- Home
- Business
- கதறும் தங்க நகைப்பிரியர்கள்.!ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?
கதறும் தங்க நகைப்பிரியர்கள்.!ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?
இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதால், அதன் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சமீபத்தில் சவரன் ரூ.62,000ஐத் தாண்டியது, பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு விலை உயர்ந்தாலும், நேற்று சற்று குறைந்த நிலையில் இன்று சரசரவென அதிகரித்துள்ளது.

ஜெட் வேகத்தில் மீண்டும் உயர்ந்த விலை.! ஒரு கிராமுக்கே இவ்வளவு அதிகரிப்பா.?
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. இதன் காரணமாகவே மற்ற நாடுகளை விட இந்தியாவில் அதிகளவு தங்கத்தை வாங்குகிறார்கள். திருமணங்கள், விஷேச நாட்களில் அதிகளவு தங்க ஆபரணங்களை அணிய மக்கள் விரும்புவார்கள்.
இந்த நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக 60ஆயிரத்தை கடந்த தங்கம் விலை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி வரலாற்றில் முதல் முறையாக சவரனுக்கு ரூ.62,000 என்ற விலையைத் தாண்டியது.
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் 2025
2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி தரும் ஆண்டாக அமைந்துள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலை ஜெட் வேகத்தில் உயர்கிறது. நேற்று அமெரிக்க வர்த்தக துவக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து உயர்வு பாதையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது
இந்திய ரூபாய் மதிப்பு சரிவு
அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பும் நேற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாய் மதிப்பு குறையும் போது, தங்க இறக்குமதி விலை உயரும். இதன் காரணமாக உள்நாட்டு தங்க விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது இன்று சரசரவென உயர்ந்துள்ளது.
தங்கம் விலை அதிகரிப்பு
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட கடந்த சனிக்கிழமை மட்டும் காலையிலும் மாலையிலும் இரண்டு முறை தங்கத்தின் விலை உயர்ந்தது. அதன் படி, காலையில் கிராமுக்கு 15 ரூபாயும் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.61,960க்கு விற்பனை செய்யப்பட்டது. மாலையில் மீண்டும் உயர்ந்தது கிராமுக்கு 45 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 62ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய தங்கம் விலை என்ன.?
இதனால் வரும் நாட்களும் தங்கத்தின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு சற்று மகிழ்ச்சி கொடுக்கும் வகையில் நேற்று தங்கத்தின் விலை குறைந்தது. அதன் படி கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 7,705 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61ஆயிரத்து 640 ரூபாய்க்கு தங்கம் விற்பனையானது.
இன்று தங்கத்தின் விலையானது மீண்டும் கடுமையான உயர்வை சந்தித்துள்ளது. அதன் படி ஒரு கிராமுக்கே 105 ரூபாய் உயர்ந்து 7810 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரனுக்கு 840 ரூபாய் உயர்ந்து 62ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.