MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Gold Rate Today (September 29): மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை.! எப்பதான் குறையும்?!

Gold Rate Today (September 29): மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை.! எப்பதான் குறையும்?!

தங்கம் விலை மீண்டும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் ₹85,600-ஐ தாண்டியுள்ளது. உலக பொருளாதார நிச்சயமற்ற தன்மை, மத்திய வங்கிகளின் கொள்முதல், அமெரிக்க வட்டி விகித குறைப்பு எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 29 2025, 09:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
மீண்டும் தங்கம் விலை உச்சம்.!
Image Credit : Pexels

மீண்டும் தங்கம் விலை உச்சம்.!

தங்கம் விலை தாறுமாறாக ஏறிவருவதால் நடுத்தர மக்களும், அடித்தட்டு மக்களும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த வார இறுதியில் கொஞ்சம் இறங்கி இருந்த தங்கம் இன்று மீண்டும் மேல் நோக்கி ராக்கெட் வேகத்தில் செல்கிறது. அதேபோல் வெள்ளி விலையும் புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது.

23
இன்றைய தங்கம் விலை நிலவரம்.!
Image Credit : Social Media

இன்றைய தங்கம் விலை நிலவரம்.!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 10 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 480 ரூபாய் அதிகரித்து 85,600 ரூபாயாக உள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதே இதற்கு காரணமாக தங்க நகை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ பார்வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயாக உள்ளது.

Related Articles

Related image1
தொழில் பல மடங்கு பெருகணுமா? லிங்க்டுஇன்-ன இப்படி யூஸ் பண்ணுங்க பணம் கொட்டும்!
Related image2
தீபாவளி முதலீடு: தங்கத்தில் போடலாமா? பங்குகளை வாங்கலாமா?
33
விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்
Image Credit : Pexels

விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்

அதேபோல் மதுரை, கோவை, தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்களில் ஆபரணத்தங்கத்தின் விலை 10 ஆயிரத்து 700 ரூபாயாக உள்ளது. தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுவதால் விலை ஏற்ற இறக்கத்திற்கு காத்திருக்காமல் கையில் பணம் இருந்தால் அதனை தங்கத்தில் முதலீடு செய்வதை நடுத்தர வர்க்கத்தினர் வாடிக்கையாக கொண்டிருப்பதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கத்தின் விலை உயர்வுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, உக்ரைன் மற்றும் காசா போர்கள், அமெரிக்காவில் பணவீக்கம் (2.7%), ட்ரம்பின் வர்த்தகப் போர் அறிவிப்புகள் ஆகியவை முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி திருப்பியுள்ளன.  

மத்திய வங்கிகள், குறிப்பாக இந்தியா, சீனா, துருக்கி போன்ற நாடுகள், தங்கள் டாலர் சேமிப்பை தங்கமாக மாற்றி, 2025-ல் 1,000 டன்னுக்கு மேல் வாங்கியுள்ளன. இது உலக தங்க விநியோகத்தில் 25% அதிகரிக்க காரணமாக உள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தைக் குறைக்கும் (90% வாய்ப்பு) சூழலில், தங்கத்தின் ஈர்ப்பு அதிகரிக்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு (1 USD = ₹85-க்கு மேல்) மற்றும் இந்தியாவில் பண்டிகை கால தேவை, இறக்குமதி வரி, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவையும் விலை உயர்வுக்கு உந்துதலாக உள்ளன. எதிர்காலத்தில், 2025 இறுதிக்குள் தங்கம் ஒரு அவுன்ஸுக்கு $3,700-$4,000, இந்தியாவில் பவுனுக்கு ₹1 லட்சம் தாண்டலாம். 2026-ல் $4,000-$4,200 வரை உயர வாய்ப்புள்ளது. இந்த உயர்வு தற்காலிகமல்ல; பொருளாதார அச்சுறுத்தல்கள் தொடரும் வரை தங்கம் புல் மார்க்கெட்டில் (bullish) இருக்கும். முதலீட்டுக்கு தங்க ETF அல்லது சான்றிதழ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Related Stories
Recommended image1
தொழில் பல மடங்கு பெருகணுமா? லிங்க்டுஇன்-ன இப்படி யூஸ் பண்ணுங்க பணம் கொட்டும்!
Recommended image2
தீபாவளி முதலீடு: தங்கத்தில் போடலாமா? பங்குகளை வாங்கலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved