இனி கரண்ட் பில் கட்டத் தேவையில்ல... மத்திய அரசின் இலவச மின்சாரத் திட்டத்தில் சேருங்க!
சூர்ய கர் திட்டத்தில் இணையும் வீடுகளில் மத்திய அரசு மானியத்துடன் சோலார் பேனல் பொருத்தப்படும். இதன் மூலம் கிடைக்கும் சூரிய மின்சக்தியை பயன்படுத்தி, மின்கட்டணத்தை மிச்சப்படுத்தலாம்.
PM Surya Ghar Muft Bijli Yojana
2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த திட்டம் பிரதம மந்திரி சூர்யா கர் திட்டம். வீடுதோறும் சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
PM Surya Ghar Scheme
சூர்ய கர் திட்டத்தில் சேரும் நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்படும். சோலார் பேனர்களை நிறுவ இத்திட்டம் மூலம் பொதுமக்களுக்கு மானியத் தொகையும் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் இணைந்தால் வீட்டுக்கு மின்கட்டணம் செலுத்துவதை முழுமையாகச் சேமிக்கலாம்.
Solar Panel Scheme
பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் பிரதம மந்திரி சூர்யா கர் மானியத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முடியும். இத்திட்டத்தில் சேர விரும்புகிறவர்களுக்கு சொந்த வீடு இருக்கக்கூடாது. ஆண்டு வருமானம் ரூ.1.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்.
Solar Panel Subsidy
ஒரு கோடி மக்களுக்கு சூரிய மின்சக்தியின் பலன்களை வழங்க வேண்டும் என்பதே இந்த சோலார் பேனல் திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு, மானியமும் அரசால் வழங்கப்படுகிறது.
Electricity Bill
இந்தத் திட்டத்தில் இணைந்த பிறகு, வீட்டில் சோலார் பேனல் நிறுவப்படும். சூரியனில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வீட்டு பயன்பாட்டுக்கும் எடுத்துக்கொள்ளலாம். இதனால் அரசின் மின்சார இணைப்புக்குத் தனியாக கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
Solar panel capacity
1-150 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளில் 1-2 கிலோவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட சோலார் பேனல்களைப் நிறுவலாம். 150-300 யூனிட் மின்நுகர்வு கொண்ட வீடுகளுக்கு 2-3 கிலோவாட் சோலார் பேனல் பொருத்தமாக இருக்கும். 300 யூனிட்டுக்கு மேல் செலவாகும் வீடுகளில் 3 கிலோவாட்டுக்கு அதிகமான திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைக்கலாம்.
Monthly subsidy under Surya Ghar Yojana
சூர்ய கர் திட்டத்தின் கீழ் வீடுகளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கு மாதம்தோறும் மானியம் கிடைக்கும். 2 கிலோவாட் வரை ரூ.30,000 வழங்கப்படுகிறது. கூடுதலாக உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் 18,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 3 கிலோவாட்டுக்கு அதிகமான உற்பத்தித் திறன் கொண்ட சோலார் பேனல்களை நிறுவினால் அதிகபட்சம் ரூ.78,000 மானியம் கிடைக்கும்.
Apply online for Surya Ghar Scheme
பிரதமரின் சூர்ய கர் திட்டத்தில் சேர விரும்புபவர்கள், https://www.pmsuryaghar.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். 15555 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் விவரங்களை அறிந்துகொள்ளலாம்.