MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி? சிம்பிள் வழி இதோ!

பான் கார்டு இல்லாமல் சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி? சிம்பிள் வழி இதோ!

Cibil score check: நல்ல கடன் விதிமுறைகளுக்கு கிரெடிட் ஸ்கோர் முக்கியம். சிபில் ஸ்கோரை பான் எண் இல்லாமலும் ஆன்லைனில் சரிபார்க்கலாம். சிபில் இணையதளத்தில் பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை போன்ற மாற்று ஆவணங்களைப் பயன்படுத்தி கணக்கு தொடங்கி, ஸ்கோரை அணுகலாம்.

1 Min read
Author : SG Balan
Published : Jan 02 2025, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Cibil score update

Cibil score update

சாதகமான கடன் விதிமுறைகளைப் பெறுவதற்கு ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோரை பராமரிப்பது அவசியம். CIBIL போன்ற கிரெடிட் பீரோவிடமிருந்து உங்கள் கிரெடிட் ஸ்கோரைச் சரிபார்க்க, உங்கள் வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள பான் எண் தேவைப்படும்.

26
Cibil score check

Cibil score check

கிரெடிட் பீரோவான சிபில் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு கடன் மதிப்பீடுகளை வழங்குகிறது. 300 முதல் 900 வரையிலான மூன்று இலக்க எண்ணைப் பயன்படுத்தி கிரெடிட் ஸ்கோர் குறிக்கப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில் கடன் தொகை மற்றும் விதிமுறைகள் தீர்மானிக்கப்படும்.

36
Cibil Score without Pan card

Cibil Score without Pan card

ஆனால், பான் கார்டு இல்லாமல் ஆன்லைனில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை அணுகுவதில் சிரமம் இருந்தால், அதற்கு மாற்று வழி உள்ளது. பான் கார்டு இல்லாமலே ஆன்லைனில் இலவசமாக CIBIL ஸ்கோரைச் சரிபார்க்கலாம்.

46
How to check Cibil Score

How to check Cibil Score

அதிகாரப்பூர்வ சிபில் இணையதளத்திற்குச் சென்று, 'பெர்சனல் சிபில் ஸ்கோர்' (Personal CIBIL Score) என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும். தொடர்ந்து 'உங்கள் இலவச சிபில் ஸ்கோரைப் பெறுங்கள்' (Get your free CIBIL score) என்பதைக் கிளிக் செய்யவும்.

56
CIBIL scores

CIBIL scores

சிபில் இணையதளத்தில் கணக்கு வைத்திருக்கவில்லை என்றால், எளிதாக உங்கள் அக்கவுண்டை ஆரம்பிக்கலாம். அடையாளச் சான்றுக்கு, பான் கார்டுக்குப் பதிலாக பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற மாற்று அடையாள ஆவணங்களைத் தேர்ந்தெடுத்து கணக்கு தொடங்கலாம்.

66
CIBIL Score Tips

CIBIL Score Tips

பிறந்த தேதி, மாநிலம், மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை நிரப்பி சமர்ப்பித்தவுடன், ஒரு OTP கிடைக்கும். அதை உரிய இடத்தில் டைப் செய்து Submit செய்தால் உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டுவிடும். பிறகு எந்த நேரத்திலும் சிபில் இணையதளத்திற்குச் சென்று உங்கள் சிபில் ஸ்கோரைப் பார்க்கலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved