வட்டி மட்டுமே ரூ.60,000 கிடைக்கும்! பெண்களுக்கான அசத்தல் சேமிப்பு திட்டம்!
மத்திய அரசின் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம் பெண்களுக்கு 7.5% வட்டி வழங்குகிறது. குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 வரை முதலீடு செய்யலாம். இத்திட்டம் மார்ச் 31, 2025 வரை பொருந்தும்.
Mahila Samman Savings Certificate Scheme
பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு தபால் நிலையங்கள் மூலம் பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் பெண்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டம்.
Mahila samman
இந்த திட்டம் இரண்டு ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் திட்டமாகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சம் ரூ.2,00,000 வரை டெபாசிட் செய்யலாம் தபால் அலுவலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக வங்கிகளில் இந்த திட்டம் கிடைக்கிறது.
பெண்களை மையமாகக் கொண்ட முதலீட்டுத் திட்டத்தில் ரூ. 10,000 வைப்புத் தொகையானது இரண்டாண்டு காலத்தில் ரூ. 11,602 ஆக வளரும், மேலும் மொத்தத் தொகையானது திட்டம் முடிவடையும் நேரத்தில் டெபாசிட்டரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
Mahila Samman Scheme
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கை பெண்கள் தங்களுக்காகவோ அல்லது மைனர் பெண் குழந்தைக்கு ஆதரவாகவோ தொடங்கலாம்..
இந்தியாவில் வசிக்கும் எந்தப் பெண்ணும் மத்திய அரசு வழங்கும் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டக் கணக்கை எளிதாகத் தொடங்கலாம். இந்த திட்டம் மைனர் பெண்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களின் கணக்கை பெற்றோர் அல்லது பாதுகாவலர் தான் திறக்க வேண்டும்.
Mahila Samman Scheme Interest Rate
இந்த திட்டத்திற்கான காலக்கெடுவையும் நிர்ணயித்துள்ளது.. விண்ணப்பதாரர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இதைச் செய்யலாம். மேலும், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் 7.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இவ்வாறு திரட்டப்படும் வட்டி நேரடியாக கணக்கில் வரவு வைக்கப்படும்.
இந்தத் திட்டம் ஆண்டுதோறும் 7.5 சதவீத வருமானத்தை வழங்குகிறது. இந்த விகிதத்தில், ஒரு பெண் அதிகபட்ச தொகையான ரூ.2 லட்சம் முதலீடு செய்தால், அதற்கு வட்டியாக ரூ.32,044 கிடைக்கும். இதன் மூலம் இந்த திட்டத்தின் முடிவில் நீங்கள் மொத்தம் உங்களுக்கு ரூ.2,32,044 கிடைக்கும். மேலும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சுமார் ரூ. 1,5000 வட்டி பெறலாம். தவிர, ஒவ்வொரு ஆண்டும் ரூ.60,000 ஆயிரம் வரை அதிக வட்டி பெறலாம்.
Last date for Mahila Samman Scheme
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025 ஆகும். மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் கணக்கைத் திறப்பதும் மிகவும் எளிதானது. நீங்கள் தபால் அலுவலகம் அல்லது வங்கிக்குச் சென்று கணக்கைத் தொடங்குவதற்கான படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்., ஆதார் அல்லது பான் கார்டு போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பாங்க் ஆப் பரோடா, கனரா வங்கி, பாங்க் ஆப் இந்தியா, பிஏபி மற்றும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளில் மட்டுமே இந்த திட்டத்தின் கணக்கை திறக்க முடியும்.
How To Apply For Mahila Samman Savings Scheme
ஆன்லைனில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் (MSSC) கணக்கை எவ்வாறு திறப்பது?
அதிகாரப்பூர்வ இந்தியா போஸ்ட் அல்லது பங்கேற்கும் வங்கி இணையதளத்திற்குச் செல்லவும் (எ.கா. பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா).
உங்கள் விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை சரிபார்ப்பதற்காக பதிவேற்றவும்.
முழுமையான விண்ணப்பம்: தேவையான தகவல்களை அளித்து, முதலீட்டுத் தொகையைத் (₹1,000 முதல் ₹2 லட்சம் வரை) தேர்ந்தெடுத்து, படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
ஆதார், பான் மற்றும் முகவரிச் சான்று போன்ற தேவையான ஆவணங்களைப் பதிவேற்றவும்.
நெட் பேங்கிங் அல்லது டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்துங்கள்.
கணக்கு செயல்படுத்தப்பட்டவுடன் கணக்கு விவரங்கள் மற்றும் ஒப்புகையைப் பெறவும்.
உங்கள் கணக்கு மற்றும் வட்டியை ஆன்லைனில் கண்காணிக்கவும்.