கதறும் நகைப்பிரியர்கள்.! மீண்டும் அதிகரித்த தங்கம் விலை.! ஒரு சவரன் இவ்வளவா.?
தங்கத்தின் மீதான அதிகரித்த ஆர்வம் மற்றும் விலை உயர்வால் மக்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகின்றனர். . 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
gold rate
தங்கத்தில் முதலீடு
தங்கத்தின் மீதான ஆர்வம் காரணமாக இந்திய மக்கள் அதிகளவு தங்கத்தை வாங்கி வருகிறார்கள். தங்கத்தின் விலை அதிகரிப்பதால் தற்போதே முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற காரணத்தால் அதிகமாக மக்கள் தங்கத்தை வாங்குகிறார்கள். அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. வரும் நாட்களில் தங்கம் ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
gold investment
அவசர தேவைக்கு தங்க நகைகள்
மேலும் தங்க நகைகள் கைவசம் இருப்பது அவரச தேவைக்கு பெரும் அளவில் உதவியாக உள்ளது. மருத்தும், திருமணம், கல்வி போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு தங்கத்தை உடனடியாக விற்கவோ அடமானம் வைக்கவோ முடியும். எனவே அவரச காலத்திற்கு உதவும் நண்பனாக தங்கம் உள்ளது. மேலும் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு எட்டா கனியாகவே தங்கம் மாறிவிடும் நிலை உருவாகி வருகிறது.
gold jewellery
நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
இதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு தொடக்கமே நகைப்பிரியர்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை ஜனவரி 17ஆம் தேதி சென்னையில் கிராமுக்கு 60 ரூபாய் உயர்ந்து 7450ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து 59,600ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. எனவே புதிய உச்சமான 60ஆயிரம் ரூபாயை தொட்டு விடும் என கருதப்பட்டது.
gold rate today
இன்றை தங்கம் விலை என்ன.?
ஆனால் சற்று நிம்மதி அளிக்கும் வகையில் ஜனவரி 18ஆம் தேதி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்தது. இதனையடுத்து ஒரு கிராம் 7,435 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 59,480ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று தங்க நகை சந்தை விடுமுறை காரணமாக தங்க விலையில் மாற்றமின்றி விற்பனையானது.
Gold rate
உயர்ந்தது தங்கம் விலை
இன்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து 7,450 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து 59ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.