MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • தங்கம் vs Gold ETF: எது அதிக லாபம் தரும்? பணத்தை போடும் முன் தெரிஞ்சுக்கோங்க!

தங்கம் vs Gold ETF: எது அதிக லாபம் தரும்? பணத்தை போடும் முன் தெரிஞ்சுக்கோங்க!

Gold vs Gold ETF: இன்றைய காலக்கட்டத்தில் தங்க நகை வாங்குவது நல்லதா? Gold ETF-ல் முதலீடு செய்வது நல்லதா? இரண்டிலும் உள்ள லாபம், செலவு, making charges, GST, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை தெரிந்துகொள்ள இந்த தொகுப்பை காணவும்.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 29 2026, 02:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தங்கமா? Gold ETF ஆ?
Image Credit : magnific

தங்கமா? Gold ETF-ஆ?

தங்கம் வாங்குவது நம்ம ஊரில் முதலீடு மட்டுமல்ல. அவசர நேரத்தில் உதவும் ஒரு சொத்தாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால் இப்போது தங்கத்தில் முதலீடு செய்ய Gold ETF போன்ற டிஜிட்டல் வழிகளும் இருக்கின்றன.

தங்க நகை வாங்குவதும், Gold ETF-ல் முதலீடு செய்வதும் ஒரே விஷயம் கிடையாது. இரண்டிலும் தங்கத்தின் விலை உயரும்போது லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் செலவு, பாதுகாப்பு, விற்பனை செய்வது, பயன்படுத்தும் விதம் போன்றவற்றில் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ETF-ல் முதலீடு செய்வதா? தங்க நகை வாங்கி வைத்திருப்பதா? எது சிறந்தது?
Image Credit : magnific

ETF-ல் முதலீடு செய்வதா? தங்க நகை வாங்கி வைத்திருப்பதா? எது சிறந்தது?

Gold ETF (Exchange-Traded Fund) என்பது தங்கத்தை நேரடியாக வாங்காமல், தங்கத்தின் விலையை அடிப்படையாக வைத்து பங்குச் சந்தை மூலம் முதலீடு செய்யும் ஒரு வழி. இது டிஜிட்டல் வடிவில் இருப்பதால், வீட்டில் நகையை வைத்துப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேபோல், நகை வாங்கும்போது செலுத்தும் செய்கூலி, சேதாரம் (making charges) போன்ற கூடுதல் செலவுகளும் இருக்காது. ஆனால் ETF-க்கு expense ratio, brokerage மற்றும் tracking error போன்ற செலவுகள் இருக்கும்.

Related Articles

Related image1
Gold Price: ஒரே நாளில் ரூ.2360 குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?
Related image2
Bitcoin vs Gold : பிட்காயினா? தங்கமா? எது அதிக லாபம் தரும்?
34
தங்கத்தில் பணம் போடுறீங்களா?
Image Credit : magnific

தங்கத்தில் பணம் போடுறீங்களா?

நகை வாங்கும்போது தங்கத்தின் விலையுடன் செய்கூலி, சேதாரம் (making charges, wastage charges,) GST போன்ற கூடுதல் செலவுகளும் சேரும். CBIC (Central Board of Indirect Taxes and Customs) தகவல்படி, நகையின் மொத்த transaction value மீது 3 சதவீதம் GST வசூலிக்கப்படுகிறது. இதனால், நாம் கொடுக்கும் முழு பணமும் தங்கத்தின் மதிப்பாக இருக்காது.

உதாரணத்திற்கு, நீங்கள் ரூ.1 லட்சத்திற்கு நகை வாங்கினால், அந்த 1 லட்சமும் தங்கமாக இருக்காது. நகை டிசைன், செய்கூலி போன்ற செலவுகளுக்காக குறிப்பிட்ட பணம் செலவாகிவிடும். அதேபோல், பின்னர் நகையை விற்கும்போதும் முழுமையாக திரும்பக் கிடைக்காது. கடையின் விதிமுறைகளைப் பொறுத்து சில தொகை கழிக்கப்படலாம். மேலும், நகையை வீட்டில் வைத்திருந்தால் பாதுகாப்பு, திருட்டு போன்ற விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

44
எதில் முதலீடு செய்வது?
Image Credit : magnific

எதில் முதலீடு செய்வது?

உங்களுக்கு தங்கத்தை அணிந்து பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் Jewellery வாங்கலாம். ஆனால், லாப நோக்கத்துடன் முதலீடு செய்ய நினைத்தால் Gold ETF போன்ற முதலீட்டு வழிகளைப் பின்பற்றுவது சிறந்தது.

Gold ETF-லயும் ரிஸ்க் இருக்கு. தங்கத்தின் விலை குறைந்தால், உங்கள் முதலீட்டின் மதிப்பும் குறையலாம். தற்போதைய காலக்கட்டத்தில் குறைந்தபட்சம் சுமார் 1 கிராம் தங்கம் வாங்க சென்றாலே இன்றைய நிலவரப்படி ரூ. 14 ஆயிரம் செலவாகிறது. ஆனால், Gold ETF முறையில் நாம் கையில் இருக்கும் ரூ. 500 முதல் முதலீட்டை தொடங்கலாம்.

அதனால், சேமிப்பு பணம் முழுவதையும் தங்கத்தில் மட்டும் முதலீடு செய்யாமல், எதற்காக முதலீடு செய்கிறீர்கள், எவ்வளவு காலத்திற்கு முதலீடு செய்யப் போகிறீர்கள், எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் ?என்பதைப் பார்த்து முடிவு செய்வது நல்லது.

குறிப்பு: இது பொதுவான தகவல் மட்டுமே. முதலீட்டு முடிவுக்கு முன் SEBI-பதிவு செய்யப்பட்ட நிதி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

V
Vishnupriya
தங்க சேமிப்பு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Price: ஒரே நாளில் ரூ.2360 குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?
Recommended image2
Toxic Collection: 200 கோடி கிளப்பை நெருங்கும் யாஷ்! பாக்ஸ் ஆபிஸில் டாக்ஸிக் காட்டும் அதிரடி
Recommended image3
Organic Farming: ரூ.83 லட்சம் கூகுள் வேலைக்கு டாடா! இயற்கை விவசாயம் செய்யும் இன்ஜினியர்!
Related Stories
Recommended image1
Gold Price: ஒரே நாளில் ரூ.2360 குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் என்ன?
Recommended image2
Bitcoin vs Gold : பிட்காயினா? தங்கமா? எது அதிக லாபம் தரும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved