MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • House vs Land: வீடு கட்டுவதா? இடம் வாங்குவதா? எதிர்காலத்தில் என்னென்ன செலவுகள் வரும்? முழு கணக்கு இதோ!

House vs Land: வீடு கட்டுவதா? இடம் வாங்குவதா? எதிர்காலத்தில் என்னென்ன செலவுகள் வரும்? முழு கணக்கு இதோ!

House vs Land: வீடு கட்டுவதா, இடம் வாங்குவதா? என முடிவு செய்யும் முன் தெரிந்துகொள்ள வேண்டிய செலவுகள் என்ன? பதிவு கட்டணம், கடன் வட்டி, கட்டுமானம், வரி, பராமரிப்பு உள்ளிட்ட முழு விவரங்களை இந்த தொகுப்பில் தெரிந்துக்கொள்வோம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 17 2026, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
வீடு கட்டுவதா? இடம் வாங்குவதா?
Image Credit : pinterest

வீடு கட்டுவதா? இடம் வாங்குவதா?

சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால், கையில் இருக்கும் பணத்தை வைத்து முதலில் இடம் வாங்குவதா? அல்லது ஏற்கனவே உள்ள இடத்தில் வீடு கட்டுவதா? என்ற கேள்வி வருவது இயல்புதான்.

வீடு கட்டும் செலவு மட்டுமின்றி, பதிவு கட்டணம், வரி, கடன் வட்டி, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு என பல செலவுகள் தொடர்ந்து வரும். எனவே, வீடு அல்லது நிலம் வாங்கும் முன், ஆரம்ப செலவு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஏற்படும் செலவுகளையும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
இடம் வாங்கும்போது வரும் செலவுகள் என்னென்னெ?
Image Credit : pinterest

இடம் வாங்கும்போது வரும் செலவுகள் என்னென்னெ?

வெறும் நிலத்தின் விலையை மட்டும் கணக்கிட்டு முடிவு செய்வது சரியாக இருக்காது. நிலம் வாங்கும்போது பொதுவாக:

  • நிலத்தின் விலை
  • முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் (registration)
  • ஆவண சரிபார்ப்பு செலவு (Document verification expenses)
  • பட்டா, அளவீடு செலவுகள்
  • புரோக்கர் கமிஷன்
  • வங்கிக் கடன் பெற்றால் கட்டணம் மற்றும் வட்டி
  • நிலத்தைச் சுற்றி வேலி அமைக்கும் செலவு
  • மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி
  • சொத்து அல்லது நில வரிகள் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
39
வீடு கட்டும்போது செலவு எதில் எல்லாம் வரும்?
Image Credit : pinterest

வீடு கட்டும்போது செலவு எதில் எல்லாம் வரும்?

இடம் ஏற்கனவே இருந்தாலும், வீடு கட்டுவதற்கான கட்டுமானச் செலவுதான் அடுத்த பெரிய செலவாக இருக்கும். இதில் வீடு கட்டும் முக்கியப் பொருட்களின் விலை மட்டுமின்றி, பல்வேறு பணிகளுக்கான தனித்தனி செலவுகளும் சேரும்.

கட்டுமானப் பொருட்கள் : செங்கல், சிமெண்ட், மணல், ஜல்லி, இரும்புக் கம்பி உள்ளிட்ட அடிப்படைப் பொருட்கள் தேவைப்படும். இவற்றின் விலை, வீட்டின் அளவு மற்றும் கட்டுமானத் தரத்தைப் பொறுத்து மாறுபடும்.

தொழிலாளர் செலவு: மேஸ்திரி, கொத்தனார், தச்சர், பெயிண்டர், எலக்ட்ரீஷியன், பிளம்பர் உள்ளிட்ட தொழிலாளர்கள் மட்டுமல்லாமல் பொறியாளர் அல்லது கட்டிடக் கலைஞர் கட்டணமும் கட்டுமான பட்ஜெட்டில் முக்கியப் பங்கு வகிக்கும். இதுமட்டுமில்லாமல் மின்சார வேலை, பிளம்பிங், கதவு, ஜன்னல், தரை, பெயிண்டிங், சமையலறை, கழிப்பறை போன்ற செலவுகளும் சேரும்.

அதனால், சதுர அடிக்கு இவ்வளவு என்ற கட்டுமான மதிப்பீட்டை மட்டும் பார்த்து பட்ஜெட் போடாமல், இந்த ஒவ்வொரு செலவையும் தனித்தனியாகக் கணக்கிட்டு, எதிர்பாராத செலவுகளுக்காக கூடுதல் தொகையையும் வைத்திருப்பது நல்லது.

49
வீடு கட்டிய பிறகும் செலவு தொடரும்
Image Credit : pinterest

வீடு கட்டிய பிறகும் செலவு தொடரும்

வீடு கட்டி முடித்துவிட்டால் செலவு முடிந்துவிடும் என்று நினைக்கக்கூடாது. வீடு கட்டிய பிறகும் அதை பராமரிப்பது, பெயிண்டிங், மின்சார பழுது, பிளம்பிங், சுவர் பராமரிப்பு, கதவு, ஜன்னல் பழுது, தண்ணீர் தொட்டி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் என தொடர்ந்து செலவுகள் வரலாம்.

அதாவது, வீட்டின் வயது அதிகரிக்கும்போது பெரிய பழுதுபார்ப்பு செலவுகளும் ஏற்படலாம். அதனால் ஆண்டுதோறும் வீட்டுப் பராமரிப்புக்காக தனியாக ஒரு தொகையை ஒதுக்குவது நல்லது.

