MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் மாற்றம்.. பணத்தை மிச்சப்படுத்த இந்த 4 புதிய ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!

ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் மாற்றம்.. பணத்தை மிச்சப்படுத்த இந்த 4 புதிய ரூல்ஸை தெரிஞ்சுக்கோங்க!

Indian Railways New Refund Rules 2026: இந்திய ரயில்வே டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. என்னென்ன மாற்றங்கள்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Mar 24 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் மாற்றம்
Image Credit : stockPhoto

ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் மாற்றம்

இந்தியாவில் ரயில் போக்குவரத்து முதுகெலும்பாக உள்ளது. தொலைதூர இடங்களுக்கு வசதியாகவும், களைப்பின்றியும் பயணம் செய்யவும் முடியும் என்பதால் ரயில் பயணத்தை ஏராளமான மக்கள் விரும்பி வருகின்றனர். தினமும் பல லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்து வருகின்றனர். முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்தாலும் தவிர்க்க முடியாத சில காரணங்களால் கன்பார்ம் ஆன டிக்கெட்ட்டை கேன்சல் செய்ய வேண்டிய சூழ்நிலை வந்து விடுகிறது.

24
72 மணி நேரத்துக்கு முன்பு கேசன்ல் செய்தால் முழு பணம்
Image Credit : AI

72 மணி நேரத்துக்கு முன்பு கேசன்ல் செய்தால் முழு பணம்

டிக்கெட் கேன்சல் செய்யும் நேரத்தை பொறுத்து ரீஃபண்ட் பணம் திரும்ப வந்தது. இந்த நிலையில், ரயில் டிக்கெட் ரீஃபண்ட் விதிகளில் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நீங்கள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அல்லது 3 நாட்களுக்கு முன்பு திட்டத்தை மாற்றி டிக்கெட்டை ரத்து செய்தால், உங்களுக்கு அதிகபட்ச ரீஃபண்ட் கிடைக்கும். ரயில்வே நிர்ணயித்துள்ள நிலையான குறைந்தபட்ச கட்டணம் (Flat Cancellation Charge) மட்டுமே பிடிக்கப்படும். இது நீங்கள் பயணம் செய்யவிருந்த வகுப்பைப் (AC, Sleeper) பொறுத்து ரீஃபண்ட் தொகை மாறுபடும்.

Related Articles

Related image1
இனி டிராபிக் கவலை இல்லை.. நாளை முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில்.. அட்டவ‌ணை என்ன?
Related image2
சென்னை டூ டெல்லி வெறும் 24 மணி நேரம் டிராவல்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி.. பயணிகள் குஷி!
34
8 மணி நேரத்துக்கு முன்பாக...
Image Credit : Google

8 மணி நேரத்துக்கு முன்பாக...

ரயில் புறப்படுவதற்கு 3 நாட்கள் முதல் 1 நாள் இடைவெளிக்குள் ரத்து செய்தால், உங்கள் டிக்கெட் தொகையில் 25 சதவீதம் (25%) அபராதமாகப் பிடிக்கப்படும். மீதமுள்ள 75 சதவீதத் தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும். பயணத்திற்கு ஒரு நாளுக்கு முன்னதாக அல்லது குறைந்தபட்சம் 8 மணி நேரத்திற்கு முன் ரத்து செய்யும் பட்சத்தில், டிக்கெட் கட்டணத்தில் சரிபாதி அதாவது 50 சதவீதம் பிடிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பாக நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்யத் தவறினால், ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட் கிடைக்காது. அதாவது 100 சதவீதத் தொகையும் ரத்து கட்டணமாகவே கருதப்படும்.

44
பணத்தை மிச்சப்படுத்த இதை செய்யுங்கள்
Image Credit : social media

பணத்தை மிச்சப்படுத்த இதை செய்யுங்கள்

தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இப்போது ரயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் போடப்படுகிறது. சார்ட் போட்ட பிறகு நீங்கள் டிக்கெட் கேன்சல் செய்தால் ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட் வராது. நீங்கள் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால் 72 மணி நேரத்திற்கு முன்னதாகவே டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும். இந்த டிக்கெட் ரீஃபண்ட் விதிகள் ஆன்லைன் (E-tickets) மற்றும் ரயில்வே கவுண்ட்டர்களில் வாங்கும் கன்பார்ம் டிக்கெட்டுகளுக்கும் பொருந்தும். புதிய ரீஃபண்ட் விதிககள் ஏப்ரல் 1ம் தேதி முதல் படிப்படியாக அமலுக்கு வரும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய இரயில்வே
தொடர்வண்டி பயணச்சீட்டு
தொடர்வண்டி விதிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சொந்த வீடு வாங்கும் ஆசையா? ஏமாறாமல் இருக்க இதோ ஒரு முழு வழிகாட்டி!
Recommended image2
ரயில்வே ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.! 8-வது ஊதியக் குழுவும், எகிறப்போகும் ALK அலவன்ஸும்.! வெளியான அதிரடி அறிவிப்பு.!
Recommended image3
UPI பயனர்கள் கவனத்திற்கு..! ரூ.1000க்கு மேல் ஆன்லைனில் பரிவர்த்தனை செய்தால் கட்டணம்..? RBI விளக்கம்
Related Stories
Recommended image1
இனி டிராபிக் கவலை இல்லை.. நாளை முதல் வேளச்சேரி டூ பரங்கிமலை பறக்கும் ரயில்.. அட்டவ‌ணை என்ன?
Recommended image2
சென்னை டூ டெல்லி வெறும் 24 மணி நேரம் டிராவல்.. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் ரெடி.. பயணிகள் குஷி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved