MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • காலையிலேயே தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரூ.2640 குறைந்தும்.. வாங்க தயங்கும் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?

காலையிலேயே தங்கம் கொடுத்த இன்ப அதிர்ச்சி! ரூ.2640 குறைந்தும்.. வாங்க தயங்கும் பொதுமக்கள்! என்ன காரணம் தெரியுமா?

சர்வதேச பதற்றங்களால் உயர்ந்த தங்கம் விலை, தற்போது சவரனுக்கு ரூ.2,640 வரை குறைந்துள்ள போதிலும், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் நகை வாங்கத் தயங்குகின்றனர். 

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 21 2026, 10:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
போர் பதற்றம்
Image Credit : Asianet News

போர் பதற்றம்

தங்கம் வெள்ளி இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டி நகைப்பிரியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் காரணமாக கிடு கிடுவென விலை உயர்ந்து வந்தது. போர் பதற்றம் காரணமாக விலை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 13ம் தேதி முதல் தங்கம் விலை அதிரடியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்றும் தங்கம் சவரனுக்கு ரூ.2640 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

25
நேற்று தங்கம் விலை
Image Credit : Asianet News

நேற்று தங்கம் விலை

நேற்று நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,950க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,11,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

Related Articles

Related image1
ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?
Related image2
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியானது.. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறப்பு?
35
இன்று சரசரவென குறைந்த தங்கம்
Image Credit : Pixabay

இன்று சரசரவென குறைந்த தங்கம்

இந்நிலையில் இன்றைய (மார்ச் 21) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,640 குறைந்து ரூ.1,08,960ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.330 குறைந்து ரூ.13,620ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 14,858ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 118,864ஆக விற்பனையாகிறது.

45
வெள்ளி விலை
Image Credit : Asianet News

வெள்ளி விலை

வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.250க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.250,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

55
தேர்தல் நடத்தை விதிகள் அவதி
Image Credit : Asianet News

தேர்தல் நடத்தை விதிகள் அவதி

ஆனால் தங்கம், வெள்ளி விலை குறைவை நகை பிரியர்கள் கொண்டாட முடியவில்லை. அதற்கான காரணம் என்னவென்றால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000க்கு மேல் ரொக்கப் பணத்தை எடுத்துச் செல்ல முடியாது. இதனால் திருமணங்கள் மற்றும் விசேஷங்களுக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்கள் பெரும் தொகையை எடுத்துச் செல்ல அஞ்சி வருகின்றனர். இத்தகைய கெடுபிடிகளால் நகை கடைகளில் விற்பனை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தங்கம்
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்
தங்க விலை
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே நாளில் ரூ.22 உயா்ந்த டீசல் விலை.. பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் அதிரடி உயர்வு..
Recommended image2
நாடு முழுவதும் திடீரென உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை..! ரூ.2.35 வரை உயர்த்திய நிறுவனங்கள்..
Recommended image3
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்.! இனி தொட்டதுக்கெல்லாம் அபராதம்.! ஏப்ரல் 1 முதல் அமலாகும் புதிய கட்டணங்கள்.!
Related Stories
Recommended image1
ஹேப்பி நியூஸ்.! பள்ளி கல்லுரிகளுக்கு ஏப்ரல் 1ம் தேதி விடுமுறை.! அப்படினா.. பொதுத்தேர்வு எப்போ?
Recommended image2
1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு.. முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியானது.. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் எப்போது திறப்பு?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved