MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ரூ.10 லட்சம் வட்டி! 3 மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!!

ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு ரூ.10 லட்சம் வட்டி! 3 மடங்கு லாபம் தரும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்!!

Post Office Term Deposit Scheme: போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் திட்டத்தில் 5 வருட FD சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கிறது. இத்திட்டத்தில் ரூ.5,00,000 முதலீடு செய்தால், ரூ.15,00,000க்கு மேல் ஈட்டலாம். இந்தத் திட்டம் 3 மடங்கு பலனைக் கொடுப்பது குறிப்பிடத்தக்கது.

2 Min read
Author : SG Balan
Published : Sep 16 2024, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
தபால் துறையில் சேமிப்பு

தபால் துறையில் சேமிப்பு

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் சிரமங்களைச் சந்திக்கக் கூடாது என நினைக்கிறார்கள். இதற்காக குழந்தை பிறந்த உடனேயே அனைத்து வகையான நிதித் திட்டமிடலையும் தொடங்குகிறார்கள். சிலர் குழந்தைகளின் பெயரில்  திட்டங்களில் முதலீடு செய்யத் தொடங்குகிறார்கள்.

28

மொத்தமாக ஒரு தொகையை முதலீடு செய்ய விரும்பினால், அதை போஸ்ட் ஆபிஸ் டெர்ம் டெபாசிட் அதாவது போஸ்ட் ஆஃபீஸ் TFD திட்டத்தில் முதலீடு செய்யலாம். வங்கிகளை விட தபால் அலுவலகத்தில் 5 வருட FD சிறந்த வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம், முதலீடு செய்யும் தொகையை மூன்று மடங்குக்கு மேல் பெருக்கலாம். அதாவது ரூ.5,00,000 முதலீடு செய்தால், ரூ.15,00,000க்கு மேல் சம்பாதிக்கலாம். இது எப்படி வேலை செய்யும் என்று தெரிந்துகொள்ளுவோம்.

38

5 லட்சத்தை 15 லட்சமாக மாற்ற, நீங்கள் முதலில் 5 ஆண்டுகளுக்கு அஞ்சல் அலுவலக FD இல் ரூ.5,00,000 முதலீடு செய்ய வேண்டும். போஸ்ட் ஆபிசில் 5 வருட FDக்கு 7.5 சதவீத வட்டி கிடைக்கும். அப்படிப்பட்ட நிலையில், தற்போதைய வட்டி விகிதத்தைக் கொண்டு கணக்கிட்டால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகை ரூ.7,24,974 ஆக இருக்கும். இந்தத் தொகையை நீங்கள் திரும்பப் பெற வேண்டியதில்லை. அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதை மீண்டும் முதலீடு செய்யவும்.

48

மீண்டும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், இந்த வழியில் 10 ஆண்டுகளில் வட்டி மூலம் ரூ. 5,51,175 சம்பாதிக்கலாம். இதனால் 10 ஆண்டுகளில் முதலீடு செய்த தொகை இரு மடங்காகும். அதாவது 10 வருடத்தில் ரூ.10,51,175 ஆக மாறும்.

58

இந்தத் தொகையை மீண்டும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை முதலீடு செய்ய வேண்டும். இதன் மூலம் முதலீடு செய்த ரூ.5 லட்சம் தொகை மொத்தம் 15 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்கும். 15வது ஆண்டு முதிர்வு நேரத்தில், முதலீடு செய்த 5 லட்சத்திற்கு வட்டி மட்டும் 10,24,149 ரூபாய் இருக்கும். இத்துடன் முதலீடு செய்த அசல் தொகையான ரூ.5 லட்சத்தையும் சேர்த்தால் மொத்தம் ரூ.15,24,149 கிடைக்கும்.

68

டீன் ஏஜ் பருவத்தில்தான் குழந்தைகளுக்கு படிப்புக்காக பணத்தேவை அதிகரிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த 15 லட்ச ரூபாயை பயன்படுத்திக்கொள்ள முடியும். ரூ.15 லட்சம் தொகையைப் பெற, தபால் அலுவலக FD-ஐ இரண்டு முறை 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்பது குறிப்ப்பிடத்தக்கது.

78

தபால் அலுவலகத்தின் 1 வருட FD முதிர்வு தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் முதலீட்டை நீட்டிக்கப்படலாம். 2 வருட FD முதிர்வு காலத்தின்போது 12 மாதங்களுக்குள் முதலீட்டை நீட்டிக்க வேண்டும். அதேசமயம் 3 மற்றும் 5 வருட FD நீட்டிப்புக்கு, முதிர்வு காலத்தின் 18 மாதங்களுக்குள் தபால் நிலையத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது தவிர, கணக்கைத் திறக்கும் நேரத்திலேயே முதிர்ச்சியடைந்த பிறகு மீண்டும் முதலீட்டை நீட்டிக்கக் கோரலாம்.

88
post office scheme

post office scheme

வங்கிகளைப் போலவே, போஸ்ட் ஆபிசிலும் வெவ்வேறு காலகட்டங்களுக்கான FDகளின் ஆப்ஷன்கள் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கும் வெவ்வேறு வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. தற்போதைய வட்டி விகிதங்கள் பின்வருமாறு-

ஒரு வருட கணக்கு - 6.9% ஆண்டு வட்டி
இரண்டு ஆண்டு கணக்கு - 7.0% ஆண்டு வட்டி
மூன்று ஆண்டு கணக்கு - 7.1% ஆண்டு வட்டி
ஐந்தாண்டு கணக்கு - 7.5% ஆண்டு வட்டி

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தபால் அலுவலகத் திட்டம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி ATM-களில் 10, 20, 50 ரூபாய் நோட்டுகள்.. அசத்தல் அறிவிப்பு.. இதோ முழு விவரம்!
Recommended image2
சிலிண்டர் தட்டுப்பாடு.. கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.. ஐபிஎல் போட்டிகள் நடக்குமா?
Recommended image3
இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் திடீர் பதவி விலகல்.. 3 லட்சம் பயணிகள் தவிப்பு.. ரூ.2000 கோடி இழப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved