குறையும் சமையல் எண்ணெய் விலை! அரசின் புதிய அறிவிப்பு!
அரசு கச்சா சூரியகாந்தி, சோயா, மற்றும் பருப்பு எண்ணெய்களின் இறக்குமதி சுங்கத்தை 20% இலிருந்து 10% ஆகக் குறைத்துள்ளது. இதனால் எண்ணெய் விலை குறைந்து, பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறையும் சமையல் எண்ணெய்!
சமீப காலங்களில், உணவுப் பயன்பாட்டிற்கான எண்ணெய்களின் விலை வெகுவாக உயர்ந்து, சாதாரண மக்கள் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கவே முடியாத நிலை ஏற்பட்டது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பரில், அரசு இறக்குமதி சுங்கத்தை உயர்த்தியதும் அதன் பின் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்ததும் இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.இதனால், தினசரி சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் விலை கடுமையாக அதிகரித்து ஒவ்வொரு குடும்பத்திலும் செலவுகள் சுமையாக மாறின. இந்த நிலையில், மத்திய அரசு சாதாரண மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணச் செய்தியை அறிவித்துள்ளது.கச்சா சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய் மற்றும் பருப்பு எண்ணெய்கள் மீது விதிக்கப்பட்ட அடிப்படை சுங்க வரியை நேரடியாக 20% இலிருந்து 10% ஆக குறைத்துள்ளதாக மத்திய அரசு அதில் தெரிவித்துள்ளது. இதானால் கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இடையிலான வரி வித்தியாசம் 8.75% இலிருந்து 19.25% ஆக உயர்ந்துள்ளது.
ஏன் சுங்கம் குறைக்கப்பட்டது?
கடந்த சில மாதங்களாக, எண்ணெய் விலைகள் கட்டுப்பாடின்றி உயர்ந்துகொண்டிருந்தன. செப்டம்பர் 2024ல், அரசு உள்ளூர் எண்ணெய் தொழிற்துறையை ஊக்குவிக்க இறக்குமதி சுங்கத்தை உயர்த்தியது. ஆனால் இதன் எதிர்விளைவாக, சர்வதேச சந்தையிலும் எண்ணெய் விலை உயர்ந்ததால், இந்தியாவிலுள்ள எண்ணெய்களின் விலை மேலும் அதிகரித்தது.இதனால், பொதுமக்களின் சமையல் செலவுகள் பல மடங்கு உயர்ந்து, ஒரு எண்ணெய் பாட்டிலைக் கூட வாங்க முனைந்தால் இருமுறை யோசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த சூழ்நிலையில், அரசு தற்போது ஒரு புதிய முடிவை எடுத்துள்ளது. மூல எண்ணெய்களுக்கு சுங்கம் குறைக்கப்பட்டிருப்பதால், எண்ணெய் விலை குறையும், இதன் நேரடி பலன் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரி வித்தியாசம் அதிகரிப்பதன் விளைவு என்ன?
கச்சா சமையில் எண்ணெய் என்பது இன்னும் சுத்திகரிக்கப்படாத நிலையில் இருக்கும் எண்ணெய். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் என்பது நேரடியாக சமையலுக்கு பயன்படுத்தக்கூடியது. முந்தைய நிலைமையில், இவ்விரண்டுக்கும் இடையிலான சுங்க வித்தியாசம் 8.75% தான். அதனால், நேரடியாக சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் அதிகம் இறக்குமதி செய்யபட்டன. தற்போது, இந்த வித்தியாசம் 19.25% ஆக உயர்த்தப்பட்டதால், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் இறக்குமதி செய்ய அதிகமாக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இதானால் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய்கள் இறக்குமதி செய்து இந்தியாவிலேயே சுத்திகரிப்பதையே தேர்வுசெய்யும். இதனால், இந்தியாவின் சுத்திகரிப்பு தொழிற்துறைக்கு வேலை வாய்ப்பு, வளர்ச்சி மற்றும் இடைக்கால நிவாரணம் கிடைக்கும். மேலும், இந்த மாற்றத்தால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் விலையும் குறையக்கூடும். இதன் நேரடி நன்மை பொதுமக்களுக்கு கிடைக்கும்.
நன்மை பொதுமக்களுக்கு எப்படிக் கிடைக்கும்?
இந்த சுங்க குறைப்பின் முழு நன்மையும் மக்கள் வரை சென்றடைய வேண்டும் என அரசு தெளிவாக அறிவித்துள்ளது. எண்ணெய் விலை குறைக்கப்படவேண்டும் என உணவுப்பொருள் எண்ணெய் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு இதுகுறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
உண்மையில் விலை குறையுமா?
உண்மையில் விலை குறையுமா?… இது தான் அனைவருக்கும் உள்ள கேள்வி. அரசாங்கம் சுங்கத்தை குறைத்துள்ளது. ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் அதன் நன்மையை மக்களுக்கு தருமா? பல்வேறு சந்தர்ப்பங்களில், இந்த சலுகைகளை நிறுவனங்கள் தங்களுக்கே வைத்துக்கொண்டு, விலையை குறைக்காமலேயே வைத்திருந்துள்ளன.ஆனால் இந்த முறையில் விலை குறைக்கவேண்டும் என்று அரசு கடுமையான உத்தரவை வழங்கியுள்ளது. எனினும், இந்த நடவடிக்கை சந்தையில் போட்டியை அதிகரித்து, உண்மையான விலை குறைவை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது ,இதுவே சாதாரண மக்களுக்கு உண்மையான நிவாரணமாக அமையும்.சுருக்கமாகச் சொல்வதானால் "அரசின் இந்த முடிவு, தினசரி விலை ஏற்றத்தால் சலித்துவரும் சாதாரண மக்களின் நெஞ்சிறை வியர்வைக்கு பதிலாக ஒரு சிறு நிம்மதியை அளிக்கக் கூடிய முயற்சியாக இருக்கிறது