பொங்கல் பரிசாக குறைந்தது தங்கம் விலை.! சந்தோஷத்தில் நகைப்பிரியர்கள்
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் அளவிற்கு விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் ஒரு சவரன் இரண்டு லட்சத்தை தொடும் என பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தநிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது
தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. இதன் காரணமாக நகைக்கடைகளில் எப்போதும் கூட்டம் கூட்டமாகவே காணப்படுகிறது. குறிப்பாக திருமண நிகழ்வுகள், விஷேச நாட்களில் தங்க ஆபரணங்களை அணிய மக்கள் விரும்புவார்கள். தங்கள் பெண் குழந்தைகளின் திருமண சேமிப்பாகவும் தங்கத்தை மக்கள் வாங்கி வருகிறார்கள்.
தங்கத்தில் முதலீடு செய்ய மக்கள் எப்போதும் விரும்புவார்கள் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளிலேயே தங்கத்தின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 10ஆண்டுகளில் மட்டும் ஒரு சவரனுக்கு 40ஆயிரம் ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் தங்கத்தை அதிகளவு வாங்கியவர்களுக்கு ஜாக்பாட் தான். ஏனென்றால் தற்போது ஒரு சவரன் 60ஆயிரம் ரூபாயை தொட்டுள்ளது.
மேலும் தங்கத்தின் விலையானது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சவரன் இரண்டு லட்சத்தை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் தொடும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல தங்கத்தின் விலையானது 2025ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 ரூபாய் அளவிற்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது.
Gold rate
நேற்று வாரத்தின் முதல் நாள் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன் படி ஒரு கிராம் 25 ரூபாய் உயர்ந்து 7340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு 200 ரூபாய் அதிகரித்து 58ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்று தங்கத்தின் விலையானது கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 7330 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 58,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.