MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Barrier Free Tolling : டோல் கேட்களில் இனி நிற்க வேண்டாம்.. FASTag + AI கேமரா.. இந்தியாவே மாறுது

Barrier Free Tolling : டோல் கேட்களில் இனி நிற்க வேண்டாம்.. FASTag + AI கேமரா.. இந்தியாவே மாறுது

நிதின் கட்கரி அறிவித்துள்ள புதிய ‘பாரியர்-ஃப்ரீ டோலிங்’ முறை, இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கப் போகிறது.கட்டணம் செலுத்தத் தவறுபவர்களுக்கு அபராதம் மற்றும் பாஸ்டேக் முடக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

1 Min read
Author : Raghupati R
Published : Apr 28 2026, 11:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
டோல் கேட்களில் இனி காத்திருப்பு இல்லை
Image Credit : Google

டோல் கேட்களில் இனி காத்திருப்பு இல்லை

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் அனுபவம் விரைவில் முற்றிலும் மாறப் போகிறது. நீண்ட வரிசைகளில் காத்திருந்து டோல் கட்டும் நிலை கடந்த காலமாக மாறும். மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பின்படி, ‘பாரியர்-ஃப்ரீ டோலிங்’ என்ற புதிய முறை 2026 டிசம்பருக்குள் கட்டப்படையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம், போக்குவரத்து நெரிசலை குறைத்து, வாகன ஓட்டத்தை இடையூறு இல்லாமல் மாற்றுவதாகும்.

25
டோல் நெரிசலுக்கு தீர்வு
Image Credit : our own

டோல் நெரிசலுக்கு தீர்வு

இந்த புதிய முறையின் அடிப்படை Multi-Lane Free Flow (MLFF) தொழில்நுட்பம். தற்போதுள்ள டோல் கேட்களில் வாகனங்களை நிறுத்தும் தடைகள் முற்றிலும் நீக்கப்படும். அதற்கு பதிலாக, சாலையின் மேல் அமைக்கப்படும் ஸ்மார்ட் ஃப்ரேம்கள் மூலம் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் வாகனங்களை தானாக கண்டறியும். வாகனம் அந்த புள்ளியை கடக்கும் தருணத்தில், டோல் கட்டணம் நேரடியாக வசூலிக்கப்படும்.

Related Articles

Related image1
ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்கலாம்!.. டோல் பிளாசாவில் கிடைக்கும் இலவச சேவைகள் தெரியுமா?
Related image2
டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்
35
இந்திய ஹைவே சிஸ்டம் அப்டேட்
Image Credit : our own

இந்திய ஹைவே சிஸ்டம் அப்டேட்

இந்த அமைப்பு பாஸ்டேக் மற்றும் Automatic Number Plate Recognition (ANPR) தொழில்நுட்பங்களை இணைத்து செயல்படும். உயர் தர AI கேமராக்கள் வாகன எண் பலகையை வாசிக்கும் போது, ​​RFID ரீடர்கள் பாஸ்டேக் ஸ்டிக்கரை ஸ்கேன் செய்யும். பாஸ்டேக் செயல்படாத சூழலில் கூட, எண் பலகை அடிப்படையில் உரிமையாளரை கண்டறிந்து கட்டணம் வசூலிக்க முடியும் என்பதால் தவறுகள் குறையும்.

45
நெடுஞ்சாலை டோல்
Image Credit : our own

நெடுஞ்சாலை டோல்

இந்த முறையின் மிகப்பெரிய பலன் பயணிகளுக்கே. டோல் கேட்களில் வேகம் குறைக்காமல், சுமார் 80 கிமீ வேகத்தில் வாகனங்கள் நகர முடியும். இதனால் நேரம் குறைவதோடு, போக்குவரத்து நெரிசலும் தவிர்க்கப்படும். மேலும், வாகனங்கள் நின்று கொண்டு எரிபொருள் வீணாகும் பிரச்சினையும் குறையும்.

55
பாஸ்டேக் முடக்கப்படும்
Image Credit : our own

பாஸ்டேக் முடக்கப்படும்

அதே நேரத்தில், டோல் தவிர்க்க முயற்சிக்கும் வாகனங்களுக்கு கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கட்டணம் செலுத்தாதவர்களுக்கு உடனடி இ-நோட்டீஸ் அனுப்பப்படும். மீண்டும் மீண்டும் விதிமுறைகளை மீறினால், பாஸ்டேக் முடக்கப்படுவதோடு, அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய முறையால் அரசுக்கு வருவாய் இழப்பு குறைந்து, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சேமிப்பு ஏற்படும் என மதிப்பிடப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சுங்கச்சாவடி கட்டணங்கள்
ஃபாஸ்டேக்
நெடுஞ்சாலை
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Oil Discovery: இனி பெட்ரோல், டீசல், கேஸ் விலை தாறுமாறா இறங்கப்போகுது.! இந்தியன் ஆயில் நிறுவனம் சொன்ன குட் நியூஸ்.!
Recommended image2
Gold Rate Today: சென்னையில் இன்று தங்கம் விலை கடும் வீழ்ச்சி.! நகை கடைகளில் குவிந்த இல்லத்தரசிகள்.!
Recommended image3
LPG: இனி நினைத்த நேரத்தில் சிலிண்டர் கிடைக்காது.. விலையும் உயர போகுது.. புது ரூல்ஸ் இதோ!
Related Stories
Recommended image1
ஒரு மாதத்திற்கு இலவசமாக பயணிக்கலாம்!.. டோல் பிளாசாவில் கிடைக்கும் இலவச சேவைகள் தெரியுமா?
Recommended image2
டோல் கட்டாமல் போனீங்களா? 72 மணி நேரத்துக்குள் கட்டுங்க.. இல்லனா இரட்டிப்பு அபராதம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved