MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Flight: இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்! டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்த இண்டிகோ!

Flight: இனி கம்மி காசுல விமானத்தில் பறக்கலாம்! டிக்கெட் விலையை அதிரடியாக குறைத்த இண்டிகோ!

Flight: குறைந்த செலவில் விமானப் பயணம் செய்ய விரும்புபவர்களுக்காக 'இண்டிகோ லைட்' என்ற புதிய கட்டண முறையை இண்டிகோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
| Updated : Jul 03 2026, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இண்டிகோ லைட் திட்டம்
Image Credit : X

இண்டிகோ லைட் திட்டம்

விமானத்தில் பயணம் செய்யும்போது, கேபின் பேக்கேஜ் மட்டும் எடுத்துச் செல்லும் பயணிகளுக்காகவே இண்டிகோ நிறுவனம் ஒரு சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 'இண்டிகோ லைட்' (IndiGo Lite) என்ற பெயரில் ஒரு புதிய எகானமி கட்டணத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள். இதன் முக்கிய நோக்கமே, குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்பவர்களுக்கு டிக்கெட் விலையைக் குறைப்பதுதான். அதாவது, உங்களுக்குத் தேவையான சேவைகளுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இண்டிகோ லைட் திட்டம் எப்போது முடியும்?
Image Credit : ANI

இண்டிகோ லைட் திட்டம் எப்போது முடியும்?

இந்த 'இண்டிகோ லைட்' கட்டணத்தில் டிக்கெட் புக் செய்யும் வசதி, ஜூலை 1-ம் தேதி முதல் இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் மற்றும் செயலியில் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 2026 ஜூலை 15-ம் தேதி முதல் பயணம் செய்யலாம். இண்டிகோவின் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச நான்-ஸ்டாப் விமான சேவைகளுக்கும் இந்த கட்டணம் பொருந்தும். ஒருமுறை பயணம், சுற்றுப் பயணம், பல நகரங்களுக்கான பயணம் என அனைத்து விதமான புக்கிங்குகளுக்கும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவருக்குமே இந்த வசதி உண்டு.

Related Articles

Related image1
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது
Related image2
புத்தாண்டு பரிசு.. ஜனவரி 1 முதல் இண்டிகோ விமானிகளுக்கு பெரிய சம்பள உயர்வு
34
'இண்டிகோ லைட்' திட்டத்தின் சிறப்பம்சங்கள்
Image Credit : Getty

'இண்டிகோ லைட்' திட்டத்தின் சிறப்பம்சங்கள்

இந்தக் கட்டணத்தில் பயணம் செய்பவர்கள், 7 கிலோ வரை எடை கொண்ட ஒரு கேபின் பேக்கை மட்டும் உடன் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். விமானத்தில் இருக்கை தானாகவே இலவசமாக ஒதுக்கப்படும். உங்களுக்கு செக்-இன் பேக்கேஜ், விருப்பமான இருக்கை, விமானத்தில் உணவு, அல்லது 'ஃபாஸ்ட் ஃபார்வர்டு' போன்ற பிரத்யேக சேவைகள் தேவைப்பட்டால், அதற்குக் கூடுதலாகப் பணம் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம். இந்த சேவைகள், அந்த நேரத்தில் இருப்புக்கு ஏற்ப வழங்கப்படும்.

இந்த புதிய கட்டணத்தைத் தேர்ந்தெடுக்கும் பயணிகள், இண்டிகோவின் 'ப்ளூசிப்' லாயல்டி திட்டத்தின் கீழ் புள்ளிகளைப் பெறவும், பயன்படுத்தவும் முடியும். அதே சமயம், கைக்குழந்தைகளுடன் பயணம் செய்பவர்கள், கார்ப்பரேட் புக்கிங் மற்றும் குழுவாக புக்கிங் செய்பவர்களுக்கு இந்த 'இண்டிகோ லைட்' கட்டணம் பொருந்தாது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

44
பயணிகளுக்கு குறையும் செலவு
Image Credit : ANI

பயணிகளுக்கு குறையும் செலவு

இது குறித்து இண்டிகோவின் தலைமை வியூக அதிகாரி அலோக் சிங் பேசும்போது, "குறைந்த லக்கேஜுடன் பயணம் செய்பவர்களுக்கும், தாங்கள் பயன்படுத்தும் சேவைகளுக்கு மட்டும் பணம் செலுத்த விரும்பும் பயணிகளுக்கும் ஏற்ற வகையில் 'இண்டிகோ லைட்' வடிவமைக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு வசதியான மற்றும் குறைந்த செலவிலான பயண அனுபவத்தை வழங்குவதற்கான எங்கள் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதிதான் இது" என்று குறிப்பிட்டார்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இண்டிகோ விமானம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fridge: ஃபிரிட்ஜில் வைத்தால் விஷமாகும் உணவுகள்.! நாள் கணக்கை மறந்தால் அவ்ளோதான்.!
Recommended image2
Petrol Bunk: இந்தியாவின் முதல் பெட்ரோல் பங்க்! அப்போலாம் இப்படித்தான் பெட்ரோல் நிரப்புவாங்களாம்.!
Recommended image3
Post Office Scheme: ஒரே முதலீட்டில் ரூ.5 லட்சம் வரை லாபம்! போஸ்ட் ஆபீஸ் சூப்பர் திட்டம்!
Related Stories
Recommended image1
இப்போ போனா சேமிப்பு… பிறகு செலவு.. இண்டிகோ டிக்கெட் விலை உயரப்போகுது
Recommended image2
புத்தாண்டு பரிசு.. ஜனவரி 1 முதல் இண்டிகோ விமானிகளுக்கு பெரிய சம்பள உயர்வு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved