புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) முக்கிய கட்டுப்பாடு! அரசு ஊழியர்களுக்கு செக்!
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (UPS) ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள நிலையில், இதில் முக்கிய கட்டுப்பாடு ஒன்று விதிக்கப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) முக்கிய கட்டுப்பாடு! அரசு ஊழியர்களுக்கு செக்!
மத்திய அரசு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) கொண்டு வர உள்ளது. தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு UPS ஒரு விருப்பமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு உறுதியான ஊதியத்தைப் பெறலாம்.
அதாவது NPS திட்டத்தின் கீழ் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களும், வரும்காலங்களில் மத்திய அரசு பணியில் சேரும் ஊழியர்களும் UPS திட்டத்தை தேர்வு செய்யலாம். ஆனால் இது கட்டாயமில்லை. நீங்கள் விருப்பப்பட்டால் NPS ஓய்வூதிய திட்டத்திலேயே தொடரலாம். புதிய ஓய்வூதிய திட்டத்தில் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணிபுரிந்த ஒரு அரசு ஊழியர் முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி அடிப்படை ஊதியத்தில் 50% தொகையை ஓய்வூதியமாக பெறுவார்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
ஆனால் அந்த ஊழியர் பணியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது ராஜினாமா செய்தாலோ உத்தரவாத ஓய்வூதியம் கிடைக்காது. அதே வேளையில் ஒரு அரசு ஊழியரின் சர்வீஸ் 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால், ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.10,000 உத்தரவாத ஓய்வூதியம் வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தகுதியுடையவர்கள் யார்?
இப்போது தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் இருக்கும் அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதியானவர்கள். ஒரு அரசு ஊழியர் UPS திட்ட விருப்பத்தை தேர்வு செய்தால் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது NPS திட்டத்தில் உள்ள அந்த ஊழியரின் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்ணில் உள்ள நிதி UPS க்கு மாற்றம் செய்யப்படும்.
புதிய ஓய்வூதியத் திட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்! யாருக்கு பலன் கிடைக்கும்?
புதிய ஓய்வூதியத் திட்டம்
UPS ஐ தேர்ந்தெடுத்த மத்திய அரசு ஊழியர் ஓய்வூதியத் திட்ட விருப்பத்தை மாற்ற முடியுமா?
ஒரு ஊழியர் UPS விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், அதன் அனைத்து நிபந்தனைகளும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதப்படும். மேலும் அத்தகைய விருப்பம் ஒருமுறை பயன்படுத்தப்பட்டால், அது இறுதியானதாக இருக்கும். அதாவது, நீங்கள் UPS ஐ தேர்ந்தெடுத்தவுடன், உங்கள் ஓய்வூதியத் திட்ட விருப்பத்தை NPS போன்ற வேறு திட்டத்திற்கு மாற்ற முடியாது. தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் NPS ல் இருந்து UPS க்கு மாற முடியும். ஆனால் UPS ல்இருந்து NPSக்கு மாற முடியாது.
மத்திய அரசு ஊழியர்கள்
UPS-ன் கீழ் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஊதியம் என்ன?
10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த சேவைக்குப் பிறகு ஓய்வூதியம் பெறப்பட்டால், பங்களிப்புகளை சரியான நேரத்தில் மற்றும் வழக்கமான முறையில் வரவு வைத்து, திரும்பப் பெறுதல்கள் இல்லாமல் இருந்தால், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் மாதத்திற்கு ரூ.10,000 குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட ஊதியம் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது.