MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Pan, Aadhaar, Credit Card: ஜூலை முதல் புதிய விதிமுறைகள் ! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Pan, Aadhaar, Credit Card: ஜூலை முதல் புதிய விதிமுறைகள் ! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

ஜூலை மாதம் முதல் பான் கார்டு, ரயில் டிக்கெட், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல விஷயங்களில் முக்கியமான மாற்றங்கள் வரவுள்ளன. இந்த மாற்றங்கள் நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால் முன்கூட்டியே தெரிந்துகொள்வது அவசியம். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 28 2025, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மாற்றம் இல்லாத வாழ்க்கை உள்ளதா?
Image Credit : iStock

மாற்றம் இல்லாத வாழ்க்கை உள்ளதா?

ஒவ்வொரு மாதமும் சில புதிய விதிகள் வந்துகொண்டே இருக்கின்றன. இவை நமக்கு தெரியாம போனால் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படலாம். அதவும் நிதி தொடர்பான பிரச்சினைகள் எழுந்தால் கடைசி நேரத்தில் சிரமத்திற்கு உள்ளாக வேணடியிருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
பான் கார்டு – இனி ஆதார் கட்டாயம்
Image Credit : Google

பான் கார்டு – இனி ஆதார் கட்டாயம்

நீங்கள் பான் கார்டு வாங்க நினைக்கிறீர்களா?. இப்போ வரை, வேறு அடையாள அட்டை அல்லது பிறப்புச் சான்றிதழ் இருந்தா போதும். ஜூலை 1-ம் தேதி முதல், அதில் மாற்றம். இனிமேல், ஆதார் கார்டு சரிபார்ப்பு கட்டாயம்.பான் இல்லாமல் வருமான வரி செலுத்த முடியாது. அதனால், ஆதார் கார்டை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

36
ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு கட்டணங்கள் – கட்டணங்கள் அதிகம்
Image Credit : google

ஹெச்.டி.எஃப்.சி கிரெடிட் கார்டு கட்டணங்கள் – கட்டணங்கள் அதிகம்

ஜூலை 1 முதல், HDFC கிரெடிட் கார்டு கொண்டு வாடகை செலுத்தினால் 1% கட்டணம் வசூலிக்கப்படும். அதிகபட்ச கட்டணம் ₹4,999 வரை.ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் மாதத்திற்கு ₹10,000 மேல் செலவு செய்தால், அந்த தொகைக்கும் 1% கட்டணம்.மற்ற பில்கள் ₹50,000 மேல் செலவு செய்தால் 1% கட்டணம்.வாலட் ரீலோடு ₹10,000 மேல் இருந்தால் 1% கட்டணம். இன்னும் நல்ல செய்தி என்னவென்றால், இன்ஷூரன்ஸ் பில் கட்டினால் ரிவார்டு புள்ளிகள் வரும். மாதம் 10,000 புள்ளிகள் வரை பெறலாம்.

46
ரயில் தட்கல் டிக்கெட் – ஆதார் ஒ.டி.பி கட்டாயம்
Image Credit : social media

ரயில் தட்கல் டிக்கெட் – ஆதார் ஒ.டி.பி கட்டாயம்

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம், ஆப் மூலமாக ரயில் தட்கல் டிக்கெட் பதிவு செய்வது மிகவும் சாதாரணம். ஆனால் ஜூலை முதல் புதிய கட்டுப்பாடு.ஜூலை 1 முதல் ஆதார் இணைப்பு கட்டாயம். ஜூலை 15 முதல், ஆதார் O.T.P சரிபார்ப்பு வேண்டும். அதாவது, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் O.T.P பாஸ்வேர்டு போட்டு மட்டுமே தட்கல் டிக்கெட் கிடைக்கும்.

56
எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு – விமான காப்பீடு நிறுத்தம்
Image Credit : Google

எஸ்.பி.ஐ கிரெடிட் கார்டு – விமான காப்பீடு நிறுத்தம்

முன்பே SBI கிரெடிட் கார்டில் விமான டிக்கெட் புக்கிங் செய்தால், இலவசமாக ரூ.1 கோடி விபத்து காப்பீடு இருந்தது. ஜூலை 15 முதல், இது நிறுத்தப்படுகின்றது.  SBI ELITE, Miles ELITE, Miles PRIME – ₹1 கோடி காப்பீடு கிடையாது. SBI PRIME, PULSE – ₹50 லட்சம் காப்பீடு கிடையாது.இனி விமான பயணத்தில் தனியாக காப்பீடு எடுக்க வேண்டும்.

66
வருமான வரி தாக்கல் – கால அவகாசம் நீட்டிப்பு
Image Credit : freepik

வருமான வரி தாக்கல் – கால அவகாசம் நீட்டிப்பு

முதலில், வருமான வரி தாக்கல் கடைசி தேதி ஜூலை 31 என்று இருந்தது. இப்போ, செப்டம்பர் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனா, கடைசிநாள் வரைக்கும் காத்திருக்காமல் முன்பே தாக்கல் செய்து விடுவது நல்லது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
பான் அட்டை
பான் ஆதார் இணைப்பு
பாரத ஸ்டேட் வங்கி
இந்தியா
வணிகம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image2
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Recommended image3
ட்ரோன் முதல் விண்வெளி ஜி.பி.எஸ் வரை: 21 வயதில் சிலிக்கான் வேலியையே அதிர வைக்கும் இந்திய ஜென்-இசட் இளைஞர்கள்!
Related Stories
Recommended image1
Ration Shop : இனி ரேஷன்கடைக்கு அலைய வேண்டிய தேவை இல்லை.! ஜூலை 1 முதல் தேதி குறித்த அரசு
Recommended image2
Car Price Hike : ஜூலை 1 முதல்.. கார் விலை உயரப்போகுது.. முழு விபரம் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved