ரூ.151 கோடியை குருதட்சணையாக முகேஷ் அம்பானி வழங்கியது ஏன்?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.151 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். தனது வளர்ச்சிக்கு வித்திட்டதற்கு நன்றிக்கடனாக இந்த தொகையை வழங்குவதாக அவர் தெரிவித்தார்.

முகேஷ் அம்பானி குரு தட்சணை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, தனது கல்வி வாழ்க்கையில் முக்கிய பங்காற்றிய ஐ.சி.டி. கல்வி நிறுவனத்திற்கு ரூ.151 கோடி குருதட்சணை வழங்கியுள்ளார். 1970களில் மும்பை இன்ஸ்டிடியூட் ஆஃப் கெமிக்கல் டெக்னாலஜியில் (ஐ.சி.டி) பட்டம் பெற்ற அம்பானி, சமீபத்தில் அங்கு சென்று தனது கல்லூரி நாட்களை நினைவு கூர்ந்தார்.
₹151 கோடி நன்கொடை
தனது வளர்ச்சிக்கு வித்திட்ட ஐ.சி.டிக்கு நன்றிக்கடனாக இந்த தொகையை வழங்குவதாக அவர் தெரிவித்தார். ஐ.சி.டி பேராசிரியர் எம்.எம். சர்மாவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அம்பானி, சர்மாவின் முதல் வகுப்பே தனக்கு மிகுந்த உத்வேகத்தை அளித்ததாகக் குறிப்பிட்டார்.
முகேஷ் அம்பானி நன்கொடை
தனது தந்தை திருபாய் அம்பானியைப் போலவே, சர்மாவும் இந்திய தொழில்துறையை உலகளவில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற கனவு கண்டதாகவும், அந்தக் கனவு இன்று நனவாகி வருவதாகவும் அவர் கூறினார். கல்லூரி நிகழ்ச்சியில் சுமார் மூன்று மணி நேரம் செலவிட்ட அம்பானி, பல்வேறு துறைகளுக்கும், வகுப்பறைகளுக்கும் சென்று பார்வையிட்டார்.