59
இடம் வாங்குவதிலும் நீண்டகால செலவு உள்ளது
Image Credit : pinterest

இடம் வாங்குவதிலும் நீண்டகால செலவு உள்ளது

இடம் மட்டும் வாங்கி வைத்திருந்தாலும் செலவு இல்லையென்று கருத முடியாது. அந்த இடத்தை பாதுகாப்பாக வைத்திருக்க வேலி அமைத்தல், புதர் மற்றும் குப்பைகளை அகற்றுதல், தேவையான வரிகளை செலுத்துதல் போன்ற செலவுகள் இருக்கும்.

எதிர்காலத்தில் அந்த இடத்தில் வீடு கட்ட முடிவு செய்தால், அந்த காலத்தில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழிலாளர் செலவுகள் அதிகரித்திருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

69
கடன் வாங்கினால் முக்கியமான செலவு வட்டி
Image Credit : pinterest

கடன் வாங்கினால் முக்கியமான செலவு வட்டி

வீடு அல்லது நிலம் வாங்குவதற்கு கடன் பெறும்போது, அசல் கடன் தொகையுடன் சேர்த்து பல ஆண்டுகளுக்கு வட்டியும் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, சொத்தின் விலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், கடன் காலம் முழுவதும் செலுத்த வேண்டிய அசல் + மொத்த வட்டி தொகை எவ்வளவு என்பதையும் முன்கூட்டியே கணக்கிட்டு, அதற்கேற்ப திட்டமிடுவது அவசியம்.

79
எதை முடிவு செய்யும்போது கவனிக்க வேண்டும்?
Image Credit : pinterest

எதை முடிவு செய்யும்போது கவனிக்க வேண்டும்?

உடனடியாக வீடு கட்டி குடியேற வேண்டிய அவசியம் இல்லாதவர்களுக்கு, முதலில் நிலம் வாங்கி வைத்திருப்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஆனால் நிலம் வாங்கும் முன் அதன் சட்ட ஆவணங்கள் சரியாக உள்ளதா? அமைவிடம் எப்படி உள்ளது, சாலை வசதி இருக்கிறதா, குடிநீர் மற்றும் மின்சார வசதி கிடைக்குமா என்பவற்றை நன்றாகச் சரிபார்க்க வேண்டும்.

மேலும், எதிர்காலத்தில் அந்த நிலத்தை வீடு கட்டுவதா? முதலீட்டுக்காகவா அல்லது வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தப் போகிறோமா? என்பதையும் முன்கூட்டியே திட்டமிடுவது முக்கியம்.

89
எதிகால திட்டமிடல்
Image Credit : pinterest

எதிகால திட்டமிடல்

உடனடியாக சொந்த வீட்டில் குடியேற விரும்புபவர்களுக்கு, வீடு கட்டுவது பொருத்தமான தேர்வாக இருக்கலாம். ஆனால், வீடு கட்டுவதற்கான ஆரம்ப செலவை மட்டும் கணக்கில் கொள்ளாமல், எதிர்காலத்தில் ஏற்படும் பராமரிப்பு, பழுது நீக்கம், பெயிண்டிங், மின்சாரம் மற்றும் பிளம்பிங் போன்ற செலவுகளையும் சேர்த்து திட்டமிட வேண்டும்.

99
முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது
Image Credit : pinterest

முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது

நிலத்தின் விலை எவ்வளவு? அல்லது வீடு கட்ட எவ்வளவு ஆகும்? என்பது மட்டும் முழுமையான கணக்கு அல்ல. ஒரு சொத்தை வாங்குவதற்கு முன்:

  • ஆரம்ப முதலீடு
  • பதிவு மற்றும் ஆவணச் செலவுகள்
  • கடன் மற்றும் வட்டி
  • கட்டுமானச் செலவு
  • மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வசதிகள்
  • ஆண்டுதோறும் வரி
  • பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு
  • எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரிய செலவுகள்

என குறைந்தது 10–20 ஆண்டுகளுக்கான மொத்த செலவை ஒரு கணக்காகப் பார்த்த பிறகு முடிவு செய்வது பாதுகாப்பான வழிமுறையாகும்.

குறிப்பு: நிலம் அல்லது வீடு வாங்கும்போது செலுத்த வேண்டிய பதிவு கட்டணம், வரி மற்றும் உள்ளாட்சி கட்டணங்கள் உள்ளிட்டவை மாநிலம், உள்ளாட்சி அமைப்பு மற்றும் சொத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடலாம். எனவே, வாங்குவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ கட்டண விவரங்களைச் சரிபார்த்து, சொத்து ஆவணங்களை சட்ட நிபுணர் அல்லது தகுதியான நபர் மூலம் ஆய்வு செய்வது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Indian Railways: ரயில் AC கோச்சில் இனி இவர்களுக்கு இலவசம்.. இந்தியன் ரயில்வே அதிரடி அறிவிப்பு!
Recommended image2
UPI MDR Charges: இந்த 7 பரிவர்த்தனைகளுக்கு 1 ரூபாய் கூட செலவாகாது! அத்தனையும் இலவசம்.!
Recommended image3
39,500 மணிகள், 475 கண்ணாடிகள்: ரூ.500 கைப்பைக்கு ரூ.8.3 லட்சம் விலையா? இணையத்தை கொந்தளிக்க வைத்த பிரபல இத்தாலிய பிராண்ட்!
Related Stories
Recommended image1
Land in Moon : நிலவில் நிலம் வாங்க ஆசையா? ஒரு ஏக்கர் நிலம் வெறும் 1,700 ரூபாய்தான்!
Recommended image2
Land : இன்று ஒரு சென்ட் நிலம் வாங்கினால் 10 வருஷத்துல எவ்வளவு மதிப்பு வரும்? வாங்கும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved