வீடு வாங்குவதற்கு Down Payment எவ்ளோ தேவை தெரியுமா?! ஈசியா ரெடி செய்யலாம் முன்பணம்!
வீட்டுக் கடன் வாங்கும்போது டவுன் பேமென்ட் செய்வது கட்டாயம். வீட்டின் மதிப்பைப் பொறுத்து 10% முதல் 50% வரை டவுன் பேமென்ட் தேவைப்படும். சரியான முறையில் டவுன் பேமென்ட் தொகையை திரட்டுவதன் மூலம் கடன் சுமையைக் குறைக்கலாம்.

டவுன் பேமென்ட் என்றால் என்ன?
வீட்டுக் கடன் வாங்கும்போது, வங்கி உங்கள் வீட்டின் முழுமதிப்பையும் கடனாக தராது. ஒரு பகுதியை நீங்களே உங்கள் சொந்த சேமிப்பில் இருந்து செலுத்த வேண்டும். இதை டவுன் பேமென்ட் (Down Payment) என அழைக்கின்றனர். இது உங்கள் பங்கு எனக் கூறலாம்.
டவுன் பேமென்ட் கண்டிப்பாக தேவையா?
ஆம், டவுன் பேமென்ட் கட்டாயம் தேவையானது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) விதிமுறைப்படி, 100% வீட்டு மதிப்புக்குக் கடன் தர முடியாது. வங்கிகள் உங்கள் நிதிச்செலவுக்கு ஒற்றையாடை தராமல், நீங்கள் குறைந்தபட்சம் 10%–25% பங்குபெற வேண்டும் என கட்டாயம் விதித்துள்ளன. இது வங்கிக்கும் பாதுகாப்பாகவும், கடன் வாங்குபவரும் சிக்குப்படாமல் செலுத்த இயலுமாறு உறுதி செய்யும் நடைமுறை.
எந்த அளவு முன்பணம் செலுத்த வேண்டும்?
வீட்டின் மதிப்புக்கு ஏற்ப உங்கள் பங்கு:
வீட்டு விலை குறைந்தபட்ச முன்பணம்
₹30 லட்சம் வரை 10%
₹30–₹75 லட்சம் 20%
₹75 லட்சம் மேல் 25%
பத்திர பதிவு, ஸ்டாம்ப் டூட்டி போன்ற கட்டணங்கள் இதில் சேராது.
பழைய வீடு வாங்கும்போது என்ன நடக்கும்?
பழைய வீட்டுக்கு முன்பண விகிதம் அதிகம்.
10–20 ஆண்டுகள் பழைய வீடு – 30%–40% வரை
20 ஆண்டுக்கு மேல் – 50% வரை
பழைய வீடுகளுக்கு வங்கி கடன் அளவைக் குறைக்கும் காரணம், அந்த வீட்டின் மதிப்பு குறைய வாய்ப்பு அதிகம்.
அதிகமாக முன்பணம் செலுத்தினால் என்ன நன்மை?
உங்களிடம் சேமிப்பு இருந்தால் அதிகமாக முன்பணம் செலுத்துவது நல்லது:
மாத தவணை குறையும்
வட்டி செலவு குறையும்
கடன் ஒப்புதல் சாத்தியம் அதிகம்
குறைந்த வட்டி விகிதம் பெற வாய்ப்பு
தவிர்க்க வேண்டிய முறைகள்
முன்பணத்தை திரட்ட சிலர் தவறான வழிகளுக்கு போகிறார்கள். அவை:
கிரெடிட் கார்டு மூலம் செலுத்தல் – 35%-45% அதிக வட்டி.
பர்சனல் லோன் – 16%-20% வட்டி, கூடுதல் சுமை.
தங்க நகை அடமானம் – 9%-12% வட்டி செலுத்த வேண்டி வரும்.
PF பணத்தை எடுப்பது – ஓய்வுக்கால சேமிப்பு குறையும்.
இதுபோன்ற சிக்கல்கள் தவிர்க்கவேண்டும்.
பரிந்துரைக்கப்படும் வழிகள்
முன்பணத்தை நிதியாக திரட்ட சில நலமான வழிகள்
- முன்கூட்டியே சேமிப்பு – Recurring Deposit (RD), SIP, Mutual Fund மூலம் உறவினர்கள், நண்பர்கள் உதவி – வட்டி இல்லாமல் உதவி பெறலாம்
- ஊழியர்களுக்கான நிறுவனம் கடன் – வட்டி இல்லாமல் கிடைக்கும் வாய்ப்பு
- ஏலச்சீட்டு / சிட் ஃபண்ட் – குறைந்த வட்டியில் பெறலாம்
- தங்க நகையை விற்பனை செய்தல் – அடமானத்துக்கு பதிலாக நேரடி விற்பனை நல்லது
- டவுன் பேமென்ட் இல்லாமல் வீட்டுக் கடன் கிடைப்பதில்லை. அதனால்தான், வீட்டுக் கடன் கனவை நிறைவேற்ற நீங்கள் முன்பே திட்டமிட்டு சேமிக்கத் தொடங்க வேண்டும்.
- இன்றைய நிலவரப்படி, வீட்டு கடன்கள் சுமார் 7.5% வட்டியில் கிடைக்கின்றன. உங்கள் கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் வட்டி மேலும் குறையலாம். அதற்கும் முன்பணத் தொகையும் நிதியாக தயாராக இருக்க வேண்டும்.