Gold Rate Today : தொடர்ந்து சரியும் தங்க விலை.. இது சரியான நேரம் - எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலைகளை காண்போம்.

கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்துக்கு சென்று வருகிறது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு சவரனுக்கு 44 ஆயிரத்தை தொட்டது.
தங்கத்தின் விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் தங்கம் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
நேற்றைய நிலவரத்தின்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ 44,320 ஆக விற்பனை செய்யப்பட்டது.22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540 ஆக விற்பனையானது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
இன்றைய (மார்ச் 28) நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 குறைந்து 44,080க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கம் கிராமுக்கு 30 குறைந்து 5,510க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை பொறுத்தவரை சில்லறை வர்த்தகத்தில் 30 காசுகள் குறைந்து 75.70க்கும், ஒரு கிலோ வெள்ளி 55,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.