முடிவுக்கு வந்த தங்கத்தை பணமாக்கும் திட்டத்தை தொடரலாமா?... இது தெரியாம போச்சே?
தங்க நகைகளை முதலீடு செய்து மாதாந்திர வட்டி பெறும் திட்டம் பற்றிய ஒரு பார்வை. தங்கத்தின் அளவு, வட்டி விகிதம், மற்றும் திட்டத்தின் நன்மைகள் பற்றிய தகவல்கள் இதில் அடங்கும்.

மாதம்தோறும் வட்டிகொடுக்கும் தங்க நகைகள்
தங்கத்தைப் பணமாக்கும் திட்டம் என்பது தங்கத்தைத் தங்களுடைய உலோக கணக்கில் (மெட்டல் அக்கவுண்ட்) சேமிக்கும் முதலீட்டாளர்களுக்கு வட்டியைக் கொடுக்கும் திட்டமாகும் ஒரு முறை இந்தக் கணக்கில் தங்கத்தை முதலீடு செய்து விட்டால், அது உங்களுக்கு வட்டியை கொடுக்கத் துவங்கி விடும். ஒருவர் தன்னிடமுள்ள தங்கத்தை ஒரு வங்கி அல்லது முகவரிடம் கொண்டு வரும் போது, தங்கத்தின் தரம்அளவிடப்படும், அதனுடைய சரியான எடையளவிற்கு உலோக கணக்கில் வரவு வைக்கப்படும். இந்தச் செயல்பாட்டிற்காக வாடிக்கையாளர்கள் அவர்களுடைய முழுமையான விபரங்களை (KYC) தருமாறு கேட்கப்படுவார்கள். முதலீடு செய்யப்பட்ட தங்கமானது நகை வியாபாரிகளுக்கு, வாடிக்கையாளருக்குத் தரும் வட்டியை விடச் சற்றே அதிகமான வட்டிக்கு கடனாகத் தரப்படும்.
வட்டி எப்படி கொடுப்பார்கள்
வாடிக்கையாளரின் அசல் மற்றும் வட்டி ஆகியவை அனைத்தும் 'தங்கத்தின் பேரிலேயே' மதிப்பிடப்படும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் 100 கிராம் தங்கத்தை டெபாசிட் செய்து 1 சதவீதம் வட்டியைப் பெறுகிறார் என்றால், அவருடைய கணக்கில் மொத்தம் 101 கிராம் இருக்கும். அந்தந்த வங்கிகளால் வட்டி விகிதம் முடிவு செய்யப்படுகிறது. காலம் குறைந்தபட்சம் 1 வருடமாவது தங்கத்தை டெபாசிட் செய்திருக்க வேண்டும். சிறிய கணக்குகளில் குறைந்தபட்சம் 30 கிராம் தங்கத்தைச் சேமிப்பதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தத் தங்கம் கட்டி அல்லது நகை என எந்த வடிவிலும் இருக்கலாம் திரும்பப் பெறும் முறை வாடிக்கையாளர் பணமாகப் பெற்றுக் கொள்ளவோ அல்லது தங்கமாகவோ திரும்பப் பெறலாம். இந்த விருப்பத்தை அவர் டெபாசிட் செய்யும் போது தெரிவிக்க வேண்டும்.
இதில் இவ்வளவு லாபமா?
தங்கம் பணமாக்கும் திட்டத்தில் ஒருவர் 100 கிராம் தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஆண்டுக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும். ஆண்டுக்கு இரண்டரை சதவீதம் பணம் கிடைக்கும் நிலையில் 5 ஆண்டு முடிவில் 11.8 கிராம் கூடுதல் தங்கம் அல்லது அதற்கு நிகரான தங்கத்தை வாடிக்கையாளர் பெறமுடியும்
கூடுதல் சிறப்பம்சம்
தங்கத்தை கையில் வைத்திருகாமல் இந்த திட்டத்தில் வைப்பதால் பாதுகாப்பாக இருப்பதுடன் அதிக வருமானமும் கிடைக்கும். மேலும் முதலீடே இல்லாமல் கையில் உள்ள தங்கத்திற்கு வட்டி கிடைக்கும்.
திடீரென நிறுத்தப்பட்ட திட்டம்
இந்தத் திட்டத்தின் கீழ், நவம்பர் 2024 வரை 31,164 கிலோ தங்கம் பணமாக்கப்பட்டுள்ளது. மொத்த வைப்புத்தொகையில், குறுகிய கால வைப்புத்தொகை 7,509 கிலோ, நீண்ட கால வைப்புத்தொகை 13,926 கிலோ மற்றும் இடைக்கால தங்க வைப்புத்தொகை 9,728 கிலோவும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச நிலவரங்கள், சர்வதேச சந்தை நிலைமைகள் மேம்படுவதைக் கருத்தில் கொண்டு, தங்கப் பணமாக்குதல் திட்டத்தை (GMS)மத்திய அரசு முடிவு நிறுத்தியது.
குறுகிய கால திட்டம் தொடரும்
வங்கிகள் தங்கள் குறுகிய கால தங்க வைப்புத் திட்டங்களை தொடரலாம். ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை உள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதேபோல் நடுத்தர கால அரசு வைப்புத்தொகை (ஐந்து-ஏழு ஆண்டுகள்) மற்றும் நீண்ட கால அரசு வைப்புத்தொகை (12-15 ஆண்டுகள்) என மூன்று காலகட்டங்களை GMS திட்டம் உள்ளடக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.GMS இன் சில பகுதிகளை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், வங்கிகள் தங்கள் குறுகிய கால தங்க வைப்புத் திட்டங்களை (1-3 ஆண்டுகள்) தொடரலாம். இந்த மாற்றத்திற்குப் பிறகும், மக்கள் குறுகிய காலத்திற்கு தங்கத்தை குவிக்க முடியும், ஆனால் நீண்ட கால மற்றும் நடுத்தர கால திட்டங்கள் பயன்பாட்டில் இருக்காது என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

