MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • IRCTC Insurance: 45 பைசா போதும்.. ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் ரெடி.. ரயில் பயணிகளே மிஸ் பண்ணாதீங்க!

IRCTC Insurance: 45 பைசா போதும்.. ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் ரெடி.. ரயில் பயணிகளே மிஸ் பண்ணாதீங்க!

IRCTC Insurance: நீங்கள் ரயில் டிக்கெட் புக் செய்யும்போது 45 பைசாவில் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்ளலாம். ஐஆர்சிடிசி இன்சூரன்ஸ் குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 09 2026, 08:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
வெறும் 45 பைசாவில் IRCTC Insurance
Image Credit : AI

வெறும் 45 பைசாவில் IRCTC Insurance

ஒரு காலத்தில் இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும் என்றாலே காப்பீட்டு நிறுவனங்களின் வாசலில் தவம் கிடக்க வேண்டும். பக்கம்பக்கமாக ஃபார்ம் நிரப்ப வேண்டும். ஆனால் இன்று எல்லாமே டிஜிட்டல் மயம். ஆன்லைனில் நமக்குப் பிடித்த பொருளை ஆர்டர் செய்யும் அதே நொடியில், அதற்கான காப்பீட்டையும் சேர்த்தே வாங்கும் எளிய வசதி இப்போது வந்துவிட்டது. புதிய மொபைல் வாங்கும்போது அதன் திரைப் பாதுகாப்பு மற்றும் திருட்டுப் பயத்திற்கு இன்ஷூரன்ஸ் போடுவது முதல், IRCTC-யில் ரயில் டிக்கெட் புக் செய்யும் போது பயணக் காப்பீடு எடுப்பது வரை எல்லாமே இந்த எம்படட் இன்சூரன்ஸ் மூலமாக சாத்தியமாகியுள்ளது.

ஐஆர்சிடிசி இன்சூரன்ஸ் எப்படி வேலை செய்கிறது?

எம்படட் இன்சூரன்ஸ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுகிறது. இன்சூரன்ஸ் நிறுவனங்களும், ஆன்லைன் தளங்களும் API மூலம் இணைக்கப்பட்டிருக்கும். இதனால், நீங்கள் ஒரு பொருளை வாங்கும்போதே இன்சூரன்ஸ் ஆப்ஷன் தானாகவே காட்டப்படும். IRCTC தளத்தில் வெறும் 45 பைசா பிரீமியத்தில் ரூ.10 லட்சம் வரை பயணக் காப்பீடு கிடைப்பது இதன் சிறப்பம்சம்.

இதையும் படிங்க: பிரியாணியையே ஓரங்கட்டிய 'அந்த' உணவு! ரயிலில் பயணிகள் அதிகம் ஆர்டர் செய்த ஃபுட் லிஸ்ட் இதோ!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஐஆர்சிடிசி இன்சூரன்ஸ் விதிமுறைகள்
Image Credit : Asianet News

ஐஆர்சிடிசி இன்சூரன்ஸ் விதிமுறைகள்

நாமினி விபரங்களை நிரப்புவது கட்டாயம்: டிக்கெட் புக் செய்தவுடன், இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து எஸ்எம்எஸ் (SMS) அல்லது மெயில் வரும். அதில் சென்று நாமினி (வாரிசுதாரர்) விபரங்களை உடனே அப்டேட் செய்ய வேண்டும். விபத்து ஏதேனும் ஏற்பட்டால் நாமினி விபரம் இருந்தால் மட்டுமே பணம் எளிதாகக் கிடைக்கும்.

யாருக்கெல்லாம் பொருந்தும்?: இது இந்தியக் குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டுப் பயணிகளுக்குப் பொருந்தாது. அதேபோல, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இந்த இன்ஷூரன்ஸ் கிடையாது.

பணப் பலன்கள் எப்படி பிரிக்கப்படுகிறது?:

  • பயணத்தின் போது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தாலோ அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டாலோ ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
  • பகுதி ஊனம் (Partial Disability) ஏற்பட்டால் ரூ. 7.5 லட்சம் வழங்கப்படும்.
  • காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் (Hospitalization) செலவிற்காக ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும்.
34
எம்படட் இன்சூரன்சில் இரண்டு வகை
Image Credit : social media

எம்படட் இன்சூரன்சில் இரண்டு வகை

ஆட்டோமேட்டிக் இன்சூரன்ஸ்: சில பொருட்களின் விலையிலேயே இன்ஷூரன்ஸ் தொகையும் சேர்க்கப்பட்டிருக்கும். வாடிக்கையாளர் தனியாகத் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. ஆப்ட்-இன் இன்சூரன்ஸ்: இன்சூரன்ஸ் வேண்டுமா வேண்டாமா என வாடிக்கையாளரே முடிவு செய்யலாம். சிறிய பிரீமியம் செலுத்தினால் போதும். தற்போது Flipkart, Amazon, Reliance Digital, Croma போன்ற தளங்களில் மொபைல், லேப்டாப், ஸ்மார்ட்வாட்ச் வாங்கும்போதும் இந்த வசதி கிடைக்கிறது.

இதனால் என்னென்ன நன்மைகள்?

எம்படட் இன்சூரன்ஸால் வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் உள்ளன. இதற்காக ஏஜென்ட்டைத் தேடி அலைய வேண்டாம். மிகக் குறைந்த பிரீமியத்தில் அதிக பாதுகாப்பு கிடைக்கும். நம்பகமான நிறுவனங்களிடமிருந்து கவரேஜ் கிடைப்பதால், விபத்து போன்ற எதிர்பாராத சமயங்களில் இது பெரிய உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க: 18 வருஷமா பெயரே இல்லாத இந்திய ரயில் நிலையம்! டிக்கெட் எப்படி எடுப்பாங்க தெரியுமா?

44
கால வரம்பு மற்றும் எக்ஸ்டெண்டட் வாரண்டி
Image Credit : Google

கால வரம்பு மற்றும் எக்ஸ்டெண்டட் வாரண்டி

பொருட்களைப் பொறுத்து இன்சூரன்ஸ் கால வரம்பு மாறும். குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்களுக்கு, தயாரிப்பாளர் தரும் வாரண்டி முடிந்த பிறகும், பழுதுபார்ப்பு செலவுகளை ஏற்கும் 'எக்ஸ்டெண்டட் வாரண்டி' ஆப்ஷனும் உள்ளது. எனவே, அடுத்த முறை IRCTC-யில் டிக்கெட் புக் செய்யும்போது, 45 பைசாவில் கிடைக்கும் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் ஆப்ஷனைத் தவறவிடாதீர்கள். இது பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
காப்பீடு
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nestle Milk Powder: இதை வாங்காதீங்க.. நெஸ்லே பால் பவுடருக்கு தடை.. விற்பனையை உடனே நிறுத்த உத்தரவு
Recommended image2
FD Invest : பெரிய வங்கிகளை விட அதிக வட்டி தரும் குட்டி வங்கிகள்! எந்த வங்கியில் எவ்வளவு FD வட்டி?
Recommended image3
Gold : தங்கத்தை அடமானம் வைக்குறதா? விக்குறதா? சில நேரம் விற்பதே ஏன் நல்லது தெரியுமா?
Related Stories
Recommended image1
Indian Railways: ரயிலில் இந்த 3 'தப்பு' பண்ணா ரூ.2000 ஃபைன், ஜெயில்! பயணிகளே உஷார்!
Recommended image2
Indian Railways: ஒரே ஒரு ரயில் டிக்கெட்டில் இந்தியாவையே சுத்தலாம்! 56 நாள் டூர்! 40% பணம் மிச்சம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved