MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Tatkal Ticket : இந்த சூப்பர் ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க இனி தட்கல் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்..!

Tatkal Ticket : இந்த சூப்பர் ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க இனி தட்கல் டிக்கெட் ஈஸியா கிடைக்கும்..!

Tatkal Ticket Booking Tips : IRCTC-யில் தட்கல் டிக்கெட் புக் செய்யும்போது, கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் இந்த ஆப் ட்ரிக்கை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Ganesh A
Published : May 21 2026, 11:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Train Tatkal Ticket Booking Tips
Image Credit : Getty

Train Tatkal Ticket Booking Tips

கோடை விடுமுறை ஆரம்பித்தாலே போதும், ரயில்களில் கால் வைக்கக்கூட இடம் இருக்காது. இப்படிப்பட்ட சமயத்தில் திடீரென எங்காவது பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால், நம்மிடம் இருக்கும் ஒரே வழி தட்கல் டிக்கெட்தான். ஆனால், புக்கிங் தொடங்கிய அடுத்த நொடியே எல்லா டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிடும் என்பதுதான் இதில் உள்ள சிக்கல். லாகின் செய்து, விவரங்களைப் பூர்த்தி செய்வதற்குள் 'வெயிட்டிங்' லிஸ்ட் வந்துவிடும். உங்களுக்கும் இப்படித்தான் அடிக்கடி நடக்கிறதா? இனி அந்த டென்ஷனை விடுங்கள். இன்று, வெறும் 2 நிமிடங்களில் கன்ஃபார்ம் தட்கல் டிக்கெட்டை புக் செய்ய உதவும் IRCTC-யின் ஒரு சூப்பர் 'மாஸ்டர் ட்ரிக்' பற்றி உங்களுக்குச் சொல்கிறோம். அந்த எளிய வழிகளைப் பற்றிப் பார்ப்போம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தட்கல் டிக்கெட் புக்கிங் நேரம்
Image Credit : stockPhoto

தட்கல் டிக்கெட் புக்கிங் நேரம்

முதலில், சரியான நேரத்தைக் குறித்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், தட்கல் புக்கிங்கில் ஒவ்வொரு நொடியும் முக்கியம். ஏசி வகுப்பு (2AC, 3AC, CC) டிக்கெட்டுகளுக்கான புக்கிங் காலை 10:00 மணிக்கும், ஏசி இல்லாத வகுப்பு (Sleeper) டிக்கெட்டுகளுக்கான புக்கிங் காலை 11:00 மணிக்கும் தொடங்கும்.

Related Articles

Related image1
தட்கல் டிக்கெட் ரத்து என்றாலே ரீஃபண்ட் கிடைக்கும்னு நினைச்சீங்களா? உண்மை வேற!
Related image2
IRCTC: தட்கல் டிக்கெட்டுகளுக்கு இனி இது கட்டாயம்.. புதிய ரூல்ஸ் வந்தாச்சு
35
இந்த ட்ரிக் மூலம் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலாம்
Image Credit : Wikipedia

இந்த ட்ரிக் மூலம் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகலாம்

தட்கல் டிக்கெட் கிடைக்காமல் போவதற்கு முக்கியக் காரணம், புக்கிங் செய்யும்போது பயணிகளின் பெயர், வயது மற்றும் பெர்த் விருப்பம் போன்றவற்றை டைப் செய்ய ஆகும் நேரம்தான். நீங்கள் இதையெல்லாம் டைப் செய்து முடிப்பதற்குள், வேறு யாராவது டிக்கெட்டை வாங்கிவிடுவார்கள். இதற்கு மிக எளிமையான தீர்வுதான் IRCTC-யின் 'மாஸ்டர் லிஸ்ட்' (Master List Feature) வசதி. புக்கிங் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் ஒரு சிறிய வேலையைச் செய்து வைத்தால் போதும்.

