MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Real Vs Fake Money: கள்ள நோட்டா? நல்ல நோட்டா? எப்படி கண்டுபிடிப்பது?

Real Vs Fake Money: கள்ள நோட்டா? நல்ல நோட்டா? எப்படி கண்டுபிடிப்பது?

Real Vs Fake Money: கையில் இருக்கும் ரூபாய் நோட்டு கள்ளநோட்டா, உண்மையானதா என்பதை சில நொடிகளில் கண்டறியலாம். வாட்டர்மார்க், உயர்த்தப்பட்ட அச்சு உள்ளிட்ட அம்சங்களை பார்த்து, தொட்டு, சாய்த்துச் சரிபார்ப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 26 2026, 04:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
கள்ள நோட்டா? நல்ல நோட்டா
Image Credit : pinterest

கள்ள நோட்டா? நல்ல நோட்டா

கையில் கிடைக்கும் ₹100, ₹200, ₹500 நோட்டு உண்மையானதா? என்று சந்தேகம் வந்தால், அதை வெறுமனே பார்த்து முடிவு செய்ய வேண்டாம். இந்திய ரூபாய் நோட்டுகளில் கள்ளநோட்டை அடையாளம் காண உதவும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை Reserve Bank of India (RBI) அறிமுகப்படுத்தியுள்ளது. நோட்டைத் தொட்டு, வெளிச்சத்தில் பார்த்து, சாய்த்துப் பார்த்து, அச்சு மற்றும் எழுத்துகளை கவனித்தாலே எளிதாக கள்ள நோட்டை கண்டுபிடிக்க முடியும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நோட்டின் காகிதத்தையும் அச்சையும் கவனியுங்கள்
Image Credit : pinterest

நோட்டின் காகிதத்தையும் அச்சையும் கவனியுங்கள்

உண்மையான இந்திய ரூபாய் நோட்டின் காகிதமும் அச்சு அமைப்பும் சாதாரண பிரிண்டர் காகிதத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும்.

குறிப்பாக சில எழுத்துகள், உருவங்கள் மற்றும் கோடுகள் உயர்த்தப்பட்ட அச்சு (Intaglio/Raised Printing) முறையில் அச்சிடப்பட்டிருக்கும். அவற்றை விரலால் தொட்டுப் பார்க்கும்போது சிறிய அளவில் உயர்ந்து, சற்று கரடுமுரடான உணர்வைத் தரும்.

மகாத்மா காந்தியின் உருவப்படம், RBI முத்திரை மற்றும் சில முக்கிய அடையாளங்களில் உயர்த்தப்பட்ட அச்சு பயன்படுத்தப்பட்டிருக்கும். இவற்றை விரலால் மெதுவாகத் தடவிப் பார்க்கும்போது அச்சின் உயர்வையும் சற்று கரடுமுரடான உணர்வையும் அறிய முடியும்.

36
வெளிச்சத்தில் பிடித்துப் பாருங்கள் – Watermark
Image Credit : pinterest

வெளிச்சத்தில் பிடித்துப் பாருங்கள் – Watermark

நோட்டை வெளிச்சத்துக்கு எதிராகப் பிடித்துப் பார்த்தால், மகாத்மா காந்தியின் உருவப்படம் மற்றும் நோட்டின் மதிப்பைக் குறிக்கும் denomination வாட்டர்மார்க் ( watermark) தென்படும். இது நோட்டின் மேற்பரப்பில் அச்சிடப்பட்ட படம் போல இல்லாமல், காகிதத்துக்குள் உருவாக்கப்பட்ட நிழல் தன்மையுடன் காணப்படும்.

கவனம்: Watermark பகுதி தெளிவாக இல்லாமல், சாதாரணமாக மேலே அச்சிடப்பட்ட படம் போல இருந்தால் சந்தேகிக்கலாம்.

46
Security Thread இருக்கிறதா?
Image Credit : pinterest

Security Thread இருக்கிறதா?

பல இந்திய ரூபாய் நோட்டுகளில் முக்கியமான பாதுகாப்பு அம்சமாக பாதுகாப்பு நூல் (Security Thread ) உள்ளது. நோட்டை வெளிச்சத்தில் பார்க்கும்போது பச்சை அல்லது நீல நிறத்தில் இந்த நூல் தொடர்ச்சியான கோடு போலத் தெரியும். சில நோட்டுகளில் அதில் “भारत” மற்றும் “RBI” போன்ற எழுத்துகளும் காணப்படும். அதனால், நோட்டை வெளிச்சத்தில் வைத்து security thread-ஐ தனியாகச் சரிபார்ப்பது நல்லது.

