அரசின் இந்த திட்டத்தில் ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. மாதம் ரூ.5000 வருமானம் பெறலாம்..
தபால் அலுவலக திட்டங்களில் மிகவும் பிரபலமான திட்டம் தான் மாதாந்திர சேமிப்பு திட்டம் ஆகும்.
பொதுமக்களுக்கு பணத்தை சேமிக்க உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசின் திட்டங்கள் என்பதால் இதுபோன்ற திட்டங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் தபால் அலுவலக திட்டங்களில் மிகவும் பிரபலமான திட்டம் தான் மாதாந்திர சேமிப்பு திட்டம்.
Post Office Monthly Income Scheme's limit increased
இந்த திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை வட்டியாக பெறலாம். பணம் பாதுகாப்பாக இருப்பதுடன், ஒவ்வொரு மாதமும் உத்திரவாத வருமானமாக வட்டி கிடைக்கும் என்பதால் இது சிறந்த திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப முதலீடு செய்யும் பல சிறு சேமிப்பு திட்டங்களை தபால் அலுவலகங்கள் மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுபோன்ற திட்டங்களில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் ஒன்று. இந்த திட்டத்திற்கு தற்போது 7.4% வட்டி வழங்கப்படுகிறது.
அதன்படி திட்டத்தில் கணக்கு வைத்திருப்பவர் ரூ.1,000 முதல் ரூ.9 லட்சம் வரையிலும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சம் வரையிலும் முதலீடு செய்யலாம்.
உதாரணமாக தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தில் ஒருவர் ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், அவருக்கு 7.4% வட்டியில் ரூ.5,325 மாத வருமானம் கிடைக்கும்.இந்த திட்டத்தின் முதிர்வு காலத்திற்கு பின் மீண்டும் 9 லட்சத்தை திரும்ப பெறலாம்.
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். ஒரு வருடத்தை முடிக்கும் முன் கணக்கை முன்கூட்டியே மூட முடியாது. ஒரு வருடத்திற்கு பிறகு முன்கூட்டியே மூடினால் அபராதம் விதிக்கப்படும்.
எடுத்துக்காட்டாக, தபால் அலுவலக எம்ஐஎஸ் கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரை முதலீடு செய்தால், பதவிக்காலம் முடியும் வரை ஒவ்வொரு மாதமும் மாதாந்திர வட்டியைப் பெறுவீர்கள்.
ஐந்தாண்டு காலத்தின் முடிவில் ரூ.9 லட்சம் வைப்புத் தொகையைப் பெறுவீர்கள். இடைப்பட்ட காலத்தில் முதலீட்டு தொகையை பெற முடியாது. எனினும் அரசு உத்தரவாதம் அளிக்கும் திட்டம் என்பதால் இது பாதுகாப்பான திட்டமாக கருதப்படுகிறது.