Gold Rate Today: தங்கம் விலை சரிவு.! நகைக் கடைகளில் கூட்ட நெரிசல்.!
தங்கம் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 9170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச முதலீட்டாளர்கள் முதலீடுகளை வெளியே எடுப்பதே விலை சரிவுக்கு காரணம். சந்தை நிபுணர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

தங்கம் விலை சரிவு
கடந்த வாரம் உயர்ந்து வந்த தங்கம் விலை இன்றைய காலை வர்த்தகத்தில் குறைந்துள்ளது. இதனால் திருமண ஏற்பாடுகள் செய்து வருபவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விலை நிலவரத்தை கேட்டவுடன் பலரும் நகை கடைக்கு படையெடுக்க தொடங்கினர்.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
சென்னையில் ஆபரணத்தங்கம் விலைக கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து 9170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 73,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைய இதுதான் காரணம்.!
சர்வதேச முதலீட்டாளர்கள் உலோகங்களில் இருந்த முதலீடுகளை வெளியே எடுக்க தொடங்கியதே விலை சரிவுக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை முதலீட்டாளர்களும், அடித்தட்டு மக்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர். இந்தியாவில் தேவை அதிகரித்துள்ள போதிலும் சர்வதேச சந்தையின் நிலைப்பாடு காரணமாக தங்கம் விலை மேலும் குறையும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.