MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Indian Railway: ரயில் தட்கல் டிக்கெட் புக் பண்றது இனி ஈஸி! IRCTC மாஸ் அப்டேட்!

Indian Railway: ரயில் தட்கல் டிக்கெட் புக் பண்றது இனி ஈஸி! IRCTC மாஸ் அப்டேட்!

Indian Railway: இந்தியன் ரயில்வேயின் IRCTC மாஸ் அப்டேட் ஆகிறது. சூப்பர் மாற்றங்கள் செய்யப்படுவதால் இனி மிக விரைவில் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியும். இது தொடர்பான் முழு விவரங்களை பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Aug 24 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
IRCTC வெப்சைட் அப்டேட்
Image Credit : GEMINI

IRCTC வெப்சைட் அப்டேட்

இந்திய ரயில்வேயின் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் தளமான IRCTC தனது சிஸ்டத்தை முழுமையாக நவீனப்படுத்த தயாராகிவிட்டது. தட்கல் மற்றும் முன்பதிவு நேரங்களில் ஏற்படும் சர்வர் க்ராஷ், வெப்சைட் மெதுவாகச் செயல்படுவது, லாகின் செய்ய முடியாதது போன்ற நிரந்தரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, IRCTC தனது 'நெக்ஸ்ட் ஜெனரேஷன் இ-டிக்கெட்டிங்' (NGET) சிஸ்டத்தை பெரிய செலவில் அப்கிரேடு செய்ய உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஏன் இந்த மாற்றம்?
Image Credit : IRCTC

ஏன் இந்த மாற்றம்?

தற்போது நாட்டில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்டுகளில் சுமார் 89% ஆன்லைன் மூலமாகவே புக் செய்யப்படுகின்றன. கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 57.90 கோடிக்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்டுள்ளன. தினமும் காலை 8, 10, மற்றும் 11 மணிக்கு தட்கல்/முன்பதிவு தொடங்கும் பீக் ஹவர்ஸில் கோடிக்கணக்கானோர் ஒரே நேரத்தில் லாகின் செய்வதால், வெப்சைட் முடங்கிப் போகிறது. இதைத் தடுப்பதற்காகவே இந்த அப்கிரேடு மேற்கொள்ளப்படுகிறது.

IRCTC இந்த திட்டத்திற்காக சுமார் ரூ.150 கோடி செலவு செய்கிறது. இதில் இரண்டு முக்கிய தொழில்நுட்ப மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. தற்போது நிமிடத்திற்கு 37,000 டிக்கெட்டுகள் புக் செய்யும் திறன் மட்டுமே உள்ளது. புதிய ஹார்டுவேர், சர்வர், நெட்வொர்க்கிங் மற்றும் சாஃப்ட்வேர் அப்கிரேடு மூலம், இந்தத் திறனை நிமிடத்திற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகளாக அதிகரிக்க உள்ளனர்.

Related Articles

Related image1
IRCTC Insurance: 45 பைசா போதும்.. ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் ரெடி.. ரயில் பயணிகளே மிஸ் பண்ணாதீங்க!
Related image2
IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!
34
கேப்ட்சா இருக்காது
Image Credit : Getty

கேப்ட்சா இருக்காது

ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறால் முக்கிய சர்வர் முடங்கினால், உடனடியாக செயல்படத் தொடங்கும் 'ஆக்டிவ்-ஆக்டிவ் டிசாஸ்டர் ரெக்கவரி' என்ற பேக்கப் சிஸ்டம், தெலங்கானாவின் செகந்திராபாத்தில் நிறுவப்பட்டு வருகிறது. ஜெய்ப்பூர் MNIT மாணவர்கள் கொடுத்த ஆலோசனைகளின் அடிப்படையில், ரயில்வே அமைச்சகம் வெப்சைட்டின் புதிய ‘பீட்டா’ (Beta) வெர்ஷனை உருவாக்கியுள்ளது. இதில் பயணிகளுக்கு 4 முக்கிய வசதிகள் கிடைக்கும்.புக்கிங் செய்யும்போது எரிச்சலூட்டும் தேவையில்லாத கேப்ட்சா (Captcha), பாப்-அப் மற்றும் மின்னி மறையும் கிராபிக்ஸ் போன்றவை நீக்கப்பட்டுள்ளன.

44
இனி டிக்கெட் புக்கிங் ஈஸி
Image Credit : Getty

இனி டிக்கெட் புக்கிங் ஈஸி

ஸ்லீப்பர், ஏசி, 3E என அனைத்து வகுப்புகளிலும் உள்ள சீட் இருப்பை ஒரே ஸ்கிரீனில் பார்க்க முடியும். மிகச் சில கிளிக்குகளில் டிக்கெட் புக்கிங்கை முடிக்கும் வகையில், புக்கிங் முறை எளிமையாகவும் வேகமாகவும் மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் விவரங்களை டைப் செய்வதைத் தவிர்க்க, பயணிகளின் தகவல்களை முன்கூட்டியே சேமித்து வைக்கும் 'மாஸ்டர் லிஸ்ட்' (Master List) வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்ப மாற்றங்களால், இனி வரும் காலங்களில் பயணிகள் எந்தவித தடையுமின்றி வேகமாகவும், எளிதாகவும் தட்கல் மற்றும் சாதாரண டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம்
IRCTC பயணச்சீட்டு முன்பதிவு
இந்திய இரயில்வே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gas Cylinder: கேஸ் சிலிண்டரில் A, B, C, D குறியீடு இருக்கா? உயிரைக் காக்கும் 10 செகண்ட் ரகசியம்!
Recommended image2
Women Free Bus Travel: பெண்களுக்கு இலவச பயணம்.! எந்த பேருந்துகளில் கட்டணம் கிடையாது?
Recommended image3
Free 3 LPG Cylinders Per Year: விலையில்லாமல் ஆண்டுக்கு 3 சிலிண்டர்.! யாருக்கு கிடைக்கும் தெரியுமா?
Related Stories
Recommended image1
IRCTC Insurance: 45 பைசா போதும்.. ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் ரெடி.. ரயில் பயணிகளே மிஸ் பண்ணாதீங்க!
Recommended image2
IRCTC New Beta Website: தட்கல் டிக்கெட் இனி மின்னல் வேகத்தில் புக் செய்யலாம்.. புது வெப்சைட் வந்தாச்சு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved