Sr Citizen Saving | இந்தத் திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு வட்டி மட்டும் ஒன்னு இல்ல.. ரெண்டில்ல.. 12 லட்சம்!
அரசு மற்றும் நிலையான ஊதியம் பெற்று வரும் மூத்த குடிமக்கள் ஓய்வு பெற்ற பிறகு நிறைய பணம் பெறுகிறார்கள். இந்த பணத்தை நீங்கள் நல்ல லாபம் பெறும் திட்டத்தில் முதலீடு செய்தால் பிற்காலத்தில் மீண்டும் ஒரு நிலையான வருமானம் பெற வழிகுக்கும். தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த முழு தகவல்கள் இதோ...
அஞ்சலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்!
நிலையான ஊதியம் பெற்றுவரும் மூத்த ஓய்வு பெற்ற பிறகு ஒரு குறிப்பட்ட தொகையை பெறுகிறார்கள். அது உங்கள் ஓய்வூதிய பணமாகவோ, உங்கள் அலுவலக சேமிப்பு பணமாகவோ இருக்கலாம். அவைகளை முதலீடு செய்து அடுத்த எதிர்காலத்திற்கு ஒரு நிலையான வருமானம் பெற முதலீடு செய்வது சாலச் சிறந்தது. மூதலீடு என்றவுடன் பலருக்கும் நினைவிற்கு வருவது வங்கிகள் மட்டுமே. ஆனால், வங்கிகளை விட அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களும் அதிக வட்டி விகிதங்களை தருகிறது.
8.2 சதவீத வட்டி
இந்த அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஒரு வைப்புத் திட்டமாகும்(Time Deposit). இதில் நிலையான வைப்புத் தொகை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்படுகிறது. மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30,00,000 வரை முதலீடு செய்யலாம், குறைந்தபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1000 ஆகும். இந்த திட்டத்தில் தற்சமயம் 8.2 சதவீத வட்டி வழங்குகிறது.
FD Rate Hike: மூத்த குடிமக்களுக்கு இப்போது 7.90 சதவீத வட்டி கிடைக்கும்.. எந்த பேங்க் தெரியுமா?
வட்டியாக மட்டும் ரூ.12,30,000!
இந்தத் திட்டத்தில் 60வயதுக்கு மேற்பட்ட நபர், அதிகபட்ச தொகையான ரூ.30,00,000 டெபாசிட் செய்வதாக கொண்டால், 8.2% வட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.12,30,000 வட்டியைப் பெறுவீர்கள். ஒவ்வொரு காலாண்டிலும் 61,500 வட்டியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு 5 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் முதிர்வுத் தொகையாக மொத்தம் ₹42,30,000 பெறுவீர்கள்.
இந்தத் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு ரூ.15 லட்சத்தை டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 8.2 சதவீதத்தில் 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.6,15,000 வட்டியாகப் பெறுவீர்கள். காலாண்டு அடிப்படையில் வட்டியைக் கணக்கிட்டால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ரூ.30,750 வட்டி கிடைக்கும். இவ்வாறு 15,00,000 மற்றும் வட்டித் தொகை 6,15,000 சேர்த்து மொத்தத் தொகை ரூ.21,15,000 முதிர்வுத் தொகையாக கிடைக்கும்.
20 ஆயிரம் மட்டும் போதும்.. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டலாம்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
யார் முதலீடு செய்யலாம்
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதலீடு செய்யலாம். மேலும் சிவில் துறை அரசு ஊழியர்கள் மற்றும் விஆர்எஸ் பெறும் பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும்.
Senior Citizen Savings Scheme
5 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் திட்டத்தின் பலன்களைத் தொடர விரும்பினால், வைப்புத் தொகை முதிர்ந்த பிறகும் கணக்குக் காலத்தை மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம். காலாவதியான 1 வருடத்திற்குள் இந்த காலத்தை நீட்டிக்க முடியும். நீட்டிக்கப்பட்ட கணக்கு முதிர்வு தேதியில் பொருந்தக்கூடிய விகிதத்தில் வட்டியைப் பெறுகிறது. SCSS பிரிவு 80C.ன் கீழ் வரிச் சலுகையையும் பெறலாம்.
போஸ்ட் ஆபிஸ் RD : மாதம் இந்த தொகையை முதலீடு செய்தால்.. ரூ.17 லட்சம் ரிட்டர்ன் கிடைக்கும்..