45
ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான வழிமுறை
Image Credit : ANI

ரயில் டிக்கெட் புக் செய்வதற்கான வழிமுறை

தட்கல் புக்கிங் நேரத்திற்கு (காலை 10 அல்லது 11 மணி) சுமார் 15-20 நிமிடங்களுக்கு முன்பே IRCTC ஆப் அல்லது வெப்சைட்டைத் திறந்து கொள்ளுங்கள். உங்கள் கணக்கின் 'My Account' பகுதிக்குச் சென்று, அங்குள்ள 'My Master List' ஆப்ஷனைக் கிளிக் செய்யுங்கள்.இங்கே, நீங்கள் யாருக்கெல்லாம் டிக்கெட் புக் செய்ய விரும்புகிறீர்களோ, அவர்களின் பெயர், வயது மற்றும் பாலினம் போன்ற விவரங்களை முன்கூட்டியே 'Add Passenger' கொடுத்து சேமித்துக்கொள்ளுங்கள்.

இப்போது, புக்கிங் நேரத்தில் நீங்கள் பயணிகள் விவரம் உள்ள பக்கத்திற்கு வரும்போது, பெயரை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அங்கே 'Add Existing' என்ற ஆப்ஷன் தோன்றும். அதைக் கிளிக் செய்தவுடன், நீங்கள் சேமித்து வைத்த மாஸ்டர் லிஸ்ட் திறக்கும். பெயர்களைத் தேர்ந்தெடுத்து, நேரடியாக பேமெண்ட் பக்கத்திற்குச் செல்லுங்கள்!

55
ரயில் டிக்கெட் புக்கிங்கில் மேலும் 2 முக்கிய டிப்ஸ்
Image Credit : our own

ரயில் டிக்கெட் புக்கிங்கில் மேலும் 2 முக்கிய டிப்ஸ்

நெட் பேங்கிங் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்போது, OTP வருவதற்கும் பாஸ்வேர்ட் போடுவதற்கும் நேரம் வீணாகும். தட்கல் டிக்கெட்டிற்கு எப்போதும் UPI (BHIM, பேடிஎம், போன்பே அல்லது ஜீபே) முறையைப் பயன்படுத்துங்கள். இதில் உங்கள் போனுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வரும், பின் நம்பரை உள்ளிட்டதும் பணம் செலுத்திவிடலாம். அதைவிட வேகமாக பணம் செலுத்த, IRCTC வேலட்டில் முன்கூட்டிய பணம் போட்டு வைத்திருந்தால், சட்டென பணம் செலுத்தி டிக்கெட் புக் செய்துவிடலாம். புக்கிங் தொடங்குவதற்குச் சரியாக 2-3 நிமிடங்களுக்கு முன்பு லாகின் செய்யுங்கள். நீங்கள் அரை மணி நேரத்திற்கு முன்பே லாகின் செய்து காத்திருந்தால், சரியாக 10 அல்லது 11 மணிக்கு ஆப் உங்களை தானாகவே லாக் அவுட் செய்துவிட வாய்ப்புள்ளது. அதையும் கவனத்தில் கொண்டு புக்கிங் செய்யுங்கள்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தட்கல் டிக்கெட்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Side Business Ideas: வெறும் ₹200 முதலீட்டில் 5 சூப்பர் பொருட்கள்! வீட்டில் இருந்தே செமயா சம்பாதிக்கலாம்!
Recommended image2
Business Ideas: வெறும் ரூ.200 முதலீட்டில் வீட்டிலிருந்தபடியே கை நிறைய சம்பாதிக்கலாம்.! பெண்களுக்கான சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள்.!
Recommended image3
Free Aadhaar Update : ரூ.75 செலவில்லாமல் ஆதாரை அப்டேட் செய்யலாம்.. மக்களுக்கு வந்த பெரிய குட் நியூஸ்
Related Stories
Recommended image1
தட்கல் டிக்கெட் ரத்து என்றாலே ரீஃபண்ட் கிடைக்கும்னு நினைச்சீங்களா? உண்மை வேற!
Recommended image2
IRCTC: தட்கல் டிக்கெட்டுகளுக்கு இனி இது கட்டாயம்.. புதிய ரூல்ஸ் வந்தாச்சு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved