- Home
- Business
- இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ரூ.56 ஆயிரமாக குறையுமா? - துள்ளிக்குதிக்கும் இல்லத்தரசிகள்!
இந்தியாவில் ஒரு சவரன் தங்கம் ரூ.56 ஆயிரமாக குறையுமா? - துள்ளிக்குதிக்கும் இல்லத்தரசிகள்!
முகூர்த்த நாட்கள் நெருங்கும் வேளையில் தங்கம் விலை உயர்ந்தாலும், அடுத்த இரண்டு மாதங்களில் 15% வரை விலை சரியும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். உலக சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார காரணிகள் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தங்கத்தை காத்திருந்து வாங்கலாமே!
இந்தியாவில் முகூர்த்த நாட்கள் தொடங்கவுள்ளதால் ஆபரணத்தங்கத்தின் விலை ஏறுமுகம் காட்ட தொடங்கியுள்ளது. தேவை அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும் அடுத்த இரண்டு மாதங்களில் மிகப்பெரிய விலை வீழ்ச்சி இருக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது 15 சதவீதம் வரை சரிவு இருக்கும் என்பதால் திருமணத்தை தாண்டி, தங்கத்தில் முதலீடு செய்வோர் காத்திருக்கலாம் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். உலக சந்தைகளில் நிலவும் பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் மாறி வரும் பொருளாதாரக் கட்டமைப்புகள், தங்கத்தின் விலையை நேர்மறை மற்றும் எதிர்மறை பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருகின்றன எனவும் அவர்கள் கூறுகின்றனர்.
தங்கத்தின் தற்போதைய நிலை
டெல்லி சந்தையில் 24 காரட் தூய தங்கத்தின் விலை தற்போது (ஜிஎஸ்டி தவிர) 10 கிராமுக்கு ரூ.98,500 ஆக உள்ளது. இது வரலாற்று அளவிலான உச்சமான விலையாகும். கடந்த ஆண்டு மட்டும் தங்க விலை 34% உயர்வைக் கண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கால கணிப்பு – 15% சரிவு
தங்கத்தின் விலை டாலர் மதிப்பில் வருகிற இரண்டு மாதங்களில் 12% முதல் 15% வரை குறையக்கூடும் என பிரபல முதலீட்டு நிறுவனம் Quant Mutual Fund, கூறியுள்ளது. இது நடைமுறையாக வந்துவிட்டால், இந்திய சந்தையில் 24 காரட் 10 கிராம் தங்கம் விலை ரூ. 85,000 க்கும் கீழே வீழக்கூடும்.
ஒரு சவரண தங்கம் ரூ.56,000 வரை வீழ்ந்துவிடும்
அமெரிக்காவின் Morningstar நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த பொருளாதார நிபுணர் ஜான் மில்ஸ், “தங்க விலை எதிர்வரும் சில ஆண்டுகளில் 38% வரை சரியக்கூடும்” என தெரிவித்துள்ளார். இதுவே நிஜமாகுமாயின், இந்தியாவில் ஒரு சவரண தங்கம் ரூ.56,000 வரை வீழ்ந்துவிடும்.
ஏன் விலை சரிகிறது? முக்கிய காரணங்கள்
கடந்த சில மாதங்களில் தங்கம் மிக உயர்நிலைக்கு சென்றுவிட்டது. இந்த உச்சத்தைத் தொடர்ந்து பங்குசந்தை போன்ற மற்ற முதலீட்டு வாய்ப்புகளுக்கு முதலீட்டாளர்கள் திரும்புகின்றனர். தங்கத்தின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவு அதிகரித்துள்ளதால் சந்தையில் சப்ளை அதிகமாகியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் வட்டி விகிதங்களை உயர்த்தும் சாத்தியக்கூறு அதிகமாகியுள்ளது. இது தங்கத்தை பற்றிய முதலீட்டுக் கவர்ச்சியை குறைக்கும். இந்தியா புலியன் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் (IBJA) தகவல்படி, கடந்த 15 நாட்களில் நகை விற்பனை 30% குறைந்துள்ளது. விலை உயர்வால் பொதுமக்கள் விலகியுள்ளனர்.டிரம்ப் மீண்டும் சீனாவுடன் வர்த்தக சுங்கக் கொள்கையில் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால், உலக சந்தையில் குழப்பம் அதிகரித்துள்ளது.
முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
தங்கத்தின் விலை குறைவதற்கான சாத்தியங்கள் உள்ளாலும், நடுத்தர மற்றும் நீண்டகால முதலீட்டிற்குத் தங்கம் நம்பகமானதாகவே இருக்கும் என்றும் உங்கள் முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் ஒரு சதவீதம் நிச்சயமாக தங்கத்திற்காக ஒதுக்கப்பட வேண்டும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் வலுவாக இருந்தால், வட்டி விகிதங்கள் குறையும் என்கிற எதிர்பார்ப்பு குறையும் எனவும் இது தங்கத்தின் விலையை பாதிக்கக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.