நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம் தெரியுமா?
கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்து புதிய உச்சத்தை எட்டி உள்ளது.
13

நாளுக்கு நாள் விண்ணைத் தொடும் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம் தெரியுமா?
இந்தியாவில் தங்கம் என்பது ஆபரணமாக மட்டும் அல்லாமல் நடுத்தர மக்களின் முதலீடாகவும் உள்ளது. ஆம்! நிலத்தில் முதலீடு செய்யவேண்டும் என்றால் குறைந்தபட்சம் சில பல லட்சங்கள் தேவைப்படும். ஆனால், நகையைப் பொறுத்தவரை சில ஆயிரங்கள் இருந்தாலே அதனைப் பயன்படுத்தி முதலீடு செய்யலாம்.
23
இன்றைய தங்கம் விலை
மேலும் தற்போது திருமண சீசன் என்பதால் நகையின் பயன்பாடு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் மக்கள் விலையைப் பொருட்படுத்தாமல் தங்கத்தை வாங்கி வைக்கின்றனர். அண்மையில் அமெரிக்க தேர்தல் முடிவடைந்த நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
33
தங்கத்தின் விலை
அந்த வகையில் தங்கம் விலை இன்றும் உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து 7,945க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து 63,560 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Latest Videos