ஒரு வருடத்தில் கடனை முழுமையாக அடைப்பது எப்படி? 7 டிப்ஸ் இதோ
கடன்களை விரைவாக அடைக்க, நிதி நிலையை மதிப்பிட்டு, பட்ஜெட் உருவாக்கி, தேவையற்ற செலவுகளைக் குறைத்து, வருமானத்தை உயர்த்துங்கள்.

கடனை விரைவாக அடைப்பது
நிறைய கடன்கள் உள்ளதா? அதை ஒரு வருடத்திற்குள் அடைக்க விரும்புகிறீர்களா? அதற்கான சரியான திட்டம் இருந்தால், அது சாத்தியமாகும். முதலில், உங்கள் அனைத்து கடன்களையும் பட்டியலிட்டு, அவற்றின் தொகை, வட்டி விகிதம், EMI ஆகியவற்றை சரியாக பதிவு செய்யுங்கள். இந்த தெளிவு, கடன் திருப்பிச் செலுத்தும் உத்தியை அமைக்க உதவும்.
நிதி நிலைமை மதிப்பீடு
முதலில், உங்கள் தற்போதைய நிதி நிலையை நேர்மையாக மதிப்பீடு செய்யுங்கள். தனிநபர் கடன், வீட்டு கடன், கிரெடிட் கார்டு நிலுவை, வணிகக் கடன் என அனைத்தையும் பிரித்து எழுதுங்கள். எவ்வளவு தொகையை எந்த நேரத்தில் செலுத்த வேண்டுமென்று தெரிந்தால், சரியான முன்னுரிமையுடன் திருப்பிச் செலுத்த முடியும்.
பட்ஜெட்டை உருவாக்குங்கள்
கடனை விரைவாக அடைக்க, பட்ஜெட் மிக முக்கியம். உங்கள் மாதத்தில் 50% அத்தியாவசியம் (வீடு, உணவு, EMI)க்கு, 30% விருப்பச் செலவுகள் (சுற்றுலா, வெளியில் உணவு, OTT)க்கு, 20% சேமிப்பு மற்றும் கடன் திருப்பிச் செலுத்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த விகிதத்தை, கடன் சீக்கிரம் அடைய விரும்பினால், சேமிப்பு பங்கைக் கூடுதலாக மாற்றலாம்.
தேவையற்ற செலவுகளை குறைக்கவும்
உணவு, வீடு, கல்வி போன்ற அத்தியாவசியங்களைத் தவிர, சில விருப்பச் செலவுகளை தற்காலிகமாக நிறுத்துங்கள். சுற்றுலா, புதிய சாதனங்கள் வாங்குவது, ஆடம்பரச் செலவுகள் போன்றவற்றை தவிர்த்து, அந்தப் பணத்தை சேமித்து கடனை அடைக்கலாம். இந்த சிறிய மாற்றங்களும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.
வருமானத்தை உயர்த்துங்கள்
நிலையான வருமானத்திற்கு மேல், ஓவர்டைம் வேலை, பார்ட் டைம் வேலை, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம். கிடைக்கும் கூடுதல் தொகையை நேரடியாக கடன் திருப்பிச் செலுத்தப் பயன்படுத்தினால், ஒரு வருடத்திற்குள் கடனிலிருந்து விடுபட வாய்ப்பு அதிகம்.