மாதம் ரூ.1.5 லட்சம் பென்ஷன் வேணுமா? NPS அக்கவுண்டில் இப்படி முதலீடு பண்ணுங்க!
தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது பணி ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானம் பெற ஒரு சிறந்த வழி. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு ஏற்ப பென்ஷன் கிடைக்கும். ரூ.1.5 லட்சம் மாதாந்திர ஓய்வூதியத்தைப் பெற எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
National Pension System
வேலையில் இருக்கும்போதே எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முதலீட்டைத் தொடங்குவது அவசியம். ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் செலவுகளுக்குத் தேவையான நிலையான வருமானம் கிடைக்க திட்டமிட்டு முதலீடு செய்யவேண்டும். நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு சிறப்பான ஓய்வூதியம் பெற விரும்பினால், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) முதலீடு செய்யலாம்.
NPS Calculator
இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், ஒரு பெரிய தொகையைத் திரட்டலாம். ஓய்வுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியமாகப் பெறலாம். தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணி ஓய்வு பெற்றவுடன் மாதாந்திர பென்ஷன் கிடைக்கும். இந்த வகையில் 1.5 லட்சம் ரூபாய் பென்ஷன் கிடைக்க வேண்டும் என்றால் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
Pension planning
மாதம் ரூ.1.5 லட்சம் ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் ரூ.7,000 முதலீடு செய்ய வேண்டும். NPS டெபாசிட்களுக்கு ஆண்டு வருமானம் சுமார் 12 சதவிகிதம். 25 ஆண்டுகளுக்கு தொடர்ந்து ரூ.7,000 முதலீடு செய்தால், மொத்தம் ரூ.29,40,000 முதலீடு செய்திருப்பீர்கள். இந்த முதலீட்டில் 12 சதவீதம் வட்டியைச் சேர்த்தால், சுமார் ரூ.4.54 கோடி கிடைக்கும்.
NPS Rules
இந்த நிதியில் 40 சதவீதத்தை வருடாந்திர முதலீடாக பயன்படுத்தலாம். மீதமுள்ள 60 சதவீத நிதியை மொத்தமாகத் திரும்பப் பெறலாம். எஞ்சிய தொகைக்கு சுமார் 6% வட்டி கிடைப்பதாகக் கொண்டால், ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 லட்சம் ரூபாய் பென்ஷன் பெறலாம்.
Retirement planning
NPS திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) இயக்கப்படுகிறது. 1.5 லட்சம் ரூபாய் ஓய்வூதியம் பெற, முதிர்வுத் தொகையில் குறைந்தது 40 சதவீதத்தை வருடாந்திரத்தை முதலீடாக பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 60 சதவீத தொகையை மொத்தமாக எடுத்துக்கொள்ளலாம். இந்தத் தொகைக்கு முற்றிலும் வரி விலக்கும் உண்டு.
NPS account
இத்திட்டத்தில் முதலீடு செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை வரிச் சலுகையும் கிடைக்கும். இது தவிர, பிரிவு 80CCD (1B) இன் கீழ் ரூ.50,000 வரையிலான வருடாந்திர முதலீட்டில் வரி விலக்கு கோரலாம்.