Gold Rate Today July 8: தங்கம் விலை மீண்டும் உச்சம்! எவ்ளோ அதிகம் தெரியுமா?!
தங்கத்தின் விலையை சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு, தேவை மற்றும் வழங்கல் போன்ற காரணிகள் பாதிக்கின்றன. இறக்குமதி வரி, ஜிஎஸ்டி போன்றவை சேர்த்து இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்
வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய் கிழமை ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்துள்ளது. தேவை அதிகரித்துள்ளதே விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
எல்லோரும் விரும்பும் தங்கமே தங்கம்
தங்கம் என்பது இந்தியாவில் காலத்துக்கு காலம் மதிப்பும், பெருமையும் கொண்ட ஒரு முக்கியமான உலோகமாக இருக்கிறது. அது செல்வச் சின்னம் மட்டுமல்லாமல், பலருக்கு பாதுகாப்பான முதலீட்டுப் பொருளாகவும் விளங்குகிறது. விவாகரங்க்கள், பெரும்பாரம்பரிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள் என எந்தவிதமான மகிழ்ச்சியான தருணங்களிலும் தங்கம் வாங்கும் பழக்கம் நம் நாட்டில் பரவலாக உள்ளது. அதனால், தங்கத்தின் விலை எப்போதும் மக்களின் அக்கறையை ஈர்க்கும் ஒரு விஷயமாக உள்ளது.
உலகமே எதிர்பார்க்கும் விலை நிலவரம்
தங்கத்தின் விலை பல காரணிகளால் நிர்ணயிக்கப்படுகிறது. முக்கியமாக சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு, தங்கத்தின் வழங்கல் மற்றும் தேவை, மத்திய வங்கிகளின் கொள்முதல் மற்றும் விற்பனை போன்றவை விலையில் நேரடி தாக்கம் ஏற்படுத்துகின்றன. உலக சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் தங்கம் எவ்வளவு என்று பார்க்கப்படுகிறது. அதை இந்திய ரூபாய்க்கு மாற்றும்போது, அதில் இறக்குமதி வரி, ஜிஎஸ்டி, நகை தயாரிப்பு கட்டணம் போன்றவை சேர்க்கப்பட்டு விலை தீர்மானிக்கப்படுகிறது.
தூய்மையான் தங்கம் என்றால் என்ன?
சராசரியாக இந்தியாவில் 22 கரட் தங்கம் நகை தயாரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது சுமார் 91.6% தூய்மையை கொண்டிருக்கும். 24 கரட் தங்கம் மிக தூயதாக இருப்பதால், காசுகள் அல்லது தங்கத் தாள் வடிவில் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகமாகும் காலங்களில் மக்கள் நகை வாங்கும் ஆர்வம் சற்று குறையும், ஆனால் முதலீட்டு விருப்பம் அதிகரிக்கும். அதனால் கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் கோல்ட், SGB (Sovereign Gold Bond), Gold ETF போன்ற முதலீட்டு வழிகளும் பிரபலமடைந்துள்ளன. இவை தங்கத்தை நகையாக வாங்காமல், முதலீட்டுப் பொருளாக வைக்கும் வசதியை வழங்குகின்றன.
இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து 9 ஆயிரத்து 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சரவனுக்கு 400 ரூபாய் அதிகரித்து 72,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருந்த போதிலும் வெள்ளி விலையில் மாற்றம் காணப்படவில்லை. வெள்ளி 1 கிராம் 120 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் வாங்கும் போது இதையும் கவனிக்கவும்
இப்போது தங்கம் வாங்கும் போது அதன் தூய்மை, பில், சரியான விற்பனைக்கடையை தேர்வு செய்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தங்கம் நம் பாரம்பரியத்தின் பெருமையை காட்டும் மட்டுமல்லாமல், எதிர்காலத்துக்கு பாதுகாப்பாக சேமிப்பு ஆகும் என்பதையும் அனைவரும் நினைவில் வைக்கலாம்.