MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • வருமான வரி ரீஃபண்ட் கிடைக்க தாமதம் ஆகுதா? செய்யவேண்டியது என்ன?

வருமான வரி ரீஃபண்ட் கிடைக்க தாமதம் ஆகுதா? செய்யவேண்டியது என்ன?

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தவர்கள் விதிகளுக்கு உட்பட்டு வரிப் பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்பப் பெறலாம். இந்த ரீஃபண்ட் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட என்ன செய்ய வேண்டும்? தாமத்துக்கான காரணங்கள் என்னென்ன என்று தெரிந்துகொள்வோம்.

2 Min read
Author : SG Balan
Published : Sep 23 2024, 11:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Income Tax Return Refund Process

Income Tax Return Refund Process

உங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) சரியான நேரத்தில் சமர்ப்பித்து இருந்தாலும், ரீஃபண்ட் பணத்தைப் பெறுவதற்கு நேரம் ஆகலாம். பணத்தைத் திரும்பப்பெற அனுமதிக்கும் முன்பாக, வருமான வரித்துறை பல சோதனைகளைச் செய்ய வேண்டும். இதனால்தான் ரீஃபண்ட் கிடைக்கத் தாமதம் ஆகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
ITR refund scrutiny

ITR refund scrutiny

வருமான வரித்துறை கணக்குகளைச் சரிபார்க்கும் செயல்முறை காரணமாக ரீஃபண்ட் கிடைப்பது தாமதம் ஆக ஒரு காரணம். கணக்கு விவரங்கள் சரிபார்ப்பிற்குப் பிறகு பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு வழக்கமாக 20-45 நாட்கள் ஆகும்.

310
Income Tax scrutiny

Income Tax scrutiny

வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்தபோது சரிபார்ப்பு செயல்முறையை முடிக்கவில்லை என்றாலும் ரீஃபண்ட் கிடைப்பது தாமதம் ஆகும். மின்னணு சரிபார்ப்புக் முறை (EVC) பயன்படுத்துவதன் மூலமாகவோ கையொப்பமிட்ட வருமான வரி கணக்கு (ITR-V) சமர்ப்பிப்பதன் மூலமாகவோ சரிபார்ப்பை உறுதிசெய்யலாம்.

410
Income Tax return refund delayed

Income Tax return refund delayed

வருமானக் கணக்குகளில் உள்ள தவறுகள் ரீஃபண்ட் தாமதத்திற்கு வழிவகுக்கும். தவறாகக் குறிப்பிட்ட வருமானம் மற்றும் விடுபட்ட ஆவணங்கள் ஆகியவை பொதுவாக நேரும் தவறுகள் ஆகும். ஆவணங்களுடன் ஒப்பிடும்போது, வருமானக் கணக்கீட்டில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், கூடுதல் ஆய்வு தேவைப்படலாம், இதனால் ரீஃபண்ட் வழங்க அதிக நாள் ஆகலாம்.

510
Income Tax Refund

Income Tax Refund

வரி செலுத்துவோரின் வருமானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள TDS விவரங்கள் படிவம் 26AS இல் உள்ள தகவல்களுடன் சரியாகப் பொருந்த வேண்டும். இரண்டுக்கும் இடையே வித்தியாசம் இருந்தால், ரீஃபண்ட் பணத்தைப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். அனைத்தும் துல்லியமாக இருப்பதை உறுதிசெய்ய, வருமான வரித்துறை சில சமயங்களில் வருவாய் வழிகளை ஆய்வுக்கு உட்படுத்துகிறது. வருமான வரித்துறை இந்த கூடுதல் ஆய்வை முடிக்கும் வரை ரீஃபண்ட் தொகையைப் திரும்பப் பெறுவதற்கு நீண்ட காலம் ஆகலாம்.

610
ITR Filing and Refund

ITR Filing and Refund

வங்கிக் கணக்கு மூலமாகவும் ரீஃபண்ட் பெறுவதில் தடை இருக்கலாம். தவறான அல்லது காலாவதியான வங்கிக் கணக்கு விவரங்களை அளித்திருந்தாலும் ரீஃபண்ட் பணத்தைத் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம். வருமான வரி செலுத்த வேண்டியிருந்தால், அந்த நிலுவைத் தொகையை ஈடுகட்ட வருமான வரித்துறை ரீஃபண்ட் தொகையை பிடித்தம் செய்திருக்கலாம். வருமான வரித்துறையிலோ வங்கியிலோ ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளும் ரீஃபண்ட் பணம் கிடைப்பதை தாமதப்படுத்தலாம்.

710
E-Filing Portal

E-Filing Portal

 வருமான வரித்துறையில் இருந்து ரீஃபண்ட் பெறுவது தாமதமானால் என்ன செய்வது? முதலில் வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் (e-Filing) இணையதளத்தில் ரீஃபண்ட் ஸ்டேட்டஸ் என்ன என்று பார்க்கவும். இது தற்போதைய நிலையை அறிய உதவும். ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா என்றும் அறிந்துகொள்ளலாம்.

810
e-Nivaran

e-Nivaran

ரொம்ப தாமதமாகும்போது, அது குறித்து விளக்கமும் கிடைக்கவில்லை என்றால் e-Filing போர்ட்டலில் உள்ள e-Nivaran பிரிவின் மூலமாகவோ அல்லது மத்திய செயலாக்க மையத்தின் (CPC) உதவி எண் மூலமாகவோ புகார் தெரிவிக்கலாம்.

910
Income Tax Refund

Income Tax Refund

வருமானவரிக் கணக்கில் ஏதேனும் பிழைகள் அல்லது விடுபட்ட தகவல்கள் உள்ளதா என ஒன்றுக்கு இருமுறை சரிபார்க்கவும். இந்தச் சிக்கல்களை உடனடியாகச் சரிசெய்வது ரீஃபண்ட் செயல்முறையை விரைவுபடுத்த உதவும். வருமான வரித் துறையால் சுட்டிக்காட்டப்படும் தவறுகளை 15 நாட்களுக்குள் நிவர்த்தி செய்வது விரைவாக பணம் கிடைக்க வழிவகுக்கும்.

1010
ITR refund

ITR refund

எதிர்காலத்தில் ரீஃபண்ட் தாமதமாவதைத் தவிர்க்க, முடிந்தவரை விரைவாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யலாம். வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடு முடியும்போது ஏற்படும் நெருக்கடியைத் தவிர்க்க இது உதவும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Tax on one litre petrol: ஒரு லிட்டர் பெட்ரோல் வாங்கினா அரசுக்கு இவ்வளவு வரியா? வரி கணக்கீடு முழு விபரம்!
Recommended image2
Bonus Money Tips: தீபாவளி போனஸ் வந்தாச்சா? மொத்தமாகச் செலவு செய்யாமல் இப்படி பயன்படுத்துங்க
Recommended image3
Car Loan Interest Rates: தீபாவளி கார் வாங்கும் முன் இதைப் பாருங்க! வங்கிகளின் கடன் சலுகைகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved