ரூ.10,000 அபராதம்.. வாகன ஓட்டிகளே அலெர்ட்.. இந்த ஒரு தவறை செய்யாதீங்க!
இந்த புதிய விதியை மீறுவோருக்கு ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்த விவரங்களை இங்கு விரிவாக காணலாம்.

வாகன அபராதம் 10000
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. உயர்தர பாதுகாப்பு பதிவு எண் பலகை (எச்.எஸ்.ஆர்.பி) இல்லாத இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இனி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக பழைய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் உடனடியாக இந்த மாற்றத்தை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
வாகன புதிய விதிகள்
புதிய விதிமுறையின்படி, எச்.எஸ்.ஆர்.பி பொருத்தப்படாத வாகனங்களுக்கு இனி மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வழங்கப்படாது. இதனால் அந்த வாகனங்கள் சாலையில் இயக்குவதில் சிக்கல். இதுவரை பழைய எண் பலகைகளுடன் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டாலும், தற்போது அந்த நடைமுறை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து அபராதம்
எச்.எஸ்.ஆர்.பி இல்லாமல் வாகனங்களை இயக்கினால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் மாசு சான்றிதழ் இல்லாததற்கு கூடுதல் அபராதம் விதிக்கப்படலாம். இதனால் மொத்த அபராதம் ரூ.10,000 வரை உயர வாய்ப்பு உள்ளது. இந்த மாற்றம் வாகன உரிமையாளர்களுக்கு பெரிய சுமையாக மாறியுள்ளது.
பழைய வாகன விதி
இந்த புதிய கட்டுப்பாடு வடஇந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 2019 ஏப்ரல் 1-க்கு முன் வாங்கப்பட்ட வாகனங்களுக்கு இந்த விதி கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. 2019க்கு பிறகு வாங்கப்பட்ட வாகனங்களில் இந்த பாதுகாப்பு எண் பலகை ஏற்கனவே கட்டாயமாக வழங்கப்பட்டுள்ளது.
மாசு சான்றிதழ்
அரசு தரவுகளின்படி, மாநிலத்தில் கோடிக்கணக்கான வாகனங்களில் இன்று எச்.எஸ்.ஆர்.பி பொருத்தப்படவில்லை. குறிப்பாக தனியார் வாகன உரிமையாளர்கள் இதை பின்பற்றாமல் இருப்பது அதிகமாக உள்ளது. அபராதத்தையும் சட்ட சிக்கல்களையும் தவிர்க்க, உடனடியாக இந்த பாதுகாப்பு எண் பலகையை பொருத்திக்கொள்ள வேண்டும் என்று போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