ரூபாய் நோட்டில் உள்ள Serial Number பகுதியில், எண்கள் இடமிருந்து வலமாகச் செல்லச் செல்ல சிறிது சிறிதாக பெரிதாகும் வகையில் அச்சிடப்பட்டிருக்கும். அதாவது, அனைத்து எண்களும் ஒரே அளவில் இருக்காது. வலதுபுறம் செல்லச் செல்ல அவற்றின் அளவு அதிகரிக்கும். இதுவும் நோட்டில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாகும்.

56
முழு வடிவமாக தெரியும்
Image Credit : pinterest

முழு வடிவமாக தெரியும்

ரூபாய் நோட்டின் முன்பக்கத்திலும் பின்பக்கத்திலும் இருக்கும் சில வடிவங்கள், வெளிச்சத்தில் பார்க்கும்போது ஒன்றோடு ஒன்று சரியாக இணைந்து முழுமையான வடிவமாகத் தோன்றும். இதுதான் See-through Register. இரண்டு பக்கங்களிலும் அச்சிடப்பட்ட வடிவங்கள் துல்லியமாகப் பொருந்துவது போல இருக்க வேண்டும்.

இதுதவிர வங்கிகள் போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் Ultra Violet (UV) light மூலம் சில பாதுகாப்பு அம்சங்களைச் சரிபார்க்க முடியும்.

Micro lettering-ஐ கவனியுங்கள்

சில பகுதிகளில் மிகவும் சிறிய அளவில் RBI மற்றும் denomination போன்ற எழுத்துகள் இடம்பெறும். இவை சாதாரணமாக வெறும் கண்களால் தெளிவாகப் பார்க்க முடியாமல் இருக்கலாம். Magnifying glass மூலம் பார்க்கும்போது நன்றாகத் தெரியும். Micro lettering-ம் இந்திய ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றாக RBI குறிப்பிடுகிறது.

66
4 படி சோதனை – கடையில் பணம் வாங்கும்போது
Image Credit : pinterest

4 படி சோதனை – கடையில் பணம் வாங்கும்போது

  • முதலில் தொட்டுப் பாருங்கள்
  • அடுத்து வெளிச்சத்தில் பாருங்கள்
  • சாய்த்துப் பாருங்கள்
  • எழுத்து மற்றும் அச்சைப் பாருங்கள்

கள்ளநோட்டு என்று சந்தேகம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

  • சந்தேகமான நோட்டை மற்றொருவரிடம் செலுத்த முயற்சி செய்யக்கூடாது.
  • அதை அருகிலுள்ள வங்கி கிளைக்குச் சென்று சரிபார்க்கலாம்.
  • வங்கிகள் நோட்டுகளை ஆய்வு செய்து போலி (counterfeit) எனத் தீர்மானிக்க தேவையான நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன.
  • வங்கிகளில் போலி நோட்டுகளை கண்டறிவதற்கான பயிற்சியும், note authentication முறைகளும் இருக்க வேண்டும் என்று RBI அறிவுறுத்தியுள்ளது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
பணம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
8th Pay Commission pension: லெவல் 1-18 ஊழியர்களுக்கு ஒரே ரேங்க், ஒரே ஓய்வூதியம் ஏன் முக்கியக் கோரிக்கையாக உள்ளது?
Recommended image2
Toll Free: வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்! சுங்கக் கட்டணம் செலுத்தும் முறையில் பெரிய மாற்றம்!!
Recommended image3
8th Pay Commission: ஃபிட்மென்ட் ஃபேக்டர், ஓய்வூதியம்… 8வது ஊதியக் குழுவின் லேட்டஸ்ட் அப்டேட்டுகள் – தவறவிடாதீர்கள்!
Related Stories
Recommended image1
Money Plant: மணி பிளான்ட் வெச்சா பணம் கொட்டுமா? இந்த செடி நிஜமாவே காசை ஈர்க்குமா?
Recommended image2
100 Rupee Note : ₹100 நோட்டில் இத்தனை ரகசியங்களா? இதுவரை கவனிக்காத சுவாரஸ்ய தகவல்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved