- Home
- Business
- அப்பாடா! ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்! வாங்க இதுதான் சரியான சான்ஸ்! விட்டுடாதீங்களே மக்களே!
அப்பாடா! ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்! வாங்க இதுதான் சரியான சான்ஸ்! விட்டுடாதீங்களே மக்களே!
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில் இன்று சரசரவென குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அப்பாடா! ஒரே நாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம்! வாங்க இதுதான் சரியான சான்ஸ்! விட்டுடாதீங்களே மக்களே!
தங்கம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. குறிப்பாக தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.
தங்கம் விலை
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இந்திய பங்குச்சந்தை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில், அதன் பாதிப்பு தங்கம் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை வரலாறு காணாத வகையில் சவரன் ரூ.63,000ஐ தாண்டியது. இதனால் நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்றைய தங்கம் விலை
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.63,920-க்கு விற்பனையானது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.7,890-க்கு விற்பனையானது.
தங்கம் விலை
இன்றைய (பிப்ரவரி 15) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.63,120-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.7,890-க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 8,607-ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.68,856-ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையே நீடிக்கிறது. கிராம் வெள்ளி ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.108,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.