ரூ.7,000 வரை சேமிக்கலாம்.. FASTag பாஸ் பற்றி இந்த விஷயம் தெரியுமா?
புதிய FASTag காலாண்டு பாஸ் திட்டம் மூலம் ரூ.3,000 செலுத்தி ஒரு வருடம் அல்லது 200 டோல்கள் வரை கடக்கலாம். முக்கிய விதிகள், பயன்பாடு மற்றும் நிபந்தனைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
டோல் சேமிப்பு
ஆகஸ்ட் 15 முதல் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய FASTag காலாண்டு பாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாஸ் விலை ரூ.3,000. ஒருமுறை வாங்கினால், ஒரு வருடம் அல்லது அதிகபட்சம் 200 முறை டோல் கேட் கடக்கலாம். இதனால் சாதாரணமாக ரூ.50-க்கு மேல் செலவாகும் டோல் கட்டணம், சராசரியாக ரூ.15-க்கு குறையும்.
200 டோல்கள்
உதாரணமாக, 200 டோல்கள் கடக்க ரூ.10,000 வரை செலவாகும் நிலையில், இந்த பாஸ் மூலம் வெறும் ரூ.3,000 மட்டுமே செலவாகும். அதாவது நேரடியாக ரூ.7,000 வரை சேமிப்பு கிடைக்கும். முதலில், இந்த பாஸ் தனியார் வாகன உரிமையாளர்கள் மட்டுமே வாங்க முடியும். கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கே இது பொருந்தும். பஸ், லாரி அல்லது டாக்சி போன்ற வணிக வாகனங்களுக்கு இந்த சலுகை கிடையாது.
தேசிய நெடுஞ்சாலை பாஸ்
இரண்டாவது, இந்த பாஸ் நீங்கள் வாங்கிய குறிப்பிட்ட வாகனத்திற்கே செல்லுபடியாகும். அதை வேறு வாகனத்திற்கு மாற்ற முடியாது. பதிவு செய்யப்பட்ட அந்த வாகனத்திற்கே இந்த பாஸ் செயல்படும். மூன்றாவது, இந்த வீதி பாஸ் NHAI மற்றும் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் எக்ஸ்பிரஸ்களில் மட்டுமே செல்லுபடியாகும்.
கார்களுக்கு பாஸ்
மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள் அல்லது எக்ஸ்பிரஸ் வீதிகளுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். நான்காவது, இந்த பாஸ் வாங்கிய பிறகு அதை ரத்து செய்ய முடியாது, பணமும் திரும்ப கிடையாது. காலாவதி ஆன பிறகு, மீண்டும் ரூ.3,000 செலுத்தி புதிய பாஸ் வாங்க வேண்டும்.
நெடுஞ்சாலைகள்
உங்கள் வாகன எண் மற்றும் FASTag ஐடியுடன் Highway Travel App, NHAI அல்லது MoRTH இணையதளத்தில் உள்நுழையவும். FASTag செயலில் இருப்பதையும், சரியாக பொருத்தப்பட்டிருப்பதையும் உறுதி செய்யவும். ரூ.3,000-ஐ UPI, டெபிட்/கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் கட்டி பாஸ் பெறலாம்.