5 லட்சம்) மற்றும் துணைப் பிரிவு 80CCD 1B) (ரூ. 50,000) ஆகியவற்றின் கீழ் ஆண்டுக்கு ரூ. 2 லட்சம் வரை வரிச் சலுகையைப் பெறலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

57
NPS Calculator

NPS Calculator

தற்போது, ​​நீங்கள் ஓய்வு பெற்றவுடன் மொத்த கார்பஸில் 60% வரை திரும்பப் பெறலாம். மீதமுள்ள 40% கட்டாயமாக வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும். இருப்பினும், புதிய NPS வழிகாட்டுதல்களின்படி, மொத்த கார்ப்பஸ் ரூ. 5 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், வருடாந்திரத் திட்டத்தைத் தவிர்த்து முழுத் தொகையையும் திரும்பப் பெற முடியும்.

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் ஈட்டும் மொத்தத் தொகைக்கும் வருமான வரி கிடையாது. காரணம் NPS திட்டம் ஒரு EEE திட்டம் ஆகும். அதாவது, முதலீடு, வருமானம் மற்றும் முதிர்வுத்தொகை மூன்றிலும் வரி விதிக்கப்படுவதில்லை. எனவே இது வரி சேமிப்புக்கு சிறந்தத் திட்டமாகவும் பிரபலாகியுள்ளது.

67
NPS Calculator

NPS Calculator

NPS மூலம் 1 லட்சம் பென்ஷன் பெற, மாதம் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? எடுத்துக்காட்டாக, நீங்கள் 20 வயதில் NPS இல் முதலீடு செய்யத் தொடங்கி, 60 வயதில் ஓய்வு பெற்ற பிறகு, மாதந்தோறும் ரூ. 1 லட்சம் ஓய்வூதியத்தைப் பெற வேண்டும் என்றால் எப்படி முதலீடு செய்யவேண்டும் என்று பார்க்கலாம்.

எஸ்பிஐ பென்ஷன் ஃபண்ட்ஸ் கால்குலேட்டரின்படி, NPS இல் 20 வயதில் இருந்து மாதம் ஒன்றுக்கு ரூ.7,850 முதலீடு செய்யத் தொடங்கி, 60 வயதில் ஓய்வு பெறும் வரை முதலீடு செய்ய வேண்டும். 40 வருடங்களில் மொத்த முதலீட்டுத் தொகை ரூ.37,68,000 ஆக இருக்கும். இந்த முதலீட்டிற்கு சுமார் 10% வருவாய் கிடைப்பதாக வைத்துக்கொண்டால், வட்டி மூலம் ரூ.4,62,89,792 கிடைக்கும். இதன்படி, மொத்த ஓய்வூதியத் தொகையாக ரூ. 5,00,57,792 சேர்ந்துவிடும்.

77
NPS Calculator

NPS Calculator

இந்த மொத்த கார்பஸ் ரூ. 5 கோடியில், நீங்கள் 40% (ரூ. 2,00,23,117) வருடாந்திர திட்டத்தில் முதலீடு செய்து, மீதி 60% (ரூ. 3,00,34,675 ) தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். வருடாந்திரத் திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்கு 6% வருமானம் கிடைத்தால், மாத ஓய்வூதியம் ரூ.1,00,116 வாழ்நாள் முழுக்க கிடைக்கும். எனவே, 40 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.7,850 முதலீடு செய்வதன் மூலம், 60 வயதை எட்டிய பிறகு மாத ஓய்வூதியமாக ரூ.1 லட்சத்தை எதிர்பார்க்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
(14.2 ov)134/2
ST-WST-W
(20.0 ov)150/5
HH-W need 17 runs in 34 balls
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(102.0 ov)377/2
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
PF Withdrawal: இனி மாதந்தோறும் பிஎஃப் பணம் பெறலாம்! ஊழியர்களுக்கு குட் நியூஸ்!
Recommended image2
Blue vs Red Train Coaches: ரயிலில் நீல நிறம், சிவப்பு நிறப் பெட்டிகள்.. இதில் எது பாதுகாப்பானது தெரியுமா?
Recommended image3
Right Time to Buy Gold: தங்கம் விலை ஒரே மாதத்தில் 8% சரிவு! இப்போது நகை வாங்கலாமா? இன்னும் குறைய வாய்ப்புள்ளதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved