Ports in India | இந்தியாவில் உள்ள பரபரப்பான மற்றும் மிகப்பெரிய துறைமுகங்கள்!
சர்வதேச கடல் வழித்தடத்தின் டிராஃபிக்களை கண்காணிக்கும் போர்ட் டெக்னாலஜி இன்டர்நேஷனல் (PTI), TEU டிராஃபிக்கில் மட்டும் இந்தியாவில் உள்ள ஐந்து பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகங்கள் குறித்து இங்கு காணலாம்.
Jawaharlal Nehru Port Trust - மும்பை
Nhava Sheva துறைமுகம் என்றும் அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் (JNPT) மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அமைந்துள்ளது. ஆண்டுக்கு 5 மில்லியன் TEU அளவிற்கு போக்குவரத்தை கையாள்கிறது. இந்தியாவின் மிக பரபரப்பான வணிக துறைமுகமாகும். உலகின் முதல் 30 இடங்களில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய துறைமுகம் இதுதான்.
முந்த்ரா துறைமுகம் (குஜராத்)
குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடாவில் அமைந்துள்ள முந்த்ரா துறைமுகம் இந்தியாவின் இரண்டாவது பெரிய மற்றும் பரபரப்பான துறைமுகம். ஆண்டுக்கு 4.4 மில்லியன் TEU போக்குவரத்தை கையாள்கிறது. உலகின் முதல் 50 பெரிய மற்றும் சிறந்த துறைமுகங்களுக்குள் இடம்பெற்றுள்ள ஒரு இந்திய துறைமுகமாகும். மேலும், இது இந்தியாவின் மிகப்பெரிய வணிகத் துறைமுகமாகும். இது வட இந்தியாவின் உள்நாட்டிற்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது.
சென்னை துறைமுகம் (தமிழ்நாடு)
தமிழ்நாடு மாநிலம், சென்னையில் அமைந்துள்ள சென்னை துறைமுகம் இந்தியாவின் மூன்றாவது பெரிய துறைமுகம். ஆண்டுக்கு 1.5 மில்லியன் TEU போக்குவரத்தை கையாள்கிறது.
1983-ல் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிரத்யேக கன்டெய்னர் டெர்மினலுக்கான இடம் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
கொல்கத்தா துறைமுகம் ( மேற்கு வங்கம்)
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் அமைந்துள்ள கொல்கத்தா துறைமுகம் நாட்டின் நான்காவது பரபரப்பான மற்றும் பெரிய துறைமுகமாகும். இது இந்தியாவின் முதல் பெரிய துறைமுகமாகவும், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு ஒரு முக்கியமான வர்த்தக இடமாகவும், நாட்டின் மிகப்பெரிய துறைமுகமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று, இது கிழக்கு இந்தியா மற்றும் அண்டை நாடுகளான நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற பரந்த நிலப்பகுதிகளுக்கு ஒரு முக்கிய நுழைவாயிலாக செயல்படுகிறது.
வி.ஓ.சிதம்பரனார் துறைமுகம் (தூத்துக்குடி, தமிழ்நாடு)
வி.ஓ. சிதம்பரபார் துறைமுகம் தூத்துக்குடியில் அமைந்துள்ளது. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், இலங்கைக்கு எதிரே அமைந்துள்ளது. வி.ஓ. சிதம்பரபார் போர்ட் டிரஸ்ட் இந்தியாவின் ஐந்தாவது பரபரப்பான துறைமுகமாகும், மேலும் ஆண்டுக்கு சுமார் 698,000 TEU போக்குவரத்தை கையாள்கிறது.