MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • கோடிக்கணக்கில் புரளும் டாப் 10 பணக்கார என்ஆர்ஐக்கள்; ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் 2024 வெளியீடு!

கோடிக்கணக்கில் புரளும் டாப் 10 பணக்கார என்ஆர்ஐக்கள்; ஹுருன் பணக்காரர்கள் பட்டியல் 2024 வெளியீடு!

ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024, இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. ஹைதராபாத் முதல்முறையாக பெங்களூருவை விஞ்சி 104 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது குடும்பத்தினர் முதலிடத்தில் உள்ளனர்.

1 Min read
Author : Raghupati R
| Updated : Aug 31 2024, 12:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Hurun India Rich List 2024

Hurun India Rich List 2024

ஹுருன் இந்தியா (Hurun India Rich List 2024) இந்தியாவில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை எடுத்துக்காட்டுகிறது, இப்போது 334 ஆக உள்ளது. ஹைதராபாத் முதல்முறையாக பெங்களூருவை விஞ்சி, 104 பில்லியனர்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2024 ஆனது பணக்கார வெளிநாடு வாழ் இந்தியர்களின் (என்ஆர்ஐ) அடையாளங்களை வெளியிட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
Richest NRI

Richest NRI

இந்த பட்டியலில் முதலிடத்தில் கோபிசந்த் ஹிந்துஜா மற்றும் அவரது குடும்பம் உள்ளது. அவர்கள் ரூ.192,700 கோடி சொத்துக்களை குவித்துள்ளனர். 160,900 கோடி சொத்து மதிப்புள்ள லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்ட மிட்டலின் வெற்றி, உலகின் மிகப்பெரிய எஃகு தயாரிப்பு நிறுவனமான ஆர்செலர் மிட்டலின் தலைமைத்துவத்தில் இருந்து உருவானது.

34
Richest NRIs of India

Richest NRIs of India

அனில் அகர்வால் ரூ.111,400 கோடி சொத்துக்களுடன் மூன்றாவது பெரிய என்ஆர்ஐ, மிட்டலைப் போலவே, அகர்வாலும் லண்டனில் வசிக்கிறார் மற்றும் உலகளாவிய இயற்கை வள நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் தலைவராக உள்ளார். மொனாக்கோவில் ஷபூர் பல்லோன்ஜி மிஸ்திரி 91,400 கோடி சொத்துக்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

44
Self-Made NRI Billionaires

Self-Made NRI Billionaires

88,600 கோடி சொத்துக்களுடன் சான் ஜோஸின் ஜெய் சௌத்ரி நெருக்கமாகப் பின்தொடர்கிறார். அதன்படி அடுத்தடுத்த வரிசை முறையே ஸ்ரீபிரகாஷ் லோஹியா (லண்டன், ரூ. 73,100 கோடி), விவேக் சந்த் சேகல் (துபாய், ரூ. 62,600 கோடி), யூசுப் அலி எம்.ஏ (அபுதாபி, ரூ. 55,000 கோடி), ராகேஷ் கங்வால் (மியாமி, ரூ. 37,400 கோடி), மற்றும் ரோமேஷ் டி. வாத்வானி (பாலோ ஆல்டோ, ரூ. 36,900 கோடி) ஆகியோர் உள்ளனர்.

ஆதார் இலவச அப்டேட் முதல் கேஸ் சிலிண்டர் விலை வரை.. செப்டம்பர் 1 முதல் ஏற்படப்போகும் 7 மாற்றங்கள்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சம்பள ஊழியர்களுக்கு முக்கிய தகவல்.. ITR ஃபைலிங் ஆரம்பம்.. கடைசி தேதி எப்போது?
Recommended image2
Gold Price: 1955‍ல் 10 கிராம் தங்கம் வெறும் ரூ.79.. 1955 டூ 2026 விலை எப்படி இருந்தது? முழு லிஸ்ட் இதோ!
Recommended image3
Apnarubee Fin: ₹30,822 கோடி சாதனை! அடுத்த இலக்கு ₹50,000 கோடி! அப்னாரூபீ ஃபின் நிறுவனத்தின் அசுர வளர்ச்சி பயணம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved