MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைக்கலாம்? லிமிட்டை மீறினால் வீட்டுக்கு நோட்டீஸ் வரும் உஷார்!!

சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணம் வைக்கலாம்? லிமிட்டை மீறினால் வீட்டுக்கு நோட்டீஸ் வரும் உஷார்!!

இந்தியாவில் சேமிப்புக் கணக்கில் வைப்புத் தொகைக்கு எவ்வளவு வரை லிமிட் உள்ளது என்பது பலருக்கும் தெரிவதில்லை. வங்கி கணக்கில் அதிகபட்ச வைப்புத் தொகை, வரி விதிமுறைகள் பற்றிய முக்கிய விவரங்கள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 28 2024, 08:16 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Cash Deposit Limit

Cash Deposit Limit

இன்றைய காலகட்டத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கு என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அரசின் அனைத்து திட்டங்களையும் பயன்படுத்திக் கொள்ள வங்கிக் கணக்கு இருப்பது அவசியம். அது இல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்ய முடியாது. இந்தியாவில் வங்கிக் கணக்கைத் திறப்பதில் எந்தத் தடையும் இல்லை.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
Savings Account Rules

Savings Account Rules

இதன் காரணமாக ஒவ்வொரு நபருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் உள்ளன. இந்த டெபாசிட் தொகைக்கு வங்கி அவ்வப்போது வட்டியையும் வழங்குகிறது. விதிகளின்படி, ஜீரோ பேலன்ஸ் கணக்கைத் தவிர அனைத்து கணக்குகளிலும் குறைந்தபட்ச இருப்பு வைப்பது அவசியம் ஆகும்.

39
Income Tax Department

Income Tax Department

இல்லையெனில் வங்கி உங்களுக்கு அபராதம் விதிக்கிறது. ஆனால் சேமிப்புக் கணக்கில் அதிகபட்சம் எவ்வளவு பணம் வைக்கலாம் என்பது பற்றி பலருக்கு தெரிவதில்லை. விதிகளின்படி, உங்கள் சேமிப்புக் கணக்கில் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் வைத்திருக்கலாம். இதற்கு வரம்பு இல்லை.

49
Bank Account

Bank Account

ஆனால் உங்கள் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகை அதிகமாக இருந்தால், அது வருமான வரி வரம்பிற்குள் வந்தால், அந்த வருமானத்தின் ஆதாரத்தை நீங்கள் சொல்ல வேண்டும். இது தவிர, வங்கிக் கிளைக்குச் சென்று பணத்தை டெபாசிட் செய்யவும், பணம் எடுக்கவும் வரம்பு உள்ளது.

59
Income Tax Rules

Income Tax Rules

ஆனால் காசோலை அல்லது ஆன்லைன் மீடியம் மூலம், சேமிப்புக் கணக்கில் ரூ.1 முதல் ஆயிரம், லட்சம், கோடிகள் வரை எந்த தொகையையும் டெபாசிட் செய்யலாம். ரூ.50,000 அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதனுடன் உங்கள் பான் எண்ணையும் வழங்க வேண்டும் என்று விதி கூறுகிறது.

69
Saving Account

Saving Account

ஒரு நாளில் ரூ.1 லட்சம் வரை பணமாக டெபாசிட் செய்யலாம். மேலும், நீங்கள் தொடர்ந்து உங்கள் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்யவில்லை என்றால், இந்த வரம்பு ரூ.2.50 லட்சம் வரை இருக்கலாம். இது தவிர, ஒரு நிதியாண்டில் ஒருவர் தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை ரொக்கமாக டெபாசிட் செய்யலாம்.

79
Income Tax

Income Tax

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கணக்குகளைக் கொண்ட வரி செலுத்துவோருக்கு இந்த வரம்பு ஒட்டுமொத்தமாக உள்ளது. ஒரு நபர் ஒரு நிதியாண்டில் ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக டெபாசிட் செய்தால், அது குறித்து வங்கி வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

89
Money Limit

Money Limit

அத்தகைய சூழ்நிலையில், இந்த வருமானத்தின் மூலத்தை நபர் சொல்ல வேண்டும். வருமான வரி ரிட்டனில் அந்த நபர் திருப்திகரமான தகவலை அளிக்க முடியாவிட்டால், அவர் வருமான வரித்துறையின் ரேடாரின் கீழ் வந்து அவரிடம் விசாரணை நடத்தலாம். பிடிபட்டால் கடும் அபராதம் விதிக்கப்படும்.

99
Income Tax Notice

Income Tax Notice

வருமான ஆதாரத்தைப் பற்றி நபர் தெரிவிக்கவில்லை என்றால், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு 60 சதவீதம் வரி, 25 சதவீதம் கூடுதல் கட்டணம் மற்றும் 4 சதவீதம் செஸ் விதிக்கப்படும். மேலும் ரூ.10 லட்சத்திற்கு மேல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியாது என்று அர்த்தம் இல்லை. இந்த வருமானத்திற்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால், நீங்கள் கவலைப்படாமல் பணத்தை டெபாசிட் செய்யலாம்.

3% அதிகரிப்பு எப்போ தெரியுமா? பறந்து வந்த 7வது சம்பள கமிஷன் அப்டேட்.. செக் பண்ணுங்க!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வங்கிக் கணக்கு
வருமான வரி விதிகள்
தமிழ் செய்திகள்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jio Recharge Plans: ரூ.200 கூட செலவாகாது... ஜியோவில் அன்லிமிடெட் கால்ஸ்! 4 மலிவு ரீசார்ஜ் திட்டங்கள்
Recommended image2
8th Pay Commission: ரூ.30,000 வாங்குபவர்களுக்கு ரூ.90,000 ஆகுமா? 8வது ஊதியக் குழுவின் சம்பளக் கணக்கீடு இதோ!
Recommended image3
DMart Offers: வெளியில் ரூ.300.. டிமார்ட்டில் ரூ.50-க்கே கிடைக்குமா? தீபாவளி பொருட்களுக்கு அதிரடி சலுகை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved