MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • இனி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அவ்ளோதான்.. ரயில்வே விடுத்த கடும் எச்சரிக்கை

இனி ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தால் அவ்ளோதான்.. ரயில்வே விடுத்த கடும் எச்சரிக்கை

இந்திய ரயில்வே, டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதைத் தடுக்க 'அணுகல் கட்டுப்பாடு' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்திய ரயில்வே இந்த முயற்சியின் மூலம், விதிமுறைகளை மீறும் பயணிகளை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 24 2026, 05:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இந்திய ரயில்வே கடும் நடவடிக்கை
Image Credit : our own

இந்திய ரயில்வே கடும் நடவடிக்கை

இந்திய ரயில்வே பயணங்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வோருக்கு கட்டுப்பாடு கொண்டு வர புதிய திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இந்திய ரயில்வே இந்த முயற்சியின் மூலம், விதிமுறைகளை மீறும் பயணிகளை கட்டுப்படுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயண அனுபவம் மேலும் ஒழுங்காகவும் பாதுகாப்பாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
ரயில் பயணத்தில் பெரிய மாற்றம்
Image Credit : our own

ரயில் பயணத்தில் பெரிய மாற்றம்

புதிய திட்டத்தின் முக்கிய அம்சமாக “அணுகல் கட்டுப்பாடு” முறை அறிமுகமாகிறது. இதன் படி, செல்லுபடியாகும் டிக்கெட் இல்லாமல் ரயில் நிலையத்திற்குள் நுழைவதே சாத்தியமில்லாததாக மாறும். நுழைவாயில்களில் அமைக்கப்படும் தானியங்கி இயந்திரங்களில் டிக்கெட் ஸ்கேன் செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும். அதிகாரப்பூர்வ தகவலின்படி, 2023-24 நிதியாண்டில் சுமார் 2.16 கோடி டிக்கெட் இல்லை பயணிகள் கண்டறியப்பட்டு, ரூ.562 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் விலை உயருமா? விமான பயணிகளுக்கு எச்சரிக்கை
Related image2
48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து – கட்டணம் இல்லையா?
34
ரயில்வே புதிய விதி
Image Credit : our own

ரயில்வே புதிய விதி

அடுத்த ஆண்டு இந்த எண்ணிக்கை 3.61 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமை, சரியான டிக்கெட் எடுத்த பயணிகளின் வசதியையும் பாதித்து வருகிறது. முதல் கட்டமாக இந்த திட்டம் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

44
டிக்கெட் இல்லாமல் நுழைதடை
Image Credit : our own

டிக்கெட் இல்லாமல் நுழைதடை

மேலும் ஹைதராபாத், அஹமதாபாத், ஜெய்ப்பூர் போன்ற முக்கிய நிலையங்களிலும் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு வெற்றிகரமாக செயல்பட்டால், பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். இந்த தொழில்நுட்ப மாற்றம் மூலம் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, துல்லியமான பயணிகள் தகவல்களையும் ரயில்வே பெற முடியும். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்பட்டு, பயணிகள் வசதி அதிகரிக்கும். மொத்தத்தில், இந்த புதிய முயற்சி இந்திய ரயில்வே சேவையில் முக்கியமான மாற்றத்தை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
இந்திய இரயில்வே
ரயில்வே விதிகள்
ரயில்
தொடர்வண்டி பயணச்சீட்டு
பயணம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதார் கார்டு இருக்கா? மத்திய அரசின் ரூ.50,000 உதவி தொகை கிடைக்கும்.! எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம் இதோ.!
Recommended image2
Crorepati Formula: ரூ.30,000 சம்பளத்தை ரூ.1 கோடி ஆக்கலாம்! மிடில் கிளாஸை கோடீஸ்வரனாக்கும் சூப்பர் ஃபார்முலா!
Recommended image3
கடையே வேண்டாம்! கிச்சன்ல இருந்தே லட்சத்தில் பணம் சம்பாதிக்கலாம்!
Related Stories
Recommended image1
ஏப்ரல் 1 முதல் விமான டிக்கெட் விலை உயருமா? விமான பயணிகளுக்கு எச்சரிக்கை
Recommended image2
48 மணி நேரத்தில் விமான டிக்கெட் ரத்து – கட்டணம் இல்லையா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved