MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம் இன்னும் குறையுமா? விலை கீழே போகுது.. எப்போது வாங்கினால் லாபம்? நிபுணர்கள் அறிவுரை

தங்கம் இன்னும் குறையுமா? விலை கீழே போகுது.. எப்போது வாங்கினால் லாபம்? நிபுணர்கள் அறிவுரை

கடந்த வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் 10% முதல் 12% வரை சரிந்துள்ளன. அமெரிக்க டாலரின் வலிமை மற்றும் முதலீட்டாளர்களின் லாப நோக்கம் ஆகியவை இதற்கு காரணமாகும்.

1 Min read
Author : Raghupati R
Published : Mar 22 2026, 10:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு
Image Credit : AI Generated

தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு

கடந்த ஒரு வாரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிந்துள்ளன. சில இடங்களில் 10% முதல் 12% வரை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பது, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தது இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், விலை குறைந்ததையடுத்து சந்தையில் மீண்டும் வாங்கும் ஆர்வம் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சர்வதேச சந்தை காரணிகள்
Image Credit : Getty

சர்வதேச சந்தை காரணிகள்

இந்த வாரம் சர்வதேச சந்தை காரணிகளால் தங்கம், வெள்ளி மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. பொதுவாக உலகளாவிய பதற்ற சூழ்நிலையில் பாதுகாப்பான முதலீடாக தங்கம், வெள்ளி தேடப்படும். ஆனால் இம்முறை அந்த தேவை எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை. அமெரிக்காவின் பணவியல் கடுமையாக கொள்கைகப்படும் என்ற எதிர்பார்ப்பு சந்தையை பாதித்தது.

35
மல்டி கமோடிட்டி எக்சேஞ்ச்
Image Credit : Getty

மல்டி கமோடிட்டி எக்சேஞ்ச்

மல்டி கமோடிட்டி எக்சேஞ்ச் (MCX) தரவுகளின்படி, வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் தங்கம் சிறிய உயர்வுடன் ரூ.1,44,825க்கு முடிவடைந்தது. இருந்தாலும், வாரந்திர அடிப்படையில் ரூ.13,000க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வெள்ளியும் கடைசி நாளில் சிறிய உயர்வு கண்டாலும், முழு வாரத்தில் சுமார் 12% வரை சரிவை சந்தித்துள்ளது.

45
தங்கம் மீண்டும் உயரும் வாய்ப்பு
Image Credit : Gold Price\Twitter

தங்கம் மீண்டும் உயரும் வாய்ப்பு

சந்தை நிபுணர்கள் கூறுவதாவது, தங்கத்திற்கு ரூ.1.42 லட்சம் நிலை மிகவும் முக்கியமானது. இந்த நிலைக்கு மேல் தங்கம் தங்கினால் மீண்டும் ரூ.1.50 லட்சம் வரை உயர வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் ரூ.1.35 லட்சம் வரை குறையக்கூடும். வெள்ளிக்கு ரூ.2.15 லட்சம் முக்கிய ஆதரவாகக் கருதப்படுகிறது. இதற்கு கீழே சென்றால் மேலும் வீழ்ச்சியாகவே இருக்கும்.

55
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது
Image Credit : Getty

முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது

எனினும், நீண்டகாலத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான தேவை உறுதியாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 700 முதல் 800 டன் வரை தங்கம் பயன்படுத்தப்படுகிறது. திருமண சீசன் நெருங்குவதால் வாங்கும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது. எனவே, குறைந்த விலையில் வாங்கும் (Dips on dips) தந்திரத்தை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் கவனமாக செயல்படலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
வெள்ளி
தங்க விலை
தனிநபர் நிதி
வணிகம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹோம், கார் லோன் வாங்கியவர்கள் கவனத்துக்கு.. EMI எகிறப்போகுது? ஆர்பிஐயின் அதிரடி முடிவு என்ன?
Recommended image2
UPI Rule: அக்டோபர் 15 முதல் யுபிஐ-ல் புதிய விதி! ரூ.2,000க்கு மேல் பணம் செலுத்தினால் என்ன ஆகும்?
Recommended image3
PM Kisan: அப்பா பெயரிலும், மகன் பெயரிலும் நிலம் இருக்கா? ரூ.2,000 யாருக்கு கிடைக்கும்? முழு விவரம்!
Related Stories
Recommended image1
ஹோட்டல் ஓனர்களுக்கு குட் நியூஸ்.. மார்ச் 23 முதல் பெரிய மாற்றம்.. மத்திய அரசின் புதிய முடிவு
Recommended image2
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை.! நகையா? கோல்டு பிஸ்கட்டா? இந்த நேரத்தில் எது வாங்குவது சிறந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved