பெண்களுக்கு ரூ. 5 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கும் அரசு! உடனே அப்ளை பண்ணுங்க!
மத்திய அரசின் லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
Lakhpati Didi Yojana
மத்திய அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பல்வேறு மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அரசு இந்த திட்டங்களை கொண்டு வருகிறது. அரசின் பெரும்பாலான திட்டங்கள் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோருக்கானது. அரசின் இந்த இதிட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைகின்றனர்.
அந்த வகையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து துறைகளிலும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வருகிறது.
Lakhpati Didi Yojana
குறிப்பாக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் புதிய திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பெண்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது., அதுவும் வட்டியில்லா. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி பெண்கள் தங்கள் எப்படி தொழில் தொடங்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
லக்பதி திதி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் அரசு 5 லட்சம் வழங்குகிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி லக்பதி திதி யோஜனா திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது.
Lakhpati Didi Yojana
இந்தத் திட்டத்தின் நோக்கம் பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதும், அவர்கள் தொழில் தொடங்க உதவுவதும் ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற, பெண்கள் சுயஉதவிக்குழுவில் சேர வேண்டும்.
பெரும்பாலும் கிராமப்புறங்களில் வாழும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டவை இந்த மகளிர் சுய உதவி குழுக்கள்.. ஒரு பெண் தன் சொந்த தொழிலைத் தொடங்க விரும்பினால், அவள் சுய உதவிக் குழு மூலம் தனது வணிகத் திட்டத்துடன் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.
Lakhpati Didi Yojana
சுயஉதவி குழுக்களில் இணைவது அவசியம்
லக்பதி திதி திட்டத்தின் கீழ் பெண்கள் பயன்பெற, சுயஉதவி குழுவில் சேர வேண்டியது அவசியம். இந்த குழுவில் உள்ள பெண்களுக்கு அரசு மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. மேலும், அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியின் போது பெண்களின் திறன்கள் வளர்க்கப்படுகின்றன.
Lakhpati Didi Yojana
இந்த வழியில் கடனுக்கு விண்ணப்பிக்கவும்
லக்பதி திதி யோஜனா திட்டத்தின் கீழ், சுயஉதவி குழுவில் சேர்ந்த பிறகு, பெண் ஒரு வணிகத் திட்டத்தை உருவாக்க வேண்டும். அதன்பின், சுயஉதவிக்குழு மூலம் அந்த தொழில் திட்டம் அரசுக்கு அனுப்பப்படும். அரசு அதிகாரிகள் விண்ணப்பத்தை பரிசீலிப்பார்கள். அதன்பின், விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
Lakhpati Didi Yojana
இதன் மூலம் பெண்கள் தங்கள் தொழிலை தொடங்கலாம். தொடர்ந்து வெற்றிகரமாக தங்கள் தொழிலை நடத்துவதன் மூலம் பெண்கள் பொருளாதார ரீதியில் சுதந்திரமாக செயல்படலாம். யